அட்ரா சக்க, வனிதா மீதே புகார் அளித்த சூர்யா தேவி – காவல் நிலையத்துக்கு சென்ற வனிதா.

0
39618
- Advertisement -

பிக்பாஸ் வனிதா மற்றும் பீட்டர் பவுலின் திருமண விஷயம் தான் கடந்த சில வாரமாக சமூக வலைத்தளத்தில் வைரலாக பேசப்பட்டு வரும் ஒரு விஷயமாக இருந்து வருகிறது.ரசிகர்களை தாண்டி வனிதாவின் திருமண விஷயத்தில் பல்வேறு பிரபலங்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதில் முக்கியமாக தயாரிப்பாளர் ரவீந்திரன் தொடர்ந்து வனிதா குறித்து பேட்டி அளித்து வருகிறார். அதேபோல தேவி என்பவர் தனது யூடியூப் சேனலில் தினமும் வனிதாவை திட்டி தீர்த்து வீடியோவை பதிவிட்டு வருகிறார்.

-விளம்பரம்-

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரவீந்திரன் மீதும் சூர்யா தேவி மீதும் வனிதா புகார் அளித்துள்ளார். மேலும், சூர்யா தேவி குறித்து பேசிய வனிதா, அவள் ஒரு கஞ்சா வியாபாரி என்றும் அவளுக்கு ஏற்கனவே இரண்டு முறை விவாகரத்து ஆகிவிட்டது என்றும் கூறியுள்ளார் வனிதா. மேலும், அவர் மீது இன்னும் இரண்டு நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் கூறியுள்ளதாக அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார் வனிதா.

இதையும் பாருங்க : வனிதாவுக்கு ஆதரவு தெரிவித்த குக்கு வித் கோமாளி பிரபலம் – வெளுத்து வாங்கியுள்ள ரசிகர்கள்.

- Advertisement -

மேலும், வனிதாவின் வழக்கறிஞர் பேசுகையில், அவள் ஒரு கஞ்சா வியாபாரி. அவள் வீட்டில் கிலோ கணக்கில் கஞ்சா இருக்கிறது. அவள் செய்யும் தப்பை மறைக்க தான் தற்போது இது போன்று எல்லாம் பேசி வருகிறாள். காவல்துறையே அவள் மீது நடவடிக்கை எடுக்க பயப்படுகிறது என்று கூறியிருந்தார். இந்நிலையில் வனிதா விஜயகுமார் தன்னைப் பற்றி அவதூறாக பேசி வருவதாக சூர்யா தேவி, வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்திருக்கிறார்.

இரு தரப்பிலும் பரபரப்பு புகார் - காவல் நிலையத்தில் நடிகை வனிதாவிடம் விசாரணை

வனிதா விஜயகுமார், சூர்யா தேவி என்பவர் மீது கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையிலும், நடிகை வனிதா விஜயகுமார் மீது சூரியா தேவியால் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையிலும் இரண்டு தரப்பினரிடமும் வடபழனி அனைத்து மகளிர் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். இதனால் நடிகை வனிதா விஜயகுமார் மற்றும் சூரியா தேவி ஆகிய இருவரும் வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரணைக்காக ஆஜராகி உள்ளனர்.

-விளம்பரம்-

Advertisement