பெரியார் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட தேர்வில் சாதி குறித்த கேள்வி – ராமதாஸ், எடப்பாடி உள்ளிட்டோர் கண்டன பதிவு

0
466
periyar
- Advertisement -

சேலத்தில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தில் செமஸ்டர் தேர்வுகளில் ஜாதி குறித்த கேள்வி கேட்டிருப்பது தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் முதுகலை வரலாறு பாடத்திற்கான இரண்டாம் செமஸ்டர் தேர்வு நடைபெற்றது. அதில் சாதி பற்றி சர்ச்சை கேள்வி கேட்கப்பட்டது. அதாவது, தமிழ்நாட்டில் உள்ள நான்கு சாதிகளின் பெயர்களை குறிப்பிட்டு அதில் தாழ்ந்த ஜாதி என கேட்கப்பட்டுள்ளது. இது சாதிய பாகுபாடுகளை ஊக்குவிப்பதாக தற்போது சர்ச்சை எழுந்துள்ளது.

-விளம்பரம்-

மேலும், அந்த வினாத்தாளில் மஹர், நாடார், ஈழவர், அரிஜன் ஆகிய பிரிவுகளில் குறிப்பிட்டு இவற்றுள் தமிழகத்தில் எது தாழ்ந்த ஜாதி? என்கிற கேள்வி கேட்கப்பட்டுள்ளது. ஜாதி ஒழிப்பில் ஈடுபட்ட பெரியார் பெயரில் இயங்கும் பல்கலைக்கழகத்தில் தமிழகத்தில் எது தாழ்ந்த ஜாதி என்கிற கேள்வியை கேட்டிருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்பட்டு இருக்கிறது. தற்போது இது சர்ச்சைக்குரிய விஷயமாக மாறி இருக்கிறது. இது குறித்து கல்லுரியின் துணைவேந்தர் இடம் கேட்டபோது, வினாத்தாள்கள் வெளி கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உள்ள பேராசிரியர் மூலமாக தயாரிக்கப்படுகின்றன.

- Advertisement -

இதையும் பாருங்க : விஜய் மற்றும் ஹாரிஸ் ஜெயராஜ் சொகுசு கார் வழக்கு – ஒரே நாளில் தீர்ப்பளித்த நீதிமன்றம்.

கேள்வித்தாள் வெளியே கசிந்து விடக்கூடாது என்பதால் முன்கூட்டியே வினாத்தாள் படித்து பார்ப்பதற்கான வழக்கம் இல்லை. இதனால் இதுபோன்ற தவறுகள் நேர்ந்திருக்கலாம். எங்கள் கவனத்திற்கு வரவில்லை. இது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் தேர்வு நடத்தப்படுவது குறித்து பரிசீலிக்கப்படும் என சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் விளக்கம் கொடுத்திருக்கிறார். இதனையடுத்து சோசியல் மீடியாவில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் இது தொடர்பாக ராமதாஸ் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார்.

-விளம்பரம்-

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட முதுகலை வரலாறு இரண்டாம் பருவத் தேர்வில் தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட சாதி எது? என்ற வினா எழுப்பப்பட்டு, அதற்கு மகர்கள், நாடார்கள், ஈழவர்கள், ஹரிஜன்கள் ஆகியவற்றிலிருந்து ஒன்றை தேர்வு செய்யுமாறு கூறப்பட்டுள்ளது. தேர்வுகளில் மாணவர்களின் கற்றல் மற்றும் புரிந்து கொள்ளும் திறன்களை அறிய பல வழிமுறைகள் இருக்கும் நிலையில், இப்படி ஒரு வினா எழுப்பப்பட்டது தவறு. இது வினாத்தாள் தயாரித்தவர்கள் மற்றும் தேர்வு நடத்தியவர்களின் சாதிய வன்மத்தையே காட்டுகிறது.

இது கண்டிக்கத்தக்கது. வினாத்தாள் வெளியிலிருந்து பெறப்பட்டது தான் இந்த தவறுக்கு காரணம் என துணைவேந்தர் கூறுவது இந்த குற்றத்தை மூடி மறைக்கும் செயல். வினாத்தாளை பல்கலை. நிர்வாகம் சரிபார்த்திருக்க வேண்டும். அத்தகைய நடைமுறை பெரியார் பல்கலை.யில் இருக்கும் போது இந்த குற்றம் எப்படி நடந்தது?சாதிக் கொடுமைகளுக்கு எதிராக போராடிய பெரியார் பெயரில் உள்ள பல்கலைக்கழகத்தில் இக்கொடுமை நடந்திருப்பதை மன்னிக்க முடியாது.

வினாத்தாள் தயாரித்தவர்கள், அதை சரிபார்க்கத் தவறியவர்கள், பல்கலைக்கழக நிர்வாகம் உள்ளிட்ட அனைவர் மீதும் விசாரணை நடத்தி தண்டிக்க வேண்டும்! என்று கூறி இருக்கிறார். இதை அடுத்த எடப்பாடி அவர்கள் போட்ட பதிவு, மக்களே பாரீர், ‘பெரியாரின்’ பெயரை தாங்கி நிற்கும் பல்கலைக்கழகத்திலேயே மாணவர்களிடத்தில், பெரியாரின் கொள்கைகளை கொச்சைப்படுத்தியும், சாதிய ஏற்றத்தாழ்வுகளை ஊக்குவித்தும் செமஸ்டர்தேர்வு வினாத்தாளில் கேள்விகள் கேட்டிருப்பதுதான் விடியா அரசின் திராவிட மாடலா? இதுதான் திமுகவின் சமூகநீதியா? என்று கூறி இருக்கிறார். இப்படி பலரும் பலவிதமாக பதிவு போட்டு வருகிறார்கள்.

Advertisement