பிக் பாஸில் இருந்து வெளியேற போகிறாரா ஜோவிகா – END,Fail போன்ற வார்த்தைகளுக்கு புதிய அர்த்தம் சொல்லி வனிதா போட்ட பதிவு.

0
456
- Advertisement -

ஜோவிகா எலிமினேஷன் குறித்து வனிதா போட்டு இருக்கும் பதிவு தான் தற்போது நெட்டிசன்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 60 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, சுரேஷ், ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள்.

-விளம்பரம்-

இதுவரை நிகழ்ச்சியில் இருந்து அனன்யா, பவா, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி,பிரதீப், ஐஷு, கானா பாலா, பிராவோ, அக்ஷயா ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர். பின் கடந்த வாரம் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக அனன்யா, விஜய் வர்மா பிக் பாஸ் வீட்டிற்கு வந்து இருக்கிறார்கள். மேலும், இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல போட்டியாளர்கள் கலந்துகொண்டு இருக்கின்றனர். அந்த வகையில் வனிதாவின் மகள் ஜோவிகாவும் ஒருவர்.

- Advertisement -

நிகழ்ச்சியில் ஜோவிகா:

ஆரம்பத்தில் ஜோவிகா நன்றாக தான் விளையாடி வந்தார். ஆனால், நாட்கள் செல்ல செல்ல மாயா மற்றும் பூர்ணிமாவுடன் இணைந்து இவர் மற்றறவர்களை மரியாதை இல்லாமல் நடத்தி இருக்கிறார். குறிப்பாக இவர் அர்ச்சனாவை வயது வித்யாசம் பார்க்காமல் வாடி போடி என்று சொன்னதோடு அவரது மன உலைச்சலை கேலி செய்யும் வகையில் மெடிக்கல் ரூம் போ என்று எல்லாம் தரக்குறைவாக பேசி இருந்தார். அதே போல டாஸ்க்கில் கூட இவர் சரியாக பங்கேற்பது கிடையாது. இதுவரை இவருக்கு இரண்டு முறை கேப்டன் ஆகும் டாஸ்க்கில் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அந்த டாஸ்க்கில் இவர் தோற்றார்.

நெட்டிசன்கள் விமர்சனம்:

மேலும், ஜோவிகா, மாயா டீமுடன் இணைந்து ஆடக் கூடாது என்பதை சூசகமாக சொல்லும் வகையில் வனிதா ‘சிங்கம் சிங்கிளாதா இருக்கும்’ என்று வாசகம் உள்ள டி- ஷர்ட் ஒன்றை அனுப்பி வைத்தார். ஆனாலும், அதையும் புரிந்துகொள்ளாமல் ஜோவிகா, மாயா மற்றும் அவரது டீமில் தான் இன்னுமும் இருந்து வருகிறார். தற்போது ஜோவிகா அந்த கேக்கில் இருந்து பிரிந்து வந்த பின்னும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு சுவாரசியம் எதுவும் கொடுக்கவில்லை . வனிதாவிற்கு எந்த அளவிற்கு விமர்சனம் இருந்ததோ அதே அளவிற்கு ஜோவிகாவிற்கும் பல விமர்சனங்கள் குவிந்துகொண்டு தான் வருகிறது.

-விளம்பரம்-

நாமினேஷனில் ஜோவிகா:

அந்த வகையில் ஜோவிகா, பிக் பாஸ் வீட்டில் பெரும்பாலும் சாப்பிடுவது, தூங்குவது, வழுக்கி விழுவது என்று தான் இருந்து வருகிறார். இதனால் சமூக வலைதளத்தில் ட்ரோல்களுக்கு அதிகமாகி இருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் இந்த வாரம் குறைந்த வாக்குகளை பெற்று நாமினேஷனில் ஜோவிகா இடம் பெற்றிருக்கிறார். இதனால் ஜோவிகா வெளியேறுவாரா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி இருக்கின்றார்கள். இந்த நிலையில் இது தொடர்பாக வனிதா பதிவு ஒன்று போட்டு இருக்கிறார்.

வனிதா பதிவு:

அதில் அவர், நீங்கள் தோல்வியுற்றால் முயற்சியை எப்போதும் கைவிடாதீர்கள். ஏனென்றால் கற்றலுக்கு தோல்வி என்பது முதல் படி. அதே போல் முடிவு என்பது உண்மையான முடிவு அல்ல. முடிவு என்பது “தோல்வி எப்பொழுதும் சாகாது” என்று பொருள். நீங்கள் ‘நோ’ என்கிற பதிலைப் பெற்றால் ‘நோ’ என்பது ‘அடுத்த வாய்ப்பு’ என்பதை மனதில் கொள்ளுங்கள் என்று கூறி இருக்கிறார். இதைப் பார்த்த நெட்டிசன்கள் பலருமே, ஜோவிகா வெளியேற போவதால் தான் வனிதா இப்படி பதிவு போட்டு இருக்கிறாரா? என்று குழப்பத்தில் இருக்கிறார்கள்.

Advertisement