தமிழில் அனைவரும் எதிர்பார்த்த பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 75 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, சுரேஷ், ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள்.
#Vichithra #Mani Convo,
— Aadhavi (@Classicparktv) December 14, 2023
Song la vichu ku thirupthi illa#BiggBossTamil7 #BiggBossTamil pic.twitter.com/sKRb2tOFna
இதுவரை இதில் பவா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி,பிரதீப், ஐஷு, கானா பாலா, அக்ஷயா, பிராவோ. ஜோவிகா ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர். இந்த முறை நிகழ்ச்சியில் பல மாற்றங்கள் செய்து இருக்கிறார்கள். குறிப்பாக, இந்த முறை இரண்டு பிக் பாஸ் வீடுகள் இருக்கிறது. மேலும், கடந்த சில வாரமாகவே பிக் பாஸ் வீடு அனல் பறந்து கொண்டு இருக்கிறது. முதல் நாளில் இருந்தே போட்டியாளர்கள் மத்தியில் கலவரம் தொடங்கி விட்டது.
டான்ஸ் மாரத்தான் டாஸ்க்:
மேலும், இந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனில் விஷ்ணு, கூல் சுரேஷ், தினேஷ், நிக்சன், அனன்யா, அர்ச்சனா ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டு இருக்கிறார்கள். பின் இந்த வாரம் டிக்கெட் டூ பினாலே டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதில் பிக் பாஸ், இரண்டு நபரை தேர்ந்தெடுத்து அவர்கள் போட்டியில் கலந்து கொள்ள கூடாது என்று சொன்னவுடன் எல்லாருமே அர்ச்சனா, விஜய் வர்மாவை தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். பின் நேற்று நிகழ்ச்சியில் டான்ஸ் மாரத்தான் டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கிறது.
#Vichithra was very upset condemning Meenakumari song selection by BB team !#Mani convincing her with good points!#BiggBossTamil7 #BiggBoss7Tamil #BiggBossTamil #BBTamilSeason7
— Ganesh (@Ganesh_Gansi) December 14, 2023
Copyright – Disney+Hotstar pic.twitter.com/NNSGVLEuMj
போட்டியாளர்கள் கெட்டப்:
இதில் ஒவ்வொரு போட்டியாளர்களும் தங்களுடைய கதாபாத்திரமாகவே மாறி நடனமாடி இருக்கிறார்கள். குறிப்பாக விசித்ரா, தினேஷ், அர்ச்சனா ஆகியோர் தங்களுடைய கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருந்தார்கள். மேலும், நேற்று யாரும் எதிர்ப்பாக்காத வகையில் முதல் மிட் வீக் பிக் எவிக்ஷன் நடைபெற்று இருக்கிறது. அதில் நாமினேட் ஆனவர்கள் தினேஷ், கூல் சுரேஷ், அனன்யா, அர்ச்சனா, விஷ்ணு, நிக்சன். பின் நிகழ்ச்சியில் இருந்து அனன்யா வெளியேறி இருக்கிறார்.
#BiggBossTamil #BiggBossTamil7 #Poornima #Vichithra
— Mr.Thala-Thalapathy (@MrThalabathi) December 14, 2023
Great Performance by Poornima 😍😍👌👌
Beautiful one by Vichithra 😍😍👌👌
This song is not suited Vichu as much as it did for Poornima, but both nailed it 🔥🔥
Poornima – Killer Moves 👍
Vichithra – Lovely Expressions 👍 https://t.co/zh3U45hANh
விசித்ரா நடனம் ஆடிய பாடல் :
மேலும், நேற்றைய நிகழ்ச்சியில் விசித்ரா- பூர்ணிமா இருவரும் கந்தசாமி படத்தில் வந்த என் பேரு மீனாகுமாரி என்ற பாடலுக்கு நடனம் மாறி இருந்தார்கள். பூர்ணிமா பயங்கர கிளாமராக சூப்பராக நடனம் மாறி இருந்தார். அதேபோல் விசித்ராவும் தனக்கு முடிந்தவரை ஈடு கொடுத்து நடனமாடிருந்தார். இந்த நிலையில் நடனமாடி முடித்த பிறகு விசித்ரா, மணி இடம் உட்கார்ந்து புலம்பி இருக்கிறார். அதில் விசித்திரா, இந்தப் பாட்டு ஏன் போட்டார்கள். இது சரியாக இருக்குமா? வெளியில் எப்படி தெரியும் என்றெல்லாம் புலம்பி இருக்கிறார்.
நடனம் குறித்து மணி சொன்னது:
அதற்கு மணி, நீங்கள் நடனமாடியது சரிதான். இது வந்து ஒரு கேம் ஷோ. மற்றதைப் பற்றி நீங்கள் யோசிக்காதீர்கள். இது வெளியில் தப்பாக தெரியாது. நீங்கள் ஒரு நடிகை. இது ஒரு டான்ஸ் மாரத்தான். டான்ஸ்க்காக அவங்க இந்த மாதிரி பாட்டு செலக்ட் பண்ணி அனுப்புறாங்க. இது வெளியில் தப்பாக எதுவும் தெரியாது. நீங்களும் அந்த மாதிரியான ஓப்பனப்பாகவும் ஆடவில்லை. கரெக்டா சரியான அளவிற்கு தான் என்ன வேணுமோ அது பண்ணி இருக்கிறீர்கள். பார்ப்பதற்கு நன்றாக இருந்தது. நாங்க எல்லாம் என்ஜாய் பண்ணி பார்த்துக் கொண்டிருந்தோம். உங்களை நம்பி இந்த சாங் கொடுத்து இருக்கிறார்கள். நீங்கள் இதைப்பற்றி எல்லாம் தேவையில்லாமல் யோசிக்காதீர்கள் என்று ஆறுதல் கூறியிருக்கிறார் .