மீண்டும் பிக் பாஸ் வீட்டில் வனிதா – இன்னும் யார் யார் எல்லாம் இருக்காங்க பாருங்க.

0
269
vanitha
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியின் OTT வெர்ஷன் பற்றிய விவரங்கள் வெளியாகி இருக்கிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் 93 நாட்களை கடந்து மிகவும் பரபரப்பாக என்று கொண்டு இருக்கிறது. கடந்த வாரம் வரை 12 பேர் வெளியேறி இருக்கும் நிலையில் பிரியங்கா, தாமரை செல்வி, ராஜு, பாவனி, சஞ்சீவ், சிபி, அமீர், நிரூப் என்று 8 பேர் மட்டும் இருந்தனர். இதில் நேற்றய நிகழ்ச்சியில் சஞ்சீவ் வெளியேறினார். இன்னும் 7 பேர் மட்டும் இந்த நிகழ்ச்சி இன்னும் இரண்டு வாரத்தில் முடிய இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் அடுத்த பிக் பாஸ் பற்றிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

-விளம்பரம்-

பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சி தான் விஜய் டிவிக்கு ஒரு Trp கிங்காக இருந்து வந்தது இதுவரை பிக் பாஸ் வரலாற்றில் இல்லாத அளவிற்கு, படு மோசமான TRP ரேட்டிங்கை கடந்த வாரம் ஒளிபரப்பான பிக் பாஸ் 5 நிகழ்ச்சி பெற்றுள்ளதாம். அதிலும், கடந்த வாரம் ஒளிபரப்பான பிக் பாஸ் 5 நிகழ்ச்சி, 2.75 வரை மட்டுமே பெற்றுள்ளதாம்.இது பிக் பாஸ் வரலாற்றில் மோசமான TRP ரேட்டிங் என்று கூறப்படுகிறது. 

- Advertisement -

15 வருடங்களை தாண்டிய இந்தி பிக் பாஸ் :

தமிழைப் போல பிக்பாஸ் நிகழ்ச்சி தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என்று பல்வேறு மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் இந்தியில்தான் 15 வருஷங்களுக்கு மேல் கடந்து சென்றுகொண்டே இருக்கிறது. சொல்லப்போனால் இந்தி bigboss தான் மற்ற மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஹிந்தி பிக் பாஸை பார்த்து தான் மற்ற மொழிகளி

ல் காப்பி அடிப்பார்கள்.

-விளம்பரம்-

இந்தியில் ஒளிபரப்பான பிக் பாஸ் OTT :

அந்த வகையில் இந்த ஆண்டு இந்தியில் பிக்பாஸ் நிகழ்ச்சி Ottயில் ஒளிபரப்பானது. அதாவது தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் வேறு இந்த பிக் பாஸ் வேறு. Voot Ottயில் ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியை கரன் ஜோகர் தொகுத்து வழங்கி இருந்தார். மேலும், இந்த நிகழ்ச்சியில் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர்கள் 13 பேர் கலந்துகொண்டனர். மொத்தம் 42 நாட்கள் மட்டுமே இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பானது.

24 மணி நேர லைவ் :

மேலும், இது Voot Ottயில் மட்டுமே ஒளிபரப்பானது என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் Voot சந்தாதாரகர்கள் இந்த நிகழ்ச்சியை 24 மணி நேரமும் கண்டுகளிக்கலாம். அதாவது பிக் பாஸ் வீட்டை 24 மணி நேரமும் பார்க்க முடியும். தற்போது இதே கான்சப்டில் இந்த நிகழ்ச்சியில் தமிழிலும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், தமிழில் ஹாட்ஸ்டாரில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது.

மீண்டும் வனிதா :

இதில் தமிழ் பிக் பாஸில் கலந்துகொண்ட சீசன் 1 முதல் 5 வரையிலான போட்டியாளர்கள் கலந்துகொள்ள உள்ளனர். ஆனால், ஏற்கனவே பிக் பாஸ் பட்டத்தை வென்றவர்களுக்கு இந்த நிகழ்ச்சியில் வாய்ப்பு இல்லை. அதே போல இந்த நிகழ்ச்சியையும் கமல் தான் தொகுத்து வழங்க இருக்கிறார். இதுவரை வனிதா, ஜூலி, அனிதா சம்பத் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உறுதியாகி இருக்கிறார்களாம். மேலும் , இந்த நிகழ்ச்சி 70 நாட்கள் ஒளிபரப்பாகும் என்றும் கூறப்படுகிறது.

Advertisement