பெரியார் நோக்கத்தை நீங்க சரியா புரிந்துகொள்ளவில்லை – பெரியார் குறித்த வசனம் குறித்து ரசிகர் விமர்சனம். சேரன் பதிலடி.

0
1563
- Advertisement -

சமீபத்தில் வெளியான ‘தமிழ்க்குடிமகன்’ படத்தில் பெரியார் குறித்து இடம்பெற்ற வசனம் சர்ச்சையான நிலையில் அது குறித்து விளக்கமளித்துள்ளார் இயக்குனரும் நடிகருமான சேரன். இயக்குனர் இசக்கி கார்வண்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் தமிழ் குடிமகன். இந்த படத்தை லட்சுமி கிரியேஷன் தயாரித்திருக்கிறது. இந்த படத்தில் சேரன், ஸ்ரீ பிரியங்கா,லால் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு ராஜேஷ் யாதவ் இசையமைத்திருக்கிறார்.

-விளம்பரம்-

ஜாதி வேறுபாடுகளை மையமாகக் கொண்ட கதை. படத்தில் கிராமத்தில் இறந்தவர்களுக்கு இறுதி சடங்கு செய்யும் குலத்தில் சேரன் பிறந்திருக்கிறார். இவர் நல்ல டிகிரி படித்து முடித்து இருக்கிறார். இதனால் அரசாங்க வேலைக்கு செல்ல வேண்டும் என்று ஆசைப்படுகிறார். ஆனால், குல தொழிலை விடாமல் செய்கிறார். இவருடைய தங்கை டாக்டருக்கு படித்துக் கொண்டிருக்கிறார்.

- Advertisement -

தமிழ்க்குடிமகன் :

மேலும், அவருக்கும் மேல் ஜாதி சேர்ந்த ஊரின் பெரிய குடும்பத்தை சேர்ந்த லால் மகனுக்கும் இடையே காதல் ஏற்படுகிறது. இவர்களுடைய காதல் லாலுக்கு தெரிய வருகிறது. பின் லால் மற்றும் அவருடைய உறவினர்கள் சேரனின் தங்கையை கொலை செய்ய முயற்சி செய்கிறார்கள்.இதற்கு பின் லாலுடைய அப்பா இறந்து விடுகிறார்.ஆனால், அவருக்கு இறுதி சடங்கு செய்ய மாட்டேன் என்று சேரன் சொல்கிறார்.

பெரியார் குறித்த வசனம் :

படித்து முடித்து குலத் தொழிலை விட்டு வேறொரு வேலைக்கு செல்லும் மக்கள் மத்தியில் இவர் தன்னுடைய குலதொழிலை விடாமல் செய்கிறார். ஒரு கட்டத்தில் ஊரைவிட்டுச் செல்லும் சின்னச்சாமி, ‘நாதியற்ற என்னை சாதியற்றவனா மாத்துங்க’என்று வழக்குத் தொடுக்கிறார். நீதிமன்றம் என்ன தீர்ப்பு சொல்கிறது என்பதுதான் ‘தமிழ்க்குடிமகன்’கதை.இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் நீதிமன்ற காட்சி தான் சர்ச்சையாகி இருக்கிறது.

-விளம்பரம்-

ரசிகர் கேள்வி :

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பலர் சேரனை டேக் செய்து கருத்துக்களை பதிவிட்டு வரும் நிலையில் எக்ஸ் வாசி ஒருவர் ‘அண்ணா.. போராடுவதும், விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் தான் நம் கையில் உள்ளது.. அதை பின்பற்றுவது மக்கள் கையில் உள்ளது.. பெரியார் போன்ற ஒப்பற்ற தலைவர்கள் செய்ததன் நோக்கத்தை நீங்கள் சரியாக புரிந்துக்கொள்ளவில்லை என்றே தோன்றுகிறது’ என்று பதிவிட்டு இருந்தார்.

சேரன் விளக்கம் :

இதற்க்கு பதில் அளித்த சேரன் ‘அது என் கருத்தல்ல தம்பி.. இயக்குனரின் கருத்து. அவர் பேச சொன்னதை நான் நடிக்க வேண்டும். அவ்வளவே. பெரியாரை பற்றிய என் கருத்துக்கள் தெரியவேண்டுமெனில் எனது சமீபத்திய நேர்காணல் பாருங்கள். குறை கூறி காழ்ப்புணர்வில் வன்மம் உமிழ்பவர்களுக்கு என் பதில் வராது.. சரியாக புரியப்படுவது நன்று’ என்று கூறியுள்ளார்.

Advertisement