எதிர்பாராததை எதிர்பாருங்கள்’ பிக் பாஸில் இருந்து இந்த வாரம் வெளியேறிய ‘A’ எழுத்து போட்டியாளர் – யார் தெரியுமா?

0
433
- Advertisement -

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் ஐந்தாவது வாரத்தில் வெளியேறும் நபர் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தற்போது ஐந்தாவது வாரம் இறுதி கட்டத்தை சென்று கொண்டு இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள்.

-விளம்பரம்-

மேலும், நிகழ்ச்சியில் வாரம் வாரம் ஒருவர் வெளியேறுவது வழக்கம் தான். அந்த வகையில் முதல் வாரத்திலேயே அனன்யா வெளியேறி விட்டார். பின் பவா, தன்னால் இனி நிகழ்ச்சியில் விளையாட முடியாது என்று தாமாகவே வெளியேறிவிட்டார். அதற்கு பிறகு மூன்றாம் வாரம் நடந்த எவிக்ஷனில் மாயா அல்லது பூர்ணிமா ஆகிய இருவரில் யாராவது வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விஜய் வர்மா வெளியேறி இருந்தார். இது பலருக்கும் அதிர்ச்சி தான். பின் நான்காம் வாரம் ஓபன் நாமினேஷன் நடந்தது.

- Advertisement -

Wild கார்டு போட்டியாளர்கள்:

பின் Double Eviction என்று அறிவித்து ஷாக் கொடுத்தார் கமல். அந்த வகையில் கடந்த வாரம் யுகேந்திரன் மற்றும் வினுஷா வெளியேற்றப்பட்டார். மேலும், கடந்த வாரம் 5 Wild கார்டு போட்டியாளர்கள் நுழைந்து இருந்தார்கள். அதில் கானா பாலா, அர்ச்சனா, பிராவோ, தினேஷ் மற்றும் அன்னபாரதி ஆகியோர் பிக் பாஸ் வீட்டிற்கு வந்து இருக்கிறார்கள். 5 Wild Card போட்டியாளர்கள் நுழைந்ததால் பிக் பாஸில் 19 போட்டியாளராக மாறியது. ஆனால், Wild Card போட்டியாளர்கள் நுழைந்ததில் இருந்தே பிக் பாஸ் போட்டியாளர்கள் கொஞ்சம் அப்செட்டில் இருந்து வருகின்றனர்.

நிகழ்ச்சி குறித்த தகவல்:

இதனால் Wild Card போட்டியாளர்களை பிக் பாஸ் வீட்டார் டார்கட் செய்ய துவங்கிவிட்டனர். இந்த வாரமும் பூர்ணிமாவே கேப்டனாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். அதோடு Wild card போட்டியாளராக நுழைந்தவர்களை பிக் பாஸ் வீட்டார், ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்பி இருக்கின்றனர். இவர்களுடன் விசித்திராவும் சென்று இருக்கிறார். மேலும், இவர்களின் என்ட்ரி தங்களுக்கு விருப்பமில்லை என்று பிக் பாஸ் வீட்டில் உள்ள சிலர் கூறி இருந்தனர். அதிலும் குறிப்பாக பூர்ணிமா, ஜோவிகா,மாயா ஆகிய மூவரும் புதிதாக வந்தவர்கள் எங்களை பற்றி எப்படி பேசலாம். கண்டிப்பாக இவர்களை தான் நாங்கள் நாமினேட் செய்யப்போகிறோம் என்று ஓப்பனாக கூறினார்கள்.

-விளம்பரம்-

இந்த வாரம் நாமினேட் பட்டியல்:

இப்படியொரு நிலையில் இந்த வாரம் பாலா, அர்ச்சனா, பிராவோ, தினேஷ், அன்னபாரதி, அக்ஷ்யா, மணி,ஐஷு, மாயா ஆகியோர் நாமினேட் ஆகி இருக்கிறார்கள். பின் Wild Card போட்டியாளர்களை டார்கெட் செய்து விளையாடி இருக்கிறார்கள் பிக் பாஸ் வீட்டார். அதிலும் அர்ச்சனா பேசியதை விமர்சித்து இருந்தார்கள். பல இடங்களில் அர்ச்சனா ஆத்திரம் தாங்க முடியாமல் கதறி அழுது இருக்கிறார். இது ஒரு பக்கம் இருக்க, நிக்சன்- ஐசு காதல் லீலைகள் பயங்கரமாக சென்று கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் இவர்களுடைய காதல் முத்தம் கொடுக்கும் அளவிற்கு சென்றிருந்தது. கண்ணாடி பக்கத்தில் உட்கார்ந்து இருவருமே மாற்றி மாற்றி முத்தம் கொடுத்திருக்கிறார்கள்.

நிகழ்ச்சியை விட்டு வெளியேறும் நபர்:

அதற்குப் பின் கேமரா இல்லாத இடத்தில் முத்தம் கொடுத்த சத்தம் வந்திருக்கிறது. இதனால் இவர்கள் இருவரும் நேரடியாகவே முத்தம் கொடுத்து இருக்கிறார்களா என்று விமர்சனம் எழுந்து இருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் இந்த வாரம் நிகழ்ச்சியை விட்டு வெளியேறும் நபர் குறித்த தகவல் தான் வெளியாகி இருக்கிறது. அதில் குறைந்த வாக்குகள் அடிப்படையில் பட்டிமன்ற பேச்சாளர் அன்ன பாரதி தான் வெளியேற இருப்பதாக கூறப்படுகிறது. இவர் நிகழ்ச்சிக்குள் நுழைந்து ஒரு வாரம் தான் ஆகியிருக்கிறது. இருந்தாலும், இவர் வெளியேறி இருப்பது பலருக்கும் ஷாக் தான்.

Advertisement