‘குழந்தைங்க எல்லாம் பாக்குறாங்க’ – ஷிவின் ஆடை குறித்து பேசிய விக்ரமன். கடுப்பாகி ட்ரெஸ்ஸை தூக்கி எரிந்து ஷிவின் கொடுத்த பதிலடி.

0
617
Shivin
- Advertisement -

ஆடை குறித்து பேசிய விக்ரமனுக்கு சிவின் கொடுத்திருக்கும் பதிலடி தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. அனைவரும் காத்து இருந்த பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி விஜய் டிவியில் தொடங்கி 55 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் இருந்து ஜி.பி.முத்து, மெட்டி சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட், குயின்சி ஆகியோர் வெளியேறி இருக்கிறார்கள். 21 போட்டியாளர்களில் இருந்து 8 போட்டியாளர்கள் போக தற்போது 13 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் விளையாடி வருகின்றனர்.

-விளம்பரம்-

மேலும், இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருப்பவர் விக்ரமன். இவர் விசிக மாநில செய்தி தொடர்பாளர் ஆவார். இவர் திருநெல்வேலியை சேர்ந்தவர். இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். இவர் 2016 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான விண்ணைத்தாண்டி வருவாயா என்ற தொடரில் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த தொடர் முழுக்க முழுக்க காதல் கதையை மையமாகக் கொண்டது. அதற்குப் பிறகு விக்ரமன் விசிக மாநில செய்தி வாசிப்பாளராக களம் இறங்கி இருக்கிறார்.

- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் விக்ரமன்:

தற்போது இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல்முறையாக அரசியல் தொகுப்பாளர்களில் ஒருவரான விக்ரமன் கலந்து கொண்டிருப்பது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. நிகழ்ச்சி தொடக்கத்தில் இருந்து விக்ரமனுக்கு அதிக ஆதரவு ரசிகர்கள் கொடுத்து வந்தார்கள். ஆனால், சில வாரங்களாக விக்ரமன் செய்யும் செயல் ரசிகர்கள் மத்தியில் வெறுப்பை ஏற்றிருக்கிறது. மேலும், இந்த நிகழ்ச்சியில் விக்ரமன் அதிரடியாக மாஸ் காட்டுவார் என்று பலரும் எதிர்பார்த்தார்கள்.

விக்ரமன் குறித்த விமர்சனம்:

ஆனால், இவர் அசீமை தாக்கி கவுண்டர் போட்டு வருகிறார். அசீமை குறி வைத்து தான் விக்ரமன் பிக் பாஸ் வீட்டுக்குள் எந்த ஒரு விஷயத்தையும் செய்யவில்லை. இதனால் சோசியல் மீடியாவில் விக்ரமனை பூமர் அங்கிள் விக்ரமன் என்று தான் ரசிகர்களும் கிண்டல் அடித்து வருகின்றார்கள். இந்த நிலையில் விக்ரமனுடைய வீடியோ ஒன்று வெளியாகியிருக்கிறது. அந்த வீடியோவில், சிவின் இந்த டிரஸ் போட போகிறேன் என்று காண்பிக்கிறார். உடனே, ஏடிகே இந்த டிரஸ் போடாதே? என்று சொல்கிறார். பின் விக்ரமன் என்னங்க இது அநியாயமா? இல்ல இதெல்லாம் குழந்தைகள் பார்க்கிறார்கள். குடும்பத்தோடு எல்லோரும் பார்க்கிறார்கள்.

-விளம்பரம்-

சிவின் கொடுத்த பதிலடி:

இந்த நிகழ்ச்சியில் இந்த மாதிரி ஆடை தேவையா? என்று கேட்கிறார். உடனே சிவின், குழந்தைகள் பார்ப்பதற்கும் ஆடைக்கும் என்ன சம்பந்தம். குழந்தைகளுக்கு எது நல்லது, எது கெட்டது என எல்லாத்தையும் சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும் என்று பதிலடி கொடுத்திருக்கிறார். இப்படி நீதி, நியாயம், பெண்களுக்கு முக்கியத்துவம் என்று பேசும் விக்ரமன் ஆடை குறித்து பேசி இருப்பது இணையத்தில் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. இது குறித்து பலரும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். ஆனால், சிலர் விக்ரமனுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார்கள். அதில் விக்ரமனின் தீவிர ரசிகர் ஒருவர், நீங்க போட்ட ட்விட்டர் பாருங்கள். எவ்வளவு ட்விஸ்ட் பண்ணி போட்டு இருக்கீங்க.

விக்ரமனுக்கு ஆதரவு கொடுத்த ரசிகர்கள்:

இந்த டிரஸ் போட அசிங்கமா இல்லையான்னு அவர் அந்த வீடியோவில் சொல்லி இருக்காரா? அப்படி அவர் சொன்னது உங்களுக்கு மட்டும் கேட்டதா? அவர் அந்த ட்ரெஸ்ஸை போட வேண்டாம் என்று சொல்லவே இல்லை. டிரஸ் போடுவது அவங்க இஷ்டம் தான். ஆனால், பொருத்தமற்ற ட்ரெஸ்ஸை ஒரு நண்பருக்கு பரிந்துரை செய்யலாம் என்று கூறியிருக்கிறார். குழந்தைகள் இந்த நிகழ்ச்சியை பார்க்கிறார்கள். வேறு ஆடை போடுங்கள் என்று சொன்னாரா? பெண்களுக்கு எதிராக பேசுகிறான் என்று அர்த்தமா? இந்த மக்களுக்கு உண்மையில் பிற்போக்கு மற்றும் இடதுசாரி சிந்தனைகள் என்னவென்று தெரியாது. விட்டா சென்சாரே பின்னடைவு என்று சொல்லுவாங்க என்று கூறி வருகிறார்கள்.

Advertisement