பெண் புரட்சி, பெண்ணியம் பற்றி எல்லாம் பேசும் அனிதாவை பாருங்க – மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்திய வீடியோ.

0
534
anitha
- Advertisement -

மிழில் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தொடங்கி ஏழு வாரத்தை கடந்து உள்ளது. போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் பயங்கரமாக விளையாடி வருகிறார்கள். இந்த நிகழ்ச்சியில் இதுவரை சுரேஷ் சக்ரவர்த்தி, சுஜா வருணி, ஷாரிக், அபிநய்,தாடி பாலாஜி வெளியேறிய நிலையில் வனிதா தாமாக வெளியேறினார். இதை தொடர்ந்து கடந்த வாரம் சினேகன் வெளியேறினார். நிகழ்ச்சியில் ஏற்கனவே வெளியேறிய சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் Kpy சதிஷ் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக நுழைந்தனர். அதே போல விக்ரம் பட ஷூட்டிங்கால் கமல் வெளியேறியதை தொடர்ந்து தற்போது சிம்பு இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

-விளம்பரம்-

இது ஒரு பக்கம் இருக்க,அல்டிமேட் நிகழ்ச்சியில் அனிதாவின் பெயர் தான் தொடர்ந்து டேமேஜ் ஆகி வருகிறது. 4ஆம் சீசனில் பெண்கள் சுதந்திரத்தை பற்றி எல்லாம் பேசி கைதட்டல் வாங்கினார் அனிதா. அதே பாணியை இந்த சீசனிலும் கடைபிடித்து வந்தாலும் அது அவருக்கே வினையாக முடிந்துவிட்டது. தான் விளையாடுவதை விட்டுவிட்டு மற்றவர்கள் என்ன செய்கிறார்கள்? மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்? என்று தான் அனிதா அதிகம் யோசித்து கொண்டு இருக்கிறார்.

- Advertisement -

பெயரை கெடுத்து வரும் அனிதா :

அதே போல 4ஆம் சீசனில் இவர் சுமங்கலி பஞ்சாயத்து குறித்து பேசி காமலிடமே கைதட்டலை வாங்கினார். ஆனால், இந்த சீசனில் இருக்கும் அனிதாவே வேறு.இந்த சீசனில் அனிதா பல முறை டபுள் மீனிங்கில் பேசி சர்ச்சையில் சிக்கி வருகிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கூட பிக் பாஸின் குழந்தை என் வயிற்றில் வளருகிறது என்று பேசி பலரை முகம் சுளிக்க வைத்தார். அனிதாவின் நடவடிக்கைகளை பார்த்த ரசிகர்கள் பலர் இவரா? இப்படி எல்லாம் பேசுகிறார்கள் என்று அதிர்ச்சியடைந்தனர்.

கொச்சையாக பேசிய அனிதா :

கடந்த சில தினங்களுக்கு முன்னர் கூட நிரூப் மற்றும் அனிதா பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது நிரூப், அந்த ரெண்டு பாட்டில எடுத்து உள்ளே வை என்று அனிதாவிடம் நிரூப் சொல்ல அதற்கு அனிதா சூ* வைப்பாங்க. நான் ஏன் வைக்கணும், அது யார் பாட்டிலோ அவங்கல வைக்க சொல்லு போடா என்று படு கொச்சையாக பேசி இருந்தார். அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வந்தது.

-விளம்பரம்-

அபிராமியை அரைவிட நினைத்த நிரூப் :

இப்படி ஒரு நிலையில் அனிதா மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். அதில் நிரூப், அபிராமி பற்றி பேசிக்கொண்டு இருந்த போது ‘அபி எல்லாம் பேசும் போது அவ மூஞ்சிலேயே சப்புன்னு வைக்கணும் போல இருந்துச்சி’ என்று பேசியதை கேட்ட அனிதா, அதை கேட்டு அவரை அப்படி எல்லாம் பேசக்கூடாது என்று சொல்லாமல் அவருடன் சேர்ந்து சிரித்துக்கொண்டு இருக்கிறார். அதே போல தாமரை மற்றும் அனிதா பேசிய வீடியோ ஒன்றும் வைரலாகி வருகிறது.

ஐயோ, மைக்ல கேட்டு இருப்பார்களே :

கால தூக்கி வச்சி எப்படி அக்கா தூங்க முடியும் என்று அனிதா கேட்க, அதற்கு தாமரை வேற எப்படி நெனச்ச என்று டபுள் மீனிங்கில் கேட்க அதனை கேட்டும் சிரித்தார் அனிதா. மேலும், ஐய்யயோ நான் பேசினது மைக்ல கேட்டு இருப்பாங்களே என்று கூறியுள்ளார் அனிதா. இப்படி தொடர்ந்து டபுள் மீனிங்கில் பேசி வரும் அனிதாவை நெட்டிசன்கள் பலரும் புரட்சி பேசும், பெண்ணியம் பேசும் அனிதாவை பாருங்க என்று விமர்சித்து வருகின்றனர்.

Advertisement