மறக்குமா நெஞ்சம் நிகழ்ச்சி – எரியும் தீயில் எண்ணெய் ஊற்றுவது போல நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் போட்ட பதிவு.

0
1166
ARRahman
- Advertisement -

ஏ ஆர் ரகுமனின் மறக்குமா நெஞ்சம் நிகழ்ச்சியால் ரசிகர்கள் பலர் புலம்பி கொண்டு இருக்கும் நிலையில் இந்த இசை கச்சேரியை ஏற்பாடு செய்த Event நிறுவனம் போட்டுள்ள பதிவு எரியும் தீயில் எண்ணெய்யை ஊற்றி இருக்கிறது. உலக அளவில் புகழ் பெற்ற திரைப்பட இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான். இவர் தன்னுடைய துள்ளல் இசையால் இளைஞர்களை கவர்ந்தவர். இவர் குறுகிய காலத்திலேயே பாலிவுட், ஹாலிவுட், கோலிவுட் என எல்லா மொழி படங்களிலும் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து இருக்கிறார். கிட்டத்தட்ட இவர் சினிமா உலகில் இசையமைப்பாளராக நுழைந்து 30 ஆண்டுகள் நிறைவடைந்து இருக்கிறது.

-விளம்பரம்-

இவர் படங்களைத் தாண்டி பல நாடுகளில் இசைக் கச்சேரிகளை நடத்தி இருக்கிறார்.அதோடு இவர் நிகழ்ச்சி என்றாலே டிக்கெட் சில நிமிடங்களில் விற்பனையாகி விடும். இது அனைவரும் அறிந்த ஒன்று. இந்நிலையில் ‘மறக்குமா நெஞ்சம்’ என்ற தலைப்பில் `ஏ ஆர் ரகுமான் இசை கச்சேரி சென்னையில் தொடங்கி இந்தியாவின் பல நகரங்களிலும் நடைபெற திட்டமிட்டு இருக்கிறார்கள். அதோடு வெளிநாடுகளிலும் இந்த இசை கச்சேரி நடக்க இருக்கிறது.

- Advertisement -

இதனால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.மேலும், சென்னை பனையூரில் ஏ ஆர் ரகுமான் இசைக் கச்சேரி நடக்க இருந்தது ஆனால், திடீர் மழை பெய்து நிகழ்ச்சி நடத்தும் இடத்தில் நீர் தேங்கி இருக்கிறது. இதனால் இசை கச்சேரி ரத்து செய்யப்பட்டது. இதனால் ரசிகர்கள் எல்லோரும் சோகத்தில் இருந்தார்கள். மேலும், இது தொடர்பாக ஏ.ஆர் ரஹ்மானும் சமூக வலைத்தளங்களில் மன்னிக்கவும் கேட்டிருந்தார். தற்போது அந்த இசை கச்சேரி நேற்று நடைபெற்றது.

ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியால் சென்னை ஓ.எம்.ஆர். சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் 2 மணி நேரத்திற்கும் மேலாக பொதுமக்கள் அவதிப்பட்டனர். டிக்கெட் வாங்கியும் ஆயிரக்கணக்கானோர் இசை நிகழ்ச்சியை பார்க்க முடியாத அளவுக்கு நிகழ்ச்சி ஏற்பாடு மோசமாக இருந்ததாக ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், 10000 ரூபாய் டிக்கெட் வாங்கி தங்களால் உள்ளே கூட செல்லவில்லை என்று புலம்பி இருக்கின்றனர்.

-விளம்பரம்-

கடந்த சில தினங்களுக்கு முன்னர் கூட கோயம்பத்தூரில் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ரசிகர்கள் ஏராளமான பேர் கலந்து கொண்டிருந்தார்கள்.5000 ரூபாய் கொடுத்து நிகழ்ச்சி பார்க்க வந்தவர்களுக்கு ஒரு சேர் கூட இல்லை, மிகவும் மோசமாக நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது என்று நிகழ்ச்சிக்கு சென்ற பலர் புலம்பி இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும், ரஹ்மானை திட்டியவர்களை விட இந்த நிகழ்ச்சியை இந்த அளவிற்கு மோசமாக ஒருங்கிணைத்த ACTC event என்ற நிறுவனத்தை தான் கடுமையாக சாடி இருந்தனர். அதிலும் உள்ளே இருந்த பணியாளர்கள் சிலர் நிகழ்ச்சியை பார்க்க வந்த ரசிகர்களை தரக்குறைவாக பேசி இருந்தனர். இப்படி ஒரு நிலையில் ACTC event நிர்வாகம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளது.

அதில் ‘சென்னை மக்களுக்கும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். இந்த அபாரமான வரவேற்பும், கட்டுக்கடங்காத கூட்டமும் எங்கள் நிகழ்ச்சியை பெரும் வெற்றியடையச் செய்துள்ளன. நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாதவர்களிடம் நாங்கள் மனதார மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம். இதற்கான முழு பொறுப்பையும் நாங்களே ஏற்கிறோம். நாங்கள் உங்களோடு இருக்கிறோம்’ என்று கூறியுள்ளனர்.

ஆனால், நிகச்சியால் பணத்தை இழந்த ரசிகர்களுக்கு பணம் திருப்பி கொடுக்கப்படுமா என்று எந்த ஒரு விஷயத்தையும் அவர்கள் குறிப்பிடவில்லை. இந்த பதிவை கண்ட ரசிகர்கள் பலர் ‘இவ்வளவு கேவலமான ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துவிட்டு பெரும் வெற்றி என்று கூறாதீர்கள். இது மிகப்பெரிய Scam. அடுத்த முறை நீங்கள் நிகழ்ச்சியை நடத்தி பாருங்கள் என்று கடுமையாக சாடி வருகின்றனர்.

Advertisement