சென்ராயனை அசிங்கப்படுத்திய யாஷிகா, டேனி..! பதிலடி கொடுத்த சென்ட்ராயன்.!

0
329
Daniel-Bigg-Boss

பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் பெரும்பாலான போட்டியாளர்கள் டேனியை தான் குறை கூறி வருகின்றனர். அவர் கடந்த சில நாட்களாக இவர் செய்து வரும் செயல்களால் மற்ற போட்டியாளர்கள் இவர் மீது கடும் அதிருப்த்தியில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் டேனி செய்த செயலால் பார்வையாளர்களுக்கும் டேனி மீது ஒரு சலிப்பை ஏற்படுத்தியுளளது.

yashika-anand

நேற்று(ஆகஸ்ட் 13) ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் டைனிங் டேபிள் அருகே நின்றுகொண்டு சென்றாயான் அவர்கள் கை, காலில் தேங்காய் எண்ணையை தடவி கொண்டிருந்தார். அப்போது கிட்சனில் இருந்து இதனை கவனித்துக் கொண்டிருந்த டேனி, அவரது அருகில் நின்றுகொண்டிருந்த யாஷிகாவிடம் ‘அவன் எண்ணையை தடவி விட்டு நேரா கிச்சனுக்கு வந்து நான் எதனா வெட்ட சொன்ன அப்படியே வெட்டுவான் பாரு ‘ என்று யாஷிகா காதில் முணுமுணுத்தார்.

அதன் பின்னர் கிட்சனுக்கு வந்த சென்றாயனிடம், மிகவும் எதார்த்தமாக பேசிய டேனி ‘மாப்ள, உன்ன சில்லி தான வெட்ட சொன்ன’ என்று கூறியதும்,அதற்கு சென்றாயன் ‘நீ எடுத்து தான கொடுக்க சொன்ன ‘ என்றார். பின்னர் டேனி ‘சரி வா இப்போ வெட்டித்தா’ என்று கூறினார். சென்றாயான் கை கழுவாமல் அப்படியே வந்து மிளகாயை வெட்டுவார் என்று எதிர்பார்த்தார் டேனி.

Sendrayan

ஆனால், சென்றாயான் மிகவும் சுத்தமாக தனது கைகளை கழுவ சென்றார். இதனை பார்த்து யாஷிகா சிரித்துவிட, முக்குடைந்த டேனி ‘பரவாயில்ல, குட் பாய், குட் பாய் ‘ என்று பல முறை சென்ராயனை பாராட்டினார். டேனி, சென்ராயனை சுத்தமில்லாதவர் என்று யாஷிகாவிடம் காட்டவே வேண்டுமென்றே சென்றாயனை மிளாகாயை வெட்ட சொன்னார். ஆனால், சென்றாயான் , டேனி எதிர்பார்தது போல நடந்து கொள்ளாததால் யாஷிகா முன்பு டேனிக்கு பல்ப் ஆகிவிட்டது. இருப்பினும் டேனி அதை எப்படியோ வெளிக்காட்டாமல் சமாளித்துக் கொண்டார்.

Sendrayan

Big-boss-sendrayan

பிக் பாஸ் வீட்டில் சென்றாயனைதான் மற்ற போட்டியாளர்கள் சிலர் கொஞ்சம் மட்டமாக நினைக்கின்றனர். இந்த நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்தே அவரை தான் பெரும்பாலும் கழிவறை கழுவும் அணியில் அனுப்புகின்றனர். இதனால் சில நாட்களுக்கு முன்னர் சென்ராயனே அந்த விடயத்தை கேட்டு விட்டார்.அதே போல சென்ராயன் கிட்சன் டீமில் என்னுடன் போட்டால் நான் சாப்பிட மாட்டேன், அவர் சுத்தமில்லை என்று மும்தாஜும் ஏற்கனவே கூறியிருந்தார். ஆனால், இத்தனை நாட்கள் சென்றாயானை தனது நெருங்கிய நண்பர் என்று கூறிக்கொண்டிருந்த டேனியும், சென்ராயனின் சுத்தத்தை பற்றி அறிந்து கொள்ள டெஸ்ட் வைத்தது டேனி மீது கொஞ்சம் வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது.