பாஜக அரசு அனைத்திலும் ஊழல் செய்து வருகிறது. பாஜகவை அரசை கடுமையாக விமர்சித்த அமைச்சர் உதயநிதி.

0
638
- Advertisement -

பாஜக அரசு எல்லாவற்றிலும் உழல் செய்து வருகிறது என்று பாஜகவை கடுமையாக விமர்சித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.  நாடாளுமன்ற தேர்தல் நெருங்க நெருங்க அரசியல் வட்டாரங்கள் மிகவும் பரப்பரப்பாக இருந்து வருகிறது. இதில் ஒரு தரப்பினர் அவர்களுடைய கருத்து கூற அதற்க்கு எதிரணியில் இருப்பவர் மற்றொரு கருத்தை கூற என பரபரப்பாக இருந்து வருகிறது. இந்த நிலையில் திமுகவின் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் தர்மாவை ஒழிக்க வேண்டும் என்று பேசியிருந்தார்.

-விளம்பரம்-

சிலவற்றை நாம் எதிர்க்க கூடாது கொசு, டெங்கு, மலேரியா, கொரோனா அதை எல்லாம் ஒழிக்க தான் வேண்டும் அது போல தான் இந்த சனாதனமும். சனாதனத்தை எதிர்ப்பதை விட ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியமாகும். சனாதனம் என்றால் என்ன அதன் பெயரே சமஸ்கிருததில் இருந்து வந்தது தான். சனாதனம் சமத்துவத்திற்கும் சமூக நீதிக்கும் எதிரானது. சனாதனத்திற்கு அர்த்தம் என்னவென்றால் நிலையானது மாற்றமுடியாதது, யாரும் கேள்வி கேட்க்க முடியாது என்று அர்த்தம்.

- Advertisement -

எல்லாவற்றிற்கும் கேள்வி கேட்க்க வேண்டும் என்பது தான் இந்த கமினியூஸ்ட் இயக்கமும் இந்த திமுக இயக்கமும். முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை கேலி செய்யும் வகையில் ஒரு செய்தி தாளில் செய்தி ஒன்று வெளியிடப்பட்டது. அதற்க்கு நம்முடைய முதல்வர் சமூக வலைதளங்களில் அதற்க்கு எதிர்ப்பாக பதிவு செய்து இருந்தார். தமிழகத்தில் மற்றகூடதாது எதுவும் இல்லை என்று மாற்றி காட்டியவர் தான் முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி. பெண்களுக்கு சனாதனம் என்ன செய்தது கணவனை இழந்த பெண்களுக்கு உடன் கட்டை ஏற வைத்தது.

திராவிட அரசு மக்களை முன்னோக்கி அழைத்து செல்கிறது ஆனால் ஒன்றிய அரசு மக்களை பின்னோக்கி அழைத்து செல்கிறது. நாம் நம்முடைய பிள்ளைகளை படிக்க வைக்க திட்டங்களை கொண்டு வருகிறோம் ஆனால் பாசிஸ்ட்கள் நம்முடைய பிள்ளைகளை படிக்க வைக்க கூடாது என்று செயல் பட்டு வருகின்றனர். நாம் அனைவரும் படிக்கூடாது என்பது தான் அவர்களுடைய எண்ணம். அதற்க்கு தான் நீட் போன்ற தேர்வுகளை 2017 ஆம் ஆண்டு ஆரம்பித்து அன்று முதல் இன்று வரை அரியலூர் அனிதா முதல் குரோம்பேட்டை ஜெகதிசன் வரை 21 மாணவர்களை நாம் பலி கொடுத்து இருக்கிறோம் என்றும் அமைச்சர் பாஜகவை விமர்சித்தது குறிப்பிடதக்கது.

-விளம்பரம்-

உதயநிதியின் உறுதி:

ஊழல் ஒழிப்பு நாடகத்தோடு ஆட்சிக்கு வந்த பாசிஸ்ட்டுகள், பணமதிப்பு நீக்கத்தில் தொடங்கி, ரஃபேல் ஊழல், சி.ஏ.ஜி அறிக்கை அம்பலப்படுத்திய தேசிய நெடுஞ்சாலை ஊழல், ஆயுஷ்மான் பாரத் ஊழல், டோல்கேட் ஊழல் என ஊழலின் மொத்த வடிமாக மாறிப்போயுள்ளனர். ரூ.900 கோடியில் கட்டப்பட்ட நாடாளுமன்றக் கட்டிடத்தில் மழை நீர் ஒழுகுகிறது. ரூ.2700 கோடியில் அமைக்கப்பட்ட G20 மண்டபத்தில் வெள்ளம் தேங்குகிறது. இப்படி எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என்பதை மறைக்க மொழி – மதம் – கலவரத்தின் பின் ஒளிந்து கொள்ளும் பாஜகவை, மக்களின் கோபமும் – I.N.D.I.A- வின் வலிமையும், 2024 தேர்தல் களத்தில் மூழ்கடிக்கப்போவது உறுதி என்று உதயநிதி ஸ்டாலின் கடுமையாக சாடியுள்ளர்.

Advertisement