‘வானுயர் தோற்றம் எவன்செய்யுந் தன்நெஞ்சத் தானறி’ – யோகி காலில் விழந்த ரஜினி – திருக்குறளை விளக்கத்தோடு பதிவிட்ட ப்ளூ சட்டை.

0
1971
- Advertisement -

உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் காலில் விழுந்து ரஜினி ஆசீர்வாதம் வாங்கும் வீடியோ தற்போது வைரலாகி வரும் நிலையில் ரஜினியின் இந்த செயலை கேலி செய்துள்ளார் ப்ளூ சட்டை மாறன். விமர்சகர் ப்ளூ சட்டை மாறனை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். சினிமா உலகில் வெளிவரும் திரைப்படங்களை கிண்டலாகவும் ,கேலியாகவும் விமர்சனம் செய்து வருபவர் தான் ‘ப்ளூ சட்டை மாறன்’ இவர் பிரபலமான ஹீரோக்களான ரஜினி, கமல், விஜய், அஜித் என்று யாருடைய படமானாலும் பாரபட்சம் பார்க்காமல் கிண்டல் செய்து வருவார்.

-விளம்பரம்-

நடிகர்கள் முதல் படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் என யாரையும் விட்டுவைக்காமல் விமர்சித்து இருக்கிறார். மேலும், இவருடைய வீடியோக்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டமும் இருந்து வருகிறது. ஆனால், இவருடைய விமர்சனங்களால் படத்தின் வசூல் பாதிக்கப்படுகிறது என சினிமா பட இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் புலம்பி கொட்டுகின்றனர். இவர் விமர்சகர் என்று சொல்லிக்கொண்டு திரைப்படங்களை சகட்டுமேனிக்கு விமர்சனம் செய்து வருகிறார்.

- Advertisement -

இதனால் இவரை ரசிகர்கள் பலரும் கழுவி ஊற்றி இருக்கின்றன. அந்த வகையில் இவர் ரஜினியை அடிக்கடி வம்பிழுத்து வருகிறார். அதிலும் அண்ணத்த படத்தின் போது இவர் படத்தை மட்டுமல்லாது ரஜினியையும் படு மோசமாக விமர்சித்து இருந்தார். அப்போது இருந்து இவருக்கு ரஜினி ரசிகர்களுக்கும் ட்விட்டரில் அடிக்கடி கமண்ட் போர் சென்று கொண்டு தான் இருக்கிறது. இது இறுதியில் கொலை மிரட்டல் வரை சென்றது.

ஆனாலும், ரஜினியை இவர் விமர்சித்து வருவதை விட்ட பாடில்லை. இப்படி ஒரு நிலையில் ரஜினி உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் காலில் விழுந்த வீடியோவை பகிர்ந்து கேலி செய்துள்ளார் ப்ளூ சட்டை மாறன். அண்ணத்த படத்தின் படு தோல்வியை தொடர்ந்து ரஜினி நடிப்பில் வெளியாகிய ஜெயிலர் திரைப்படம் ரஜினிக்கு ஒரு திருப்புமுனை படமாக அமைந்துள்ளது. இந்த படம் 500 கோடி வசூலை நெருங்கி கொண்டு இருக்கிறது.

-விளம்பரம்-

இதனால் ஜெயிலர் படக்குழு மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறது. அதோடு படம் வெளியான உடனே ரஜினி அவர்கள் இமயமலைக்கு சென்று விட்டார். ங்கு அவர் ஆன்மீகப் பயணத்தை முடித்துவிட்டு ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சிக்கு சென்று இருக்கிறார். பின் ரஜினிகாந்த் அங்கு மாநில ஆளுநரை சந்தித்து பல்வேறு இடங்களை சுற்றி பார்த்து ஆசிரமத்திற்கு சென்று இருந்தார். ஆசிரமத்தில் குருவிடம் ஆசிர்வாதம் வாங்கிவிட்டு உத்திரபிரதேசம் மாநிலம் லக்னோ சென்றிருந்தார்.

அப்போது ரஜினிகாந்தை பார்த்த செய்தியாளர்கள் பேட்டி எடுத்து இருக்கிறார்கள். அதில் ரஜினிகாந்த், உத்தர பிரதேச மாநிலம் யோகி ஆதித்யநாத்தை சந்தித்து ஜெயிலர் படம் பார்க்க இருக்கிறேன். ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு காரணம் கடவுளின் ஆசிர்வாதம் என்று பேசி இருந்தார். ஆனால், ஜெயிலர் படத்தை பார்த்த ஆதி ஆதித்யநாத் வரவில்லை.. இருப்பினும் உ.பி துணை முதல்வருடன் படம் பார்த்தார் ரஜினி.

மேலும், துணை முதல்வரும் பணி நிமித்தம் காரணமாக பாதியில் கிளம்பிவிட்டதாக கூறப்படுகிறது. இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ப்ளூ சட்டை மாறன் ‘உங்கள் புகழுக்கும், உயரத்திற்கும் இந்த சறுக்கல்கள் தேவையா ரஜினிகாந்த்?ஒவ்வொரு பிரபலத்திற்கும் இறுதிக்கால வரலாறு முக்கியம். இதை உணரவே மாட்டீர்கள் போல’ என்று பதிவிட்டு ரஜினியை விமர்சித்துள்ளார்.

அதே போல முதல்வர் யோகி ஆதித்யநாத்தை லக்னோவில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் சந்தித்தார். அப்போது மரியாதை நிமிர்த்தமாக அவரது காலில் விழுந்து ஆசி பெற்றார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகி வர ரசிகர்கள் பலரும் பல விதமான கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர். இதனை விமர்சிக்கும் விதமாக ப்ளூ சட்டை மாறன் திருக்குறள் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில் ‘குறள் 272: வானுயர் தோற்றம் எவன்செய்யுந் தன்நெஞ்சத் தானறி குற்றப் படின். விளக்கம்: தன் மனத்திற்குக் குற்றம் என்று தெரிந்தும்கூட அதைச் செய்பவர், துறவுக்கோலம் பூண்டிருப்பதால் எந்தப் பயனும் இல்லை.குறள் 275:பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென் றேதம் பலவுந் தரும்.எத்தகைய பற்றுகளும் இல்லாதவர் என்று வாயால் சொல்லிச் செயலால் தவறாக வாழ்பவரின் வாழ்க்கை, பிறகு ஏன் அப்படி செய்தோம் என்று வருந்தும்படி பல துன்பங்களையும் தரும்.’ என்றும் பதிவிட்டுள்ளார்.

Advertisement