ஹாட்டலில் இருந்து அலறி ஒடினேனா ? – பிக் பாஸ் செல்லும் முன்னர் வதந்திக்கு சுச்சித்ரா கொடுத்த விளக்கம்.

0
1492
suchi
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் மூன்றாவது வாரத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது இதுவரை ரேகா மட்டும் வெளியேறி இருக்கும் நிலை இந்நிலையில் கடந்த வாரம் வைல்டு கார்டு போட்டியாளராக பிரபல தொகுப்பாளினியான அர்ச்சனா உள்ளே நுழைந்தார். பொதுவாக வைல்ட் கார்ட் போட்டியாளர் உள்ளே நுழைந்த பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சி கொஞ்சம் சூடு பிடிக்கும். ஆனால் அர்ச்சனா வைல்ட் கார்ட் போட்டியாளரராக உள்ளே நுழைந்த பின்னர் அப்படி எதுவும் பெரிய சம்பவம் நடக்கவில்லை.

-விளம்பரம்-

அதேபோல பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு போட்டியாளர்கள் உள்ளே நுழைந்த ஒரு சில நாட்களிலேயே இரண்டாவது வைல்டு கார்டு போட்டியாளர்கள் நுழைந்து விடுவார்கள். அந்த வகையில் இந்த சீசனில் யார் இரண்டாவது வைல்டுக் கார்டு போட்டியாளராக பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைய போகிறார்கள் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. அந்த வகையில் பிரபல பின்னணி பாடகியான சுசித்ரா இந்த சீசனில் இரண்டாவது வைல்டு கார்டு போட்டியாளராக செல்ல இருக்கிறார் என்ற தகவல் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

- Advertisement -

சுசித்ரா பிக் பாஸ் வீட்டின் இரண்டாவது வைல்ட் கார்டு போட்டியாளராக கலந்து கொள்ள இருப்பதாகவும், அவர் ஒரு நட்சத்திர ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது. இப்படி ஒரு நிலையில் சுசித்ரா, தான் தங்கி இருந்த ஹோட்டலில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன் சுசித்ரா, தங்கி இருந்த அறையில் இருந்து ‘என்னைக் கொலை செய்ய வர்றாங்க, காப்பாத்துங்க’னு கத்திக்கிட்டே ரிசப்ஷனுக்கு ஓடி வந்தாங்கவும் ‘யார், என்ன’னு விசாரிச்சா, யாரோ ரூம் கதவைத் தட்டினதா சொன்னாதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர் கூறியுள்ளாராம்.

இது குறித்து சேனல் தரப்பிற்கு தகவல் தெரிவிக்க, அங்கிருந்து சிலர் வந்து பேசிய பிறகே சமாதானமாகி நள்ளிரவுக்குப் பிறகு தனது அறைக்குத் திரும்பியிருக்கிறார் சுசித்ரா என்று கூறப்படுகிறது. இப்படி ஒரு நிலையில் இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹோட்டலுக்கு உள்ளே இருந்து வெளியில் எடுத்த புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ள சுச்சித்ரா, என்னைப் பற்றி வந்த வதந்திக்காக இந்த பதிவை நான் போடுகிறேன். நான் ஹோட்டல் ரூமில் அலறியதாகவும் நான் வெளியில் ஓடியதாகவும் வந்த வதந்திகளை தயவு செய்து நம்பாதீர்கள். நான் பாதுகாப்பாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறேன். என்னை நன்றாக பார்த்துக் கொள்கிறார்கள். இப்படி ஒரு காட்சிக்கு முன்னால் நான் என்ன குறை கூறப் போகிறேன் என்று பதிவிட்டிருக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement