நடிகர் விஜய் கட்சி துவங்கி ஒரு மாதத்திற்கு மேல் ஆகிறது. சமீபத்தில் தான் தனது கட்சியின் புதிய செயலை அறிமுகம் செய்து வைத்தார் விஜய். அதே போல கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான அணியை விஜய் அறிமுகம் செய்து வைத்தார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், மகளிர் தலைமையில் முதல்முறையாக உருவாக்கப்பட்டுள்ள இந்த அணியினர், கட்சியின் தோழர்களுடன் இணைந்து மக்களுக்கு உதவி செய்வார்கள் என்று கூறியுள்ளார். அதன்படி, நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்த விஜயலட்சுமி என்பவரை மாநிலச் செயலாளராக நியமித்துள்ளார்.
மாநில இணைச் செயலாளராக கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியை சேர்ந்த யாஸ்மின் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.மேலும், 5 பேர் கொண்ட இந்த அணியின் மாநில பொருளாளராக சம்பத்குமாரும், மாநில துணைச் செயலாளர்களாக விஜய் அன்பன், எம்.எல்.பிரபுவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்த புதியஅணி கட்சி உள்கட்டமைப்பு சார்ந்து விரைவில் விரிவாக்கம் செய்யப்படும் என்று தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
அத்துடன், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர் சேர்க்கை அணியினருக்கு கட்சியின் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிட்டு இருந்தார். இப்படி ஒரு நிலையில் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுகாவை சேர்ந்த தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகியான பிரேமலதா என்பவர் கட்சியில் நடக்கும் சில பாகுபாடுகள் குறித்து வெளிப்படையாக பேசியிருக்கிறார்.
இது குறித்து பேசி இருக்கும் அவர் ‘ கட்சியில் நடக்கும் விஷயங்கள் எங்கள் தலைவர் விஜய்க்கு சேர வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் இதை நான் பேசுகிறேன். விஜய் அவர்களே நீங்கள் எங்களை பார்த்திருக்கிறீர்களா இல்லையா என்பது போல் தெரியாது ஆனால் நாங்கள் விஜய் மக்கள் இயக்கம் ஆரம்பித்ததில் இருந்து என் வைகாசி போட்டு நலத்திட்ட உதவிகளை செய்திருக்கிறேன்.கடந்த 20 ஆண்டுகளாக அனைத்து மாவட்டத்தில் இருந்தும் உங்கள் இயக்கத்திற்காக பல உயிரைக் கொடுத்து பாடுபட்டு இருக்கிறார்கள்.
அந்த சகோதர சகோதரிகளுக்காக தான் நான் பேசுகிறேன் உங்களுக்காக உண்மையாக உழைத்த நபர்களுக்கு பதவி போய் சேருவது கிடையாது நடுவில் இருக்கும் மாவட்ட மற்றும் நகர நிர்வாகிகள் அனைவரும் உண்மையாக இருப்பவர்களை உங்கள் பக்கம் கொண்டு வர மாட்டார்கள் அவர்களை சார்ந்த சொந்தக்காரர்கள் அவர்களுக்கு முக்கியமான நபர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் எல்லா கட்சியில் நடக்கும் அதே தப்புதான் இங்கேயும் நடந்து கொண்டிருக்கிறது.
எதை நீங்கள் ஆரம்பத்திலேயே பார்த்து சரி செய்து உங்களுக்காக உண்மையாக இருப்பவர்களுக்கு கை கொடுத்து உதவி செய்தால் தமிழக வெற்றி கடகத்தில் உயிரைக் கொடுத்து பாடுபடும் உறுப்பினர்கள் சேர்ந்து மேன்மேலும் வளர உதவியாக இருக்கும். உங்கள் பெயரில் பல நலத்திட்ட உதவிகளை எங்கள் கை காசு போட்டு செய்தாலும் இங்கே இருக்கும் நகரம் செயலாளர்கள் அதை செய்ய விடாமல் தடுக்கிறார்கள். இதற்கு மேலாவது நீங்கள் இதை சரி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்’ என்று பேசி இருக்கிறார்.