கடந்த சில வருடமாகவே சோசியல் மீடியாவில் தாடி பாலாஜியின் குடும்ப பிரச்சனை தலை விரித்து ஆடி கொண்டு இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான காமெடி நடிகராக இருந்தவர் தாடி பாலாஜி. இவரின் குடும்ப பிரச்சனை ஊருக்கே தெரிந்தது. நடிகர் தாடி பாலாஜியின் மனைவி நித்யா. இவர்களுக்கு போஷிகா என்ற மகள் உள்ளார். தாடி பாலாஜியும், நித்யாவும் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் இணைந்து நடனம் ஆடிய போது தான் இவர்களுக்கு இடையே இருந்த குடும்ப பிரச்சினை வெளிவந்தது. பிறகு இவர்கள் இருவரும் தொடர்ந்து போலீஸ், கோர்ட்டு என இவர்களுடைய குடும்ப பிரச்சனை வெளியுலகத்தில் வந்துகொண்டிருந்தது.
அதோடு சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தியது. பிறகு கணவன், மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் தான் தமிழில் நடைபெற்ற பிக் பாஸ் இரண்டாவது சீசனில் இவர்கள் இருவரும் போட்டியாளர்களாக கலந்து கொண்டார்கள். பிக் பாஸ் சீசன் இறுதியில் இவர்கள் இருவரும் சேர்ந்து விட்டதாக காட்டப்பட்டது. ஆனால், இன்று வரை தாடி பாலாஜி தனியாகவும், நித்யா தன் மகள் போஷிகா உடன் தனியாக தான் வாழ்ந்து வருகிறார். தற்போது நித்யா மழலையர் பள்ளி ஒன்றை நடத்தி வந்தார்.
நித்யா செய்த வேலைகள்:
ஆனால், அதற்கு முன் நித்யா ஐடி துறையில் ஒரு பெரிய கம்பெனியில் பணிபுரிந்தவர். அதற்கு பிறகு ஒரு பிரபலமான மருத்துவமனையில் எச்.ஆர்.அதிகாரியாக இருந்தவர். பாலாஜியை கல்யாணம் செய்த பிறகு தான் நித்யா வேலையிலிருந்து விலகி விட்டார். மேலும், நித்யா கணவரை விட்டு பிரிந்தாலும் தன்னுடைய சொந்தக் காலில் நின்று தன் குழந்தையை காப்பாற்றி வருகிறார். இவர்கள் இருவரும் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தாலும் இருவருக்கும் அடிக்கடி பிரச்சனை வெடித்தது.
பாலாஜி மீது புகார் கொடுத்த நித்யா:
கடந்த 2020 ஆம் ஆண்டு பாலாஜி மீது நித்யா காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.அதில் மது அருந்துவிட்டு பாலாஜி தகாத வார்த்தைகளில் திட்டியதோடு வீட்டிற்கு வந்து கண்ணாடியை உடைத்தாகவும், கொலை மிரட்டல் விடுப்பதாகவும் கூறியிருந்தார். ஆனால், இந்த குற்றச்சாட்டை மறுத்தார் பாலாஜி. இப்படி இவர்களுடைய குடும்ப பிரச்சனை எப்போது முடியும் என்று தெரியவில்லை.
பாலாஜி மனைவி நித்யா கூறியது:
தாடி பாலாஜி பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்த போது தனது மகள் குறித்து கண் கலங்கி பேசி இருந்தார். அப்போது தன் மகளிடம் சேர்ந்து வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார் நித்யா, அதில் பாலாஜி என்னுடைய கேரக்டரை ரொம்ப அசிங்க படுத்தி கொண்டிருக்கிறார்.என்னை பற்றி ரொம்ப ரொம்ப தப்பா பேசினால் நான் கண்டிப்பாக அவர் என்னை அசிங்க அசிங்கமாக திட்டிய வாய்ஸ் மெசேஜை வெளியிடுவேன் என்றும் கூறி இருந்தார்.
ஆபாசமாக மெசேஜ் செய்தவருக்கு நித்யா பதில் :
இந்த நிலையில் இந்த வீடியோவை கண்ட பிறகு இன்ஸ்ட்டா வாசி ஒருவர் ‘பாலாஜி பாவம், ஓ*** உன்கூட வாழ்றதுக்கு சும்மா இருக்கலாம் ‘ என்று மெசேஜ் செய்துள்ளார். இதற்கு நித்யா ”உன்னை நினைத்தால் பாவமாக இருக்கிறது. உன்னுடைய அம்மாவோ, சகோதரியோ, மகளோ இப்படி பேசினால், அல்லது அவர்களிடம் இப்படி யாரவது பேசினால் பொறுத்துக்கொள்வாயா ? மற்றவர்களை திட்டுவதை விட்டுவிட்டு வேற எதாவது உருப்படியாக வேலைய பாரு என்று பதில் அளித்துள்ளார். அதற்கு அந்த நபரும் தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டுள்ளார்.