தென்னிந்திய படத்தில் நடித்து பெயரை கெடுத்துக்காதீங்கன்னு சொன்னாங்க – பாலிவுட் நடிகை ஓபன் டாக்.

0
3702
payal

தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகை பாயல் கோஸ். இவர் தமிழ் சினிமா உலகில் தேரோடும் வீதியிலே என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர். இதனைத் தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம் என பல மொழி படங்களில் நடித்துள்ளார். அதற்குப் பின்னர் தொடர்ந்து இவர் பாலிவுட் திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் நடிகை பாயல் கோஷ் அவர்கள் பாலிவுட் திரை உலகை ஒப்பிடும்பொழுது தென்னிந்திய திரையுலகமே சிறந்தது என்று சோசியல் மீடியாவில் தெரிவித்துள்ளார் .இதுகுறித்து அவர் கூறியது, நான் தேசிய விருது பெற்றுள்ள சில தென்னிந்திய இயக்குனர்கள் படங்களில் நடித்துள்ளேன். அவர்கள் நேர்மையானவர்கள்.

அவர்களுடனும் தென்னிந்திய ஹீரோக்களுடனும் பணிபுரியும் போது எனக்கு எந்தவிதமான பிரச்னையும் ஏற்படவில்லை. அவர்கள் ஹீரோயின்களை தெய்வமாகப் பார்க்கிறார்கள் மற்றும் நடத்துகிறார்கள். மேலும், தமிழ்நாட்டில் சில நடிகைகளுக்கு கோயில் கூட கட்டப்பட்டுள்ளது. நடிகைகளை ரசிகர்கள் வணங்குகிறார்கள். நான் இந்தி சினிமாவில் வாய்ப்புத் தேடிய போது தென்னிந்திய படங்களில் நடித்ததை பற்றி யாரிடமும் சொல்லாதே என்று சிலர் என்னிடம் சொன்னார்கள்.

- Advertisement -

ஏன் என்றால் பாலிவுட்டில் தென்னிந்திய நடிகைகள் பற்றி தவறான எண்ணம் இருக்கிறது. அது ஏன் என்று தெரியவில்லை. தென்னிந்திய படங்களில் நடித்து ஏன் வாழ்க்கையை கெடுத்துக்கொள்கிறாய் என்றும் பாலிவுட்டில் கவனம் செலுத்து என்றும் இந்தி திரையுலகைச் சேர்ந்தவர்கள் என்னிடம் சொல்கிறார்கள். பாலிவுட்டில் கவனம் செலுத்துவதை விட தென்னிந்திய மொழி படங்களில் கவனம் செலுத்தி இருந்தால் நன்றாக இருந்து இருக்கும் என்று இப்போது நினைக்கிறேன்.

அதோடு பாலிவுட் சினிமா இப்போது தென்னிந்திய படங்களைத் தான் நம்பி இருக்கின்றன. அங்கிருந்துதான் பல படங்கள் ரீமேக் செய்யப்படுகின்றன. பாலிவுட்டை விட தென்னிந்திய சினிமா மிகவும் சிறந்தது என்று பாயல் கோஷ் கூறியுள்ளார். இப்படி இவர் கூறிய கருத்து தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை கிளப்பி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement