வடிவேலுவின் பஞ்சாயத்து காமெடியில் வந்த திடீர் கண்ணய்யா என்ன ஆனார்? அவரின் இந்த பெயருக்கு காரணம் என்ன தெரியுமா?

0
454
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் பிரபலமான நகைச்சுவை நடிகராக இருப்பவர் வடிவேல். படங்களில் இவருடைய நகைச்சுவை எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல பாராட்டை பெற்றிருக்கிறது. இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இவருடைய நகைச்சுவை குழுவில் இணைந்து நடித்த பிரபல நடிகர்களும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

அந்த வகையில் ‘வரும் ஆனா வராது’ என்ற வசனத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டவர் கண்ணையா. இவரை திடீர் கண்ணையா என்று தான் சொல்வார்கள். இவர் சென்னையை சேர்ந்தவர் தன்னுடைய இளம் வயதிலேயே இவர் சென்னை பெரம்பூரில் உள்ள ரயில்வே கோச் ஆலையில் வேலை செய்து கொண்டிருந்தார். அதன் பின்னர் இயக்குனர் பாலச்சந்தர் இயக்கத்தில் உருவாகியிருந்த அவள் ஒரு தொடர்கதை என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

- Advertisement -

திடீர் கண்ணையா படங்கள்:

இந்த படத்தின் மூலம் இவருக்கு மக்கள் மத்தியிலும் நல்ல பெயர் கிடைத்தது. அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். குறிப்பாக , இவர் அபூர்வ ராகங்கள், பிரியா, பட்டணத்து ராஜாக்கள், வெள்ளை ரோஜா, நீதியின் மறுபக்கம், இரவு பூக்கள், கூட்டுப்புழுக்கள், மனக்கணக்கு, நெத்தியடி, வணக்கம் வாத்தியாரே, வைதேகி கல்யாணம், எல்லைச்சாமி, பொறந்த வீடா புகுந்த வீடா, நல்லதே நடக்கும் என பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார்.

திடீர் கண்ணையா திரைப்பயணம்:

மேலும், கவுண்டமணியுடன் இணைந்து நடிகர் கண்ணைய்யா அவர்கள் பல காமெடி காட்சிகளில் நடித்தும் இருக்கிறார். அதற்கு பிறகு தான் இவர் வடிவேலுவின் குழுவில் சேர்ந்து நகைச்சுவையில் நடிக்க தொடங்கினார். தற்போதும் இவருடைய நகைச்சுவை எல்லாம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்கப்பட்டு தான் வருகிறது. அதுமட்டுமில்லாமல் இவருடைய சில காமெடி காட்சிகள் எல்லாம் மீம்ஸ் டெம்ப்ளேட்டுகளாக சோசியல் மீடியாவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

-விளம்பரம்-

திடீர் கண்ணையா குடும்பம்:

மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கிலும் சில படங்களில் நடித்திருக்கிறார். இவர் கடைசியாக 2008 ஆம் ஆண்டு வெளிவந்த இனி வரும் காலம் என்ற படத்தில் தான் நடித்திருந்தார். அதுக்கு பின் இவர் நடிப்பில் படம் வெளியாகவில்லை. இதனிடையே திடீர் கண்ணையா அவர்கள் ராஜேஸ்வரி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ரமேஷ், சித்ரா என்ற இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள்.

திடீர் கண்ணையா இறப்பு:

அதோடு இவருக்கு திடீர் என பெயர் வர காரணம் படங்களில் இவர் நடித்துக் கொண்டிருக்கும் போது திடீரென்று தோன்றும் வசனங்கள் எல்லாம் பேசி நடிப்பார். இதனால் தான் இவருடைய பெயருக்கு முன்னால் திடீர் கண்ணையா என்று சேர்க்கப்பட்டது. இவருடைய தனித்துவ நடிப்பால் தமிழ் திரை உலகில் தனக்கென ஒரு முத்திரையை பதித்திருக்கிறார். பின் உடல் நலக்குறைவால் 2013 ஆம் ஆண்டு நவம்பர் 17ஆம் தேதி அன்று மாரடைப்பால் திடீர் கன்னையா இறந்தார். அப்போது இவருக்கு 77 வயது. இவருடைய மறைவு மத்தியில் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது.

Advertisement