விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிறைவடைந்தது. இந்த சீசனில் ரியோ ராஜ், ஜித்தன் ரமேஷ் ரம்யா பாண்டியன், அறந்தாங்கி நிஷா, ஷிவானி நாராயணன், சனம் ஷெட்டி, சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாலாஜி முருகதாஸ் ,வேல்முருகன், அனிதா சம்பத், கேப்ரில்லா, ஆஜித்,சுசித்ரா, ரேகா என்று 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டு இருந்தனர். இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி,சுசித்ரா, சம்யுக்தா, ஜித்தன் ரமேஷ், நிஷா, சனம் ஷெட்டி ,அர்ச்சனா,அனிதா,ஆஜீத் ஆகிய என்று 11 பேர் வெளியேறி இருந்த நிலையில் இறுதி வாரத்தில் ஷிவானி வெளியேற்றப்பட்டார்.
அதே போல இறுதி போட்டிக்கு ஒரு சில நாள் மட்டுமே இருந்த நிலையில் கேப்ரில்லா 5 லட்சத்தை எடுத்துகொன்டு பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். இறுதி போட்டியில் ஆரி, பாலாஜி, ரியோ, சோம் மற்றும் ரம்யா ஆகிய 5 பேர் மட்டும் இருந்த நிலையில் ரம்யா மற்றும் சோம் வெளியேற்றப்பட்டனர். இறுதியில் ரியோ மூன்றாம் இடத்தையும் பாலாஜி இரண்டாம் இடத்தையும் ஆரி முதல் இடத்தையும் பிடித்தார்.
முதல் இடத்தை மட்டும் பிடித்ததோடு மட்டுமல்லாமல் பெருவாரியான வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார் ஆரி. பிக் பாஸ் 4 சீசனில் இறுதி வாரத்தில் மொத்தம் 31,27,72,000 வாக்குகள் பதிவாகி இருந்தது. இதில் முதல் இடம் பிடித்த ஆரிக்கு 16.5 கோடி வாக்குகளும். பாலாஜிக்கு 6.14 கோடி வாக்குகளும் கிடைத்திருந்தது. அதாவது இரண்டாம் இடத்தை பிடித்த பாலாஜியை விட 10 கோடி வாக்கு வித்தியாசத்தில் ஜெயித்துள்ளார் ஆரி. இப்படி ஒரு நிலையில் ஆரி மட்டும் வெளியேறி இருந்தால் ஒருவேளை நான் பட்டத்தை வென்று இருப்பேன் என்று கூறியுள்ளார் வேல் முருகன்.
பின்னணி பாடகரான வேல் முருகன், இந்த சீசனில் கலந்து கொண்டு இருந்தார். ஆனால், அவர் ரேகாவை தொடர்ந்து இரண்டாம் போட்டியாளராக வெளியேறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்றுள்ள வேல் முருகன் பேசியுள்ளதாவது, ஒரு வேலை ஆரி வெளியேறி இருந்தால் நான் தான் வெற்றி பெற்று இருப்பேன் என்று வேடிக்கையாக கூறியுள்ளார். மேலும், பாலாஜி, கொஞ்சம் கோபத்தை அடிக்கி பொறுமையாக இருந்திருந்தால் அவர் வெற்றி பெற்று இருப்பார் என்று கூறியுள்ளார் வேல் முருகன்.