சாண்டி மோசமான போட்டியாளர்.! காப்பாற்றபட்டது யார்.! இன்றய நிகழ்ச்சியின் ஹைலைட் இதுதான்.!

0
17881
bigg-boss

சனி மற்றும் ஞாயிறு என்றாலே பிக் பாஸ் ரசிகர்களுக்கு கொஞ்சம் இரட்டிப்பு சந்தோசம் தான். காரணம், கமல் இந்த இரண்டு நாட்களில் போட்டியாளர்களை வச்சி செய்து விடுவார். பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக 61 நாளை நிறைவு செய்துவிட்டது. இத்தனை நாள் கடந்த நிகழ்ச்சியில் இதுவரை எந்த ஒரு சுவாரசியமான டாஸ்க்கும் வைக்கப்படவில்லை. இதுவரை 9 போட்டியாளர்கள் வெளியேறிய நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வெளியேறிய வனிதாவை மீண்டும் வைல்டு கார்டு போட்டியாளராக மீண்டும் கொண்டு வந்துள்ளனர்.

மேலும் இன்னும் இரண்டு வைல்ட் கார்டு போட்டியாளர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வரவுள்ளனர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த வாரம் நடைபெற்ற டாக்கில் சிறந்த போட்டியாளர்களாக தேர்வு செய்யப்பட்ட சேரன், சாண்டி, லாஸ்லியா மூவரில் நேற்று சீட்டுக் குலுக்கிப் போட்டு சேரன் அடுத்த வார தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதையும் பாருங்க : வனிதாவே பயமா இருக்குன்னு சொல்லிட்டாங்கபா.! அப்படி என்ன நடந்துச்சு பாருங்க.!

- Advertisement -

இந்த நிலையில் இன்று சனிக்கிழமை நடைபெற உள்ள சில சுவாரசியமான சம்பவங்கள் பற்றிய அப்டேட் வெளியாகியுள்ளது. கடந்த வாரம் நடைபெற்ற லக்சரி பட்ஜட் டாஸ்கில் மோசமான போட்டியாளர்கள் யாரும் தேர்ந்தெடுக்கப்படவில்லை. எனவே, சேரன், சாண்டியை மோசமான போட்டியாளராக தேர்ந்தெடுத்துள்ளார்.

மேலும், டாஸ்கின் போது கஸ்தூரியை ஆயம்மா, சத்துணவு ஆயா என்றெல்லாம் கலாய்த்ததற்காக சாண்டி மற்றும் கவினை கொஞ்சம் கமல் வறுத்தெடுத்துளளார். இன்றைய தான் கொஞ்சம் அதிகம் ஸ்கொர் செய்துள்ளார். அதே போல இந்த வாரமும் வனிதாவை பேச விடாமல் ரசிகர்கள் கூச்சலிட்டு ஆரவாரம் செய்துள்ளனர். இன்று எலிமினேஷனில் இருந்து யாரும் காப்பற்றப்படவில்லை.

-விளம்பரம்-
Advertisement