இரண்டாம் முறை கர்ப்பமாக இருக்கும் Rk Suresh இரண்டாம் மனைவியின் வளைகாப்பு – நேரில் சென்று கட்டிப்பிடித்து வாழ்த்து சொன்ன அண்ணாமலை.

0
925
rksuresh
- Advertisement -

தமிழ் சினிமாவில் இயக்குனர்கள் இசையமைப்பாளர்கள் என்று பலர் தற்போது ஹீரோவாக கலக்கி வருகிறார்கள் அதேபோல ஒரு சில நடிகர்கள் தங்களது பலத்தை தாங்களே தயாரித்து அதில் ஹீரோவாகவும் நடித்து வருகின்றனர் ஆனால் தயாரிப்பாளராக இருந்து பின்னர் ஹீரோவாக அவதாரம் எடுத்தவர் தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்கே சுரேஷ் தமிழில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான சலீம் விடிவு சேதுபதி நடிப்பில் வெளியான தர்மதுரை போன்ற படங்களை தயாரித்தவர் ஆர்கே சுரேஷ்.

-விளம்பரம்-

பிறகு நடிகர் ஆர்கே சுரேஷ் அவர்கள் சினிமா பைனான்சியர் மது என்பவரை கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2021 ஆம் ஆண்டு ஸ்ரேயா என்ற ஒரு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் நடிகர் ஆர்கே சுரேஷ் தன்னுடைய மகன் குறித்தும், தன் முதல் மனைவி குறித்தும் குறித்தும் பிரபல பத்திரிக்கைக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு பேட்டி ஒன்று அளித்திருக்கிறார்.

- Advertisement -

அதில் அவர் கூறியிருப்பது, நான் ஒரு சிங்கிள் பேரண்ட் என்கிற விஷயம் என்னைச் சுற்றியிருக்கிற நண்பர்களுக்கும், சினிமா துறையை சேர்ந்த சிலருக்கு மட்டும் தான் தெரியும்.என்னுடைய மகன் பெயர் கவின். அவனுக்கு தற்போது பதினோரு வயது ஆகிறது. நானும் என் மனைவியும் 4 வருடங்களுக்கு முன்னாடியே பிரிந்துவிட்டோம். என்னுடைய மகன் கவின் அவன் அம்மா உடன் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறான். நானும் கவினும் அடிக்கடி சந்திப்போம்.

ஆனால், அதற்கு அவங்க அம்மா எந்த ஒரு தடையும் சொல்லமாட்டார்கள். அவள் ரொம்ப தைரியமான பொண்ணு, நல்ல குணம் கொண்டவள். என்னோட பயனை நல்ல முறையில் வளர்த்து கொண்டு வருகிறார். ஒரு குடும்ப உறவு என்பது கணவன் மனைவி இரண்டு பேரும் விட்டுக் கொடுத்து வாழ்வது தான்.குடும்ப வாழ்க்கையில் பிரச்சனை வரப் போகிறது என்றால் அதை இரண்டு பேருமே சரியாக பேலன்ஸ் பண்ணிட்டா போதும் குடும்ப வாழ்க்கை வெற்றிகரமாக போகலாம்.

-விளம்பரம்-

மேலும், நாங்கள் இரண்டு பேருமே அன்பாக, பாசமாக கவின் மீது இருப்போம். எங்களுடைய விவாகரத்துக்குப் பிறகு நாங்கள் 2 பேருமே நல்ல நண்பர்களாக இருக்கிறோம். அவங்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் நான் அங்கே முதலாக போய் நிற்பேன். அவங்களுக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால் கூட நான் பண்ணுவேன். எனக்கு குடும்ப வாழ்க்கையில் பிரச்சனை இருந்தபோது சினிமா தான் அதிலிருந்து வெளியே வர உதவியாக இருந்தது.

அந்த சமயத்தில் தான் நான் தாரை தப்பட்டை படத்தில் நடித்துக் கொண்டிருந்தேன். படம் ரிலீசுக்கு பிறகு நிறைய பேரு எப்படிப் நடித்தீர்கள்? என்று கேட்டார்கள். அந்த அளவுக்கு நான் நடித்தது காரணம் எனக்குள்ள இருந்த வலி தான். நான் என் மகன் கவினை ரொம்ப மிஸ் பண்ணுகிறேன் என்று உணர்ச்சி பூர்வமாக சில விஷயங்களை பேசி இருந்தார். இந்த நிலையில் ஆர்.கே. சுரேஷின் மனைவி மாதவி சுரேஷுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் மிஷ்கின் நடிகர் கௌதம் கார்த்திக் நடிகர் விமல் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு ஆர்கே சுரேஷ் மற்றும் அவரது மனைவியை வாழ்த்தியிருந்தார்கள்.

Advertisement