அன்னிக்கி திட்டிடிட்டு இன்னிக்கு நல்லா நடிக்கர – தந்தைக்கு வாழ்த்து சொன்ன வனிதாவை கேலி செய்த ரசிகர். வனிதா கொடுத்த பதிலடி.

0
989
vanitha

பழம் பெரும் சினிமா தம்பதிகளான விஜய குமார்- மஞ்சுளா விற்கு 4 பெண் மற்றும் 1 ஆண் பிள்ளைகள் இருப்பது நமக்கு தெரியும்.விஜயகுமார் கடந்த 1969 ஆம் ஆண்டு முத்துக்கன்னு என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் 1976 யில் நடிகை மஞ்சுளாவை திருமணம் செய்து கொண்டார்.விஜயகுமாரின் முதல் மனைவியான முத்துக்கனுக்கு பிறந்தவர் தான் அருண் விஜய். மேலும், இவருடன் அனிதா , கவிதா என்ற இரண்டு சகோதரிகள் பிறந்தனர்.

இதில், வனிதா விஜய் நடிப்பில் வெளியான சந்திரலேகா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் அதன் பின்னர் ராஜ்கிரனின் மாணிக்கம் படத்தில் நடித்த வனிதா பின்னர் திருமணம் செய்து கொண்டு சினிமாவில் நடிப்பதை நிறுத்தி விட்டார். வனிதாவுக்கும் விஜயகுமார் குடும்பத்திற்கும் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக வனிதாவை விஜயகுமார் குடும்பத்தினர் அனைவருமே ஒதுக்கி வைத்து விட்டார்கள். இதனால் தனது இரண்டு மகள்களுடன் தனியாகத்தான் வசித்து வருகிறார் வனிதா.

- Advertisement -

இருப்பினும் தனது குடும்பத்தினர் மீது தற்போதும் பாசம் காண்பித்து வரும் வனிதா அடிக்கடி தனது குடும்பத்தினர் குறித்து பதிவுகளை பதிவு செய்து வருகிறார். அந்த வகையில் கடந்த 29 ஆம் தேதி நடிகர் விஜயகுமாரின் பிறந்தநாளை முன்னிட்டு நடிகை வனிதா தனது தந்தையுடன் சிறுவயதில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை பதிவிட்டு தனது தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைக் கூறியிருந்தார்.

வழக்கம் போல வனிதாவின் இந்த வாழ்த்தையும் அவரது குடும்பத்தினர் யாரும் கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில் விஜயகுமாருக்கு வாழ்த்து சொன்ன வனிதாவை ட்விட்டர் வாசி ஒருவர்,சில வருடங்களுக்கு முன்னர் உங்கள் தந்தை குறித்து நீங்கள் நினைத்த அனைத்து பேட்டியும் நினைவிருக்கிறது தினை விதைத்தவன் தினை அறுப்பான்.எந்த நிலைமையிலும் பெற்றோர்களைப் பற்றி தப்பாக பேசினவங்க ஒருநாளும் வாழ்ந்ததா சரித்திரமே இல்லை. இப்போது நீங்கள் நன்றாக நடிக்கிறீர்கள் என்று கேலி செய்து இருந்தார்.

-விளம்பரம்-

இதற்கு பதில் அளித்த வனிதா, அது நான் சந்தித்த என்னுடைய பிரச்சனை மேலும் எனது குடும்பத்தினர் பற்றி பேச எனக்கு அனைத்து உரிமையும் இருக்கிறது. நான் தற்போது நன்றாகத்தான் இருக்கிறேன். நல்லாவே வாழ்ந்து கொண்டிருக்கிறேன். ஆண்டவனே என் பக்கம் தான் இருக்கிறான். எனவே மூடிட்டு உன் வாழ்க்கையே பாரு என்று பதிலடி கொடுத்திருக்கிறார் வனிதா.

Advertisement