தெலுங்கு பிக் பாஸில் தமிழ் போட்டியாளரை டார்கெட் செய்யும் நாகர்ஜுனா.! வலுக்கும் எதிர்ப்புகள்.!

0
42506
nagar

கடந்த இரண்டு ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. தமிழை போலவே ஹிந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு போன்ற பல மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் தெலுங்கிலும் பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வருகிறது.

இதில் தெலுங்கில் இரண்டு சீசன்கள் இதுவரை முடிந்துள்ள நிலையில் தற்போது மூன்றாவது சீசன் நடைபெற்று வருகிறது . தெலுங்கில் முதல் சீசனை ஜூனியர் NTR தொகுத்து வழங்கி வந்தார். அவருக்கு நல்ல வரவேற்பு, ரசிகர்களும் அதிகம் என்பதால் சம்மந்தப்பட்ட சானல் முன்னேற்றம் கண்டது. இதனால் இரண்டாவது சீசனிலும் அவரையே கமிட் செய்ய திட்டமிட்டனர். ஆனால், அந்த சமயம் என் டி ஆருக்கு தேதி கிடைக்காததால் நடிகர் நாணியை இரண்டாம் சீசனின் தொகுப்பாளராக ஒப்பந்தம் செய்த்தனர்.

- Advertisement -

ஆனால், முதல் சீசனில் என் டி ஆர் நிகழ்ச்சியை விறுவிறுப்பாக கொண்டுசென்றது போல நானியால் கொண்டு செல்ல முடியவில்லை. இதனால் TRP ரீதியாக ரீதியாக சானல் ஆட்டம் கண்டது. இதனால் தற்போது ஒளிபரப்பாகி வரும் மூன்றாவது சீசனை தெலுங்கில் சூப்பர் ஸ்டார் நடிகரான நாகர்ஜூனாவை வைத்து தொகுத்து வழங்கி வருகின்றனர். தற்போது தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸை விட தெலுங்கு பிக் பாஸின் மூன்றாவது சீசன் படு மும்மரமாக நடைபெற்று வருகிறது.

சொல்லப்போனால் தற்போது தமிழில் ஒளிபரப்பாகி பிக் பாஸ் நிகழ்ச்சியை விட தெலுங்கில் நாகர்ஜுனா தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி படு சுவாரசியமாக சென்று கொண்டு வருகிறது. அதற்கு முக்கிய காரணமே, தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியை இதில் போட்டியாளர்களுக்கு மிகவும் கடுமையான டாஸ்க்குகள் கொடுக்கபட்டு வருகிறது. இதனால் தமிழ் ரசிகர்கள் மத்தியில் தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சி கவனிக்கப்பட்டு வந்தது.

-விளம்பரம்-

இந்த சீசனில் தமிழ் சினிமாவில் சேர்ந்த பிரபல நடன இயக்குனரான பாபா பாஸ்கரும் கலந்து கொண்டுள்ளார். சொல்லப்போனால் இங்கே எப்படி சாண்டி மாஸ்டர் பிக் பாஸ் வீட்டை கலகலப்பாக வைத்துக்கொண்டு இருக்கிறாரோ தெலுங்கு பிக் பாஸ் வீட்டில் பாபா பாஸ்கர் மிகவும் கலப்பாக பிக் பாஸ் வீட்டை வைத்து வருகிறார். இந்த நிலையில் கடந்த ஞாயிற்று கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் நாகர்ஜுனா பாபா பாஸ்கரை வேண்டுமென்றே டார்கெட் செய்து அவரது புகழை குறைக்க வேண்டுமென்றே தேவையில்லதா குறும் படம் ஒன்றை போட்டு காண்பித்ததாக விமர்சனங்கள் வலுத்துள்ளது.

கடந்த வார இறுதி எபிசோடில் சில குறும் படம் மூலம் பிக் பாஸ் போட்டியாளரான பாபா பாஸ்கரில் ஒருவரைக் குற்றம் சாட்டியதற்காக நடிகர் நாகர்ஜுனா இப்போது சமூக ஊடக பயனர்களின் கோபத்தைகாட்டி வருகின்றனர். அந்த வீடியோக்களில் பாபா பாஸ்கர் அவர் பரிந்துரைத்ததைப் பற்றி விவாதித்தார். சிவா ஜோதியை ஏன் பரிந்துரைத்தீர்கள் என்று அவரது ஹவுஸ்மேட் ஒருவர் வருண் அவரிடம் கேட்டபோது, ​​பாபா பாஸ்கர் அவரை பரிந்துரைக்க பல சரியான காரணங்கள் இருப்பதாகக் கூறினார். ஆனால் இதே கேள்வியை இன்னொரு ஹவுஸ்மேட் ஸ்ரீமுகி அவரிடம் கேட்டபோது, ​​பாபா, சிவா ஜோதி வீட்டின் வலுவான போட்டியாளர் என்றும், அவரை வெளியேற்ற முடியாது என்றும் கூறினார். அவர் பரிந்துரைக்கப்பட்டதற்கு அவளைத் தேர்ந்தெடுப்பதற்கு இதுவே காரணம் என்று அவர் மீண்டும் கூறினார்.

ஆனால், பாபா பாஸ்கர் புறம் பேசுவது போல நாகர்ஜுனா அவருக்கு குறும்படம் ஒன்றை போட்டு காண்பித்து அவரை புண்படுத்துமாறு பேசியுள்ளார். ஆனால், பாபா பாஸ்கர் பேசிய விஷயத்தில் தவறு இல்லை என்றும் பிக் பாஸ் குழு வேண்டுமென்றே அவரை டார்கெட் செய்வதாகவும், நாகர்ஜூனாவும் தெலுங்கு போட்டியாளருக்கு ஆதரவாக பேசுகிறார் என்றும் சமூக வலைதளத்தில் ரசிகர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement