பீட்டரின் பிரேக்கப் வீடியோவிற்கு பின் வனிதா வெளிட்ட முதல் வீடியோ – அதுவும் யாருக்காகனு பாருங்க.

0
3576
vanitha

நடிகையும் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளருமான வனிதாதான் அவ்வப்போது சமூக வளைதளத்தில் விவாதப் பொருளாக மாறி விடுகிறார். பிரபல நட்சத்திர தம்பதிகளான விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் மகளான வனிதாவிற்கு ஏற்கனவே 2 முறை திருமணம் ஆகி பின்னர் அந்த இரண்டு திருமணம் விவாகரத்தில் முடிந்தது அனைவரும் அறிந்த விஷயம் தான். அதன் பின்னர் இவர் நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர் உடன் காதலில் இருந்து வந்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ள இருந்த நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட மனஸ்தாபம் பிரிந்துவிட்டார்கள். அதன் பின்னர் தனது இரண்டு மகள்களுடன் தனியாக வசித்து வந்த வனிதா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பீட்டர் பவுல் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் இருவரின் திருமண விவகாரத்தில் எண்ணெற்ற பிரச்சனைகள் வெடித்தது. ஆனால் அதையெல்லாம் மீறி வனிதா, பீட்டர் பவுலை திருமணம் செய்துகொண்டார். இந்த பிரச்சனை ஒரு சில மாதங்கள் ஓடியது மேலும், விரைவில் இருவரும் சட்டப்படி திருமணம் செய்து கொள்வதாகவும் இருந்தனர். இதனிடையே வனிதா பீட்டர் பவுலுடன் சந்தோசமாக வாழ்ந்து வந்தார். அடிக்கடி பீட்டர் அவருடன் இணைந்து புகைப்படத்தை போடுவது, ஒன்றாக ஊர் சுற்றுவது, பேட்டி கொடுப்பது என்று மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வந்த வனிதாவிற்கு பீட்டர் பால் ஒரு பேரிடி கொடுத்திருந்தார்.சமீபத்தில் பீட்டர் பவுல் பிரிந்துவிட்டதாக நடிகை வனிதா வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

- Advertisement -

அதில் பேசிய அவர் பீட்டர் பவுலுக்கு குடி மற்றும் புகை பிடிக்கும் பழக்கம் இருந்ததாகவும் திருமணத்திற்கு பின்னர் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் அவருக்கு 10 15 லட்சத்திற்கு மேல் செலவு செய்து அவரது உயிரை காப்பாற்றியதாகவும் கூறியிருந்தார். மேலும் அவரால் குடிப் பழக்கம் மற்றும் புகை பிடிக்கும் பழக்கத்தை விட முடியவில்லை என்றும் சமீபத்தில் தனது பிறந்த நாளுக்காக கோவா சென்றிருந்த பொழுது அவர் அங்கே குடிப்பதை பார்த்து தனக்கு ஆத்திரம் வந்ததாகவும் கூறி இருந்தார் வனிதா. அதன் பின்னரும் அவர் குடிப்பழக்கத்தை விடாததால் அவரை பிரிந்து விட்டதாக கூறிய வனிதா முதல் மனைவியான எலிசபெத்திடம் மன்னிப்பும் கேட்டார். மேலும் நான் பாதியில் வந்தவள் பாதியிலேயே சென்று விடுகிறேன் என்றும் கண்ணீர் மல்க கூறியிருந்தார் வனிதா.

வனிதாவின் புதிய வீடீயோவை காண இங்கே க்ளிக் செய்யவும்

அதேபோல பீட்டர் பிரிந்த சோகத்தில் இருக்கும் வனிதா இனி கொஞ்சம் நாள் தான் சமூகவலைதளத்தில் வரமாட்டேன் என்றும் கூறியிருந்தார். ஆனால் இவர் பிரபல தனியார் யூடியூப் சேனல் ஒன்றிற்கு நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வருகிறார்.இப்படி ஒரு நிலையில் நடிகை வனிதா பீட்டர் பவுல் பிரிந்த சோகத்தை பகிர்ந்து வீடியோவை அடுத்து முதல் முறையாக இன்னொரு வீடியோவை பதிவிட்டிருக்கிறார். அதாவது தன்னுடைய வழக்கறிஞர் தன்னுடைய தொழிலில் 25 வருடங்களை கடந்து உள்ளதால் அவருக்கு வாழ்த்துக்களை கூறி இருக்கிறார் வனிதா. இவரின் வழக்கறிஞரான ஸ்ரீதர் ஏற்கனவே மீராமிதுன் வழக்கறிஞராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல இவர் பல ஆண்டுகளாக வனிதாவின் நண்பராகவும் அவரின் தனிப்பட்ட வழக்கறிஞராகவும் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement