அட்லி இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளியாகியுள்ளபிகில் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது தீபாவளி திருநாளை முன்னிட்டு கடந்த அக்டோபர் 25-ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம் வெளியான 5 நாட்களிலேயே 200 கோடி வசூலை அடைந்து சாதனையை பெற்றுள்ளது ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசை அமைத்திருக்கிறார். மேலும், தெரி, மெர்சல் போன்ற படங்களைத் தொடர்ந்து இந்தப் படத்தின் மூலம் மூன்றாவது முறையாக இணைந்துள்ளது விஜய் மற்றும் அட்லியின் கூட்டணி.
பெண்கள் கால்பந்தாட்ட விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் பெண்கள் கால்பந்தாட்ட அணியில் இந்துஜா ரெபா மோனிகா வர்ஷா பொல்லம்மா போன்ற ரசிகர்களுக்கு பல பரிட்சயமான நடிகைகள் நடித்து இருந்தனர். இந்த படத்தில் காயத்ரி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் வர்ஷா. நடிகை வர்ஷா பிகில் திரைப்படத்திற்கு முன்னர் பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். இவர் 2015 ஆம் ஆண்டு வெளியான சத்துரன் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். ஆனால் அந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கவனிக்கப்படவில்லை.
அதன் பின்னர் வெற்றிவேல், இவன் யார் என்று தெரிகிறதா போன்ற பல்வேறு படங்களில் நடித்து இருந்தார் ஆனால் இவர் கவனிக்கப்பட்டது என்னவோ விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 96 திரைப்படத்தின் மூலம் தான். இந்த திரைப்படத்தில் நடிகை வர்ஷா விஜய் சேதுபதியை காதலிக்கும் மாணவியாக நடித்து இருந்தார்.
ஆனால் இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுத்தது என்னவோ பிகில் திரைப்படம் தான். இந்த திரைப்படத்திற்கு பின்னர் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவானார்கள். அவ்வளவு ஏன் இவர் பதிவிடும் சில புகைப்படங்களை பிரபல நடிகையான நஸ்ரியாவுடன் ஓப்பிட்டு நீங்கள் நஸ்ரியா போலவே இருக்கிறீர்கள் என்று பல்வேறு மீம்கள் கூட சமூகவலைதளத்தில் வைரலாகி இருக்கிறது.
அதேபோல நடிகை வர்ஷாவும் நஸ்ரியாவின் பல்வேறு வசனங்களை பயன்படுத்தி டப்ஸ்மாஷ் கூட செய்திருக்கிறார். இப்படி ஒரு நிலையில் நடிகை வர்ஷா க்யூட்டான வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதற்கு ரசிகர் ஒருவர் எனக்கு இதெல்லாம் சுத்தமா பிடிக்கல நல்லாவே இல்ல தேவையில்லாம சீன் போடாதே என்று வர்ஷாவுக்கு மெசேஜ் செய்திருக்கிறார். அதற்கு நடிகை வர்ஷா உங்களின் அனுமதியை நான் கேட்டேனா தேவையில்லாம அட்வைஸ் கொடுக்காதே என்று பதிலடி கொடுத்திருக்கிறார்.