நயன்தாராவை தொடர்ந்து..முன்னணி நடிகையின் படத்தில் கமிட்டான பிஜிலி ரமேஷ்!

0
298
bijili

சமூக வலைதளங்களின் மூலம் பல்வேறு நபர்கள் பிரபலமடிந்துள்ளனர். அந்த வகையில் மண்ணை சாதிக், கல்பனா அக்கா போன்றவர்களை கூறலாம். அந்த வரிசையில் “fun பண்றோம்” என்ற பிராங்க் ஷோ மூலம் தமிழகம் முழுவதும் பிரபலமடைந்தவர் பிஜிலி ரமேஷ்.

Bijili-Ramesh

ஒரே ஒரு வீடியோ மூலம் முகநூல், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களில் பிரபலமடைந்தார் பிஜிலி ரமேஷ். ரஜினியின் தீவிர ரசிகரான இவரை பல்வேறு தனியார் ஊடகங்களும் வளைதள சேனல்களும் போட்டி போட்டுக்கொண்டு இவரை பேட்டி எடுத்தனர். அதே போல சமீபத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான “கோலமாவு கோகிலா” என்ற படத்தில் கபீஸ்க்குபா என்ற பாடலில் இடம்பெற்று அசத்தி இருந்தார் பிஜிலி.

இந்நிலையில் தற்போது பிஜிலுக்கு அடுத்த படத்தின் வாய்ப்பும் கிடைத்துள்ளது. இயக்குனர் ரதன்குமார் இயக்கத்தில் நடிகை அமலா பால் நடித்து வரும் “ஆடை “படத்தில் கமிட் ஆகியுள்ளார் பிஜிலி ரமேஷ்.இந்த படத்தில் பிஜிலிக்கு ஒரு முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. இயக்குனர் ரதன் குமார் ஏற்கன்வே தமிழில் “மேயாதமான் ” என்ற படத்தை இயக்கியிருந்தார். அந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

Aadai

தற்போது அவரது இரண்டாவது படமான “ஆடை” படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வீ கிரேஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த செப்டம்பர் 04 வெளியாகி இருந்தது. மேலும், இந்த படம் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை குறித்த கதைக்களம் கொண்ட படமாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கபடுகிறது.