தான் வாங்கிய முதல் சம்பளத்தில் ஏ ஆர் முருகதாஸ் உட்பட அனைவருக்கும் இதை வாங்கி கொடுத்தார் SJ சூர்யா – மாரிமுத்து சொன்ன உண்மை.

0
2288
- Advertisement -

விஜய்யின் குஷி படத்தில் எஸ் ஜே சூர்யா செய்திருக்கும் செயல் குறித்து பிரபல நடிகர் அளித்திருக்கும் பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்பவர் எஸ்.ஜே.சூர்யா. இவர் திரைப்பட நடிகர் மட்டுமல்லாமல் இயக்குனர், திரைக்கதை ஆசிரியர், திரைப்பட தயாரிப்பாளர் என பன்முகங்களை கொண்டவர். ஆரம்பத்தில் இவர் துணை இயக்குனராக தான் பணியாற்றினார். அப்படியே படங்களில் ஒரு சில காட்சியில் நடித்தும் இருக்கிறார் எஸ் ஜே சூர்யா.

-விளம்பரம்-

அதன் பின்னர் அஜித் குமார் நடித்த “ஆசை ” படத்தில் துணை இயக்குனராக இருந்த போது அஜித்திடம் கதை கூறி இருக்கிறார். இவர் இயக்கிய வாலி திரைப்படத்தின் மூலம் தான் இயக்குனராக சினிமா உலகில் அறிமுகமாகி இருந்தார். தனது முதல் படத்திலேயே ஒரு மாபெரும் நடிகரை வைத்து சூப்பர் டுபர் ஹிட்டை அளித்தார் எஸ் ஜே சூர்யா. அதன் பின் விஜய்யின் குஷி படத்தையும் எஸ் ஜே சூர்யா தான் இயக்கி இருந்தார். இப்படி தமிழ் சினிமாவின் இரு முன்னணி நடிகர்களின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக எஸ் ஜே சூர்யாவின் படம் அமைந்திருந்தது.

- Advertisement -

எஸ் ஜே சூர்யாவின் திரைப்பயணம்:

அதற்கு பிறகு இவர் நியூ, அன்பே ஆருயிரே, கள்வனின் காதலி போன்ற பல படங்களை நடித்தும், தயாரித்தும் இருக்கிறார். பின் நீண்ட இடைவெளிக்கு பிறகு எஸ் ஜே சூர்யா அவர்கள் இசை படத்தின் மூலம் கம்பேக் கொடுத்து இருந்தார். அதுமட்டும் இல்லாமல் இவர் மகேஷ் பாபுவின் ஸ்பைடர் படத்திலும், விஜயின் மெர்சல் படத்திலும் வில்லனாக நடித்து இருந்தார். இந்த படங்கள் மூலம் நடித்து பெருத்த வரவேற்பை பெற்றார் எஸ்.ஜே.சூர்யா. அதனை தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு என இரு மொழி படங்களிலும் வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டி இருக்கிறார்.

எஸ் ஜே சூர்யாவின் நடித்த படங்கள்:

பின் இவர் ஹீரோவாக நடித்து இருந்த மான்ஸ்டர் படம் மிக பெரிய அளவில் பெற்று இருந்தது. அதனை தொடர்ந்து இவர் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ என்ற திகில் படத்தில் நடித்து இருந்தார். இந்த படம் வெளியாகி ஓரளவு வெற்றி பெற்று இருந்தது. பின் கடந்த ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகி இருந்த மாநாடு படத்தில் எஸ் ஜே சூர்யா நடித்து இருந்தார். இதனை தொடர்ந்து எஸ் ஜே சூர்யா அவர்கள் சிவகார்த்திகேயன் டான் படத்தில் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

எஸ் ஜே சூர்யாவின் நடிக்கும் படங்கள்:

பின் இவரின் நடிப்பில் உருவாகி இருந்த இறவாக்காலம் ரிலீஸ் ஆகி இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் எஸ் ஜே சூர்யா அவர்கள் பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து கொண்டு வருகிறார். அந்த வகையில் தற்போது எஸ் ஜே சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் பொம்மை. இந்த படம் நீண்ட நாட்களாக ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது. இந்த படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்திருக்கிறார். இந்த படத்தை மொழி, அபியும் நானும் போன்ற படங்களை இயக்கிய ராதா மோகன் இயக்குகிறார். இந்த படம் வருகிற ஜூன் 16ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

மாரிமுத்து அளித்த பேட்டி:

இந்நிலையில் தற்போது இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிக்காக எஸ் ஜே சூர்யா பல்வேறு சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார். அந்த வகையில் பிரபல youtube சேனல் ஒன்றுக்கு எஸ் ஜே சூர்யா உடன் இணைந்து இயக்குனரும், நடிகருமான மாரிமுத்து பேட்டி அளித்திருக்கிறார். அப்போது மாரிமுத்து எஸ் ஜே சூர்யா குறித்து கூறியிருந்தது, சூர்யா மிகச்சிறந்த உழைப்பாளி. அவருடைய உழைப்பை பார்த்து தான் நடிகர் அஜித் வாலி படத்திற்கான வாய்ப்பை கொடுத்தார். அதற்கு பிறகு விஜய் நடிப்பில் குஷி படம் உருவாகியது. அந்த படத்திற்கு எஸ் ஜே சூர்யாவிற்கு சில லட்சங்களில் அட்வான்ஸ் எல்லாம் கொடுக்கப்பட்டது.

எஸ் ஜே சூர்யா குறித்து சொன்னது:

நானாக இருந்தால் அந்த பணத்தை மொத்தமாக மறைத்திருப்பேன். ஆனால், சூர்யா அட்வான்ஸ் தொகையை ஒரு பைக் விற்பனை நிறுவனத்தில் கட்டி அவருடன் இருந்த ஏழு உதவி இயக்குனர்களுக்கு இரு சக்கர வாகனங்களை வாங்கி கொடுத்தார். நாங்கள் பஸ் மற்றும் சைக்கிள்களில் வந்து கஷ்டப்பட்டதை பார்த்து சூர்யா இதை செய்தார். இதை இன்றுவரை நான் நினைத்துப் பார்த்து பிரமித்து இருக்கிறேன். அப்போது உதவி இயக்குனராக இருந்த ஏ ஆர் முருகதாஸ் இன்றும் அந்த பைக்கை வைத்திருக்கிறார் என்று நெகிழ்ச்சியாக பேசி இருக்கிறார்.

Advertisement