இறுதியில் அதர்வாவுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட தர்ஷன். சொன்ன மாதிரியே அண்ணன் தம்பி மாதிரி தான் இருக்காங்க.

0
48429
tharshan
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்தஇரண்டு ஆண்டுகளாக ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3 வது சீசன் நிகழ்ச்சி சமீபத்தில் தான் வெற்றிகரமாக திருவிழா போன்று கொண்டாடப்பட்டு முடிவடைந்தது. மேலும், இந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மத்த ரெண்டு சீசன் களை விட வேற லெவல்ல பட்டையை கிளப்பியது. அதுமட்டும் இல்லாமல் தமிழில் ஒளிபரப்பான இந்த பிக்பாஸ் 3 நிகழ்ச்சிக்கு இந்தியாவில் மட்டுமல்லாமல் உலக அளவில் ரசிகர்கள் உள்ளார்கள்.

-விளம்பரம்-
View this post on Instagram

With @atharvaamurali and @linksayup Anna

A post shared by Tharshan Thiyagarajah (@tharshan_shant) on

வழக்கம் போல இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயம் இல்லாத பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அந்த வகையில் இலங்கையில் இருந்து கலந்து கொண்ட தர்ஷன் தியாகராஜனும் ஒருவர். தர்சன் மாடலாக மட்டும் இல்லாமல் பல்வேறு விளம்பர படங்களிலும் நடித்து உள்ளார். அதிலும் இவர் போத்தீஸ் விளம்பரம் தூள் என்று சொல்லலாம். அதோடு தமிழில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான “வேறென்ன வேண்டும்” என்ற படத்தில் தர்சன் நடித்து உள்ளார். மேலும், இந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் நடந்த எல்லா போட்டிகளிலும் தர்ஷன் நன்றாக விளையாடி வந்தார்.

இதையும் பாருங்க : அடையாளம் தெரியாமல் மாறிப்போன காதல் சந்தியா. இதான் அவர்களின் குடும்பம்.

- Advertisement -

அதுமட்டும் இல்லாமல் பிக் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களும், மக்களும் தர்சன் தான் பிக் பாஸ் சீசன் 3ன் டைட்டில் வின்னர் என்றும் கூறி வந்தார்கள். ஆனால்,யாரு கண்ணுபட்டுச்சி என்று தெரியல, என்ன மாயமோ? மந்திரமோ? தெரியல திடீரென்று தர்சனை பிக் பாஸ் போட்டியில்இருந்து எலிமினேட் செய்தார்கள். பின் ரசிகர்கள் இதை ஏற்று கொள்ளாமல் பல சர்ச்சைகளை சமூக வலைத்தளங்களில் எழுப்பி வந்தார்கள். தர்ஷன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது இவரை பலரும் அதர்வாவை போல உள்ளார் என்று கூறினார்கள்.

-விளம்பரம்-

அதே போல பேட்டி ஒன்றில் பங்கேற்ற தர்ஷன், என்னிடம் பல பேர் அதர்வாவை போல இருக்கிறார்கள் என்று கூறுகிறார்கள். நான் அதர்வாவை சந்தித்து ஒரு புகைப்படம் ஒன்றை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறி இருந்தார். இந்த நிலையில் பொது நிகழ்ச்சியில் அதர்வாவை சந்தித்த தர்ஷன் அவருடன் ஒரு புகைப்படம் ஒன்றையும் எடுத்துக்கொண்டுள்ளார். அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் அதர்வாவும் நீங்களும் அண்ணன் தம்பி போல இருக்கிறீர்கள் என்று கமன்ட் செய்து வருகின்றனர்.

Advertisement