லட்ச கணக்கில் பண மோசடி செய்த லிங்க பட நடிகை மீது போலீசில் புகார்.!

0
410
Sonakshi

இந்தியில் 2010 ஆம் ஆண்டு சல்மான் கான் நடிப்பில் வெளியான “தபாங் ” படத்தில் கதாநாயகியாக நடித்து இந்தி சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை சோனாக்ஷி சின்ஹா. 8 ஆண்டுகளாக இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக நடித்து வரும் இவர் மீது மோசடி புகார் அளிக்கபட்டுள்ளது.

பாலிவுட் சினிமாவில் ஒல்லி பெல்லி நடிகைகளை பார்த்து சலித்து போன இந்தி ரசிகர்களுக்கு , சற்று பூசலான தோற்றத்தில் அறிமுகமன சோனாக்ஷி ரசிகர்களுக்கு சற்று புதுமையாக இருந்தார். இதனால் இவருக்கு இந்தியில் பல் பட வாய்ப்புகள் குவிய தொடங்கின.

- Advertisement -

பாலிவூடில் முன்னணி நடிகர்களுடன் கை கோர்த்து நடித்து வந்த இவர், தமிழில் 2014 ஆம் ஆண்டு வெளியான “லிங்கா ” படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு  நடித்து தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரிட்சியமானார். அதன் பின்னர் தமிழில் தலை காட்டவில்லை.

கடந்த சில காலமாக இந்தியிலும் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வருகிறார் சோனாக்ஷி. இந்த நிலையில் இவர் மீது
நிகழ்ச்சி அமைப்பாளர்கள் சிலர் பண மோசடியின் பெயரில் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி டெல்லியில் நடைபெறுவதாக இந்தியா ஃபேஷன் மற்றும் பியூட்டி விருது நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சோனாக்ஷி 37 லட்ச ரூபாயை பெற்றுள்ளார்.

-விளம்பரம்-

இவர் வருவரென்று அந்த நிகழ்ச்சிக்கு தடபுடலாக ஏற்பாடுகள் செய்யபட்டது. ஆனால், இந்த நிகழ்ச்சிக்கு சோனாக்ஷி பங்கேற்கவில்லை. இதனால் கொடுத்த பணத்தை திருப்பிக்கேட்டுள்ளனர் நிகழ்ச்சி அமைப்பார்கள். ஆனால், அவர் பணத்தை திருப்பி கொடுக்க மறுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் சோனாஷி சின்ஹா மீது இந்தியா ஃபேஷன் மற்றும் பியூட்டி விருது நிகழ்ச்சியின் அமைப்பாளர்கள் சோனாக்ஷி மீது
உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அவர்கள் அளித்த புகாரின் பெயரில் சோனாக்ஷி மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

Advertisement