வாக்களித்த பின் சின்மயி பதிவிட்ட புகைப்படம்.! பங்கமாக கலாய்த்த பிரபல இயக்குனர்.!

0
470
Chinmayi

தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கும் 18 சட்டசபைகளுக்கு இடைத்தேர்தல்களும் அந்தந்த தொகுதிகளில் நடைபெற்று வரும் நிலையில் பல்வேறு நடிகர் நடிகைகளும் தங்களது வாக்கினை அளித்து வருகின்றனர். இந்த நிலையில் பாடகி சின்மையும் வாக்களித்திருந்தார்.

வைரமுத்து விவாகரத்திற்கு பின்னர் பாடகி சின்மயி பெரும் சர்ச்சையில் சிக்கினார். ஒரு சிலர் அவருக்கு ஆதரவாக பேசினாலும் பெரும் பாலான நெட்டிசன்கள் இவரை கலாய்த்து தான் வருகின்றனர். இவர் எந்த பதிவை போட்டாலும் அதனை ட்ரோல் செய்து விடுகின்றனர்.

அந்த வகையில் இன்று பாடகி சின்மயி வாக்கு செலுத்தி விட்ட பின்னர் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில் அவர் முகத்தை பாதி மறைக்கும்படியான ஒரு கண்ணாடி ஒன்றையும் அணிந்திருந்தார்.

அவர் அணிந்த்திற்கும் கண்ணாடியை கிண்டல் செய்யும் வகையில் பிரபல இயக்குனர் சி எஸ் அமுதன், காரின் கண்ணாடியை எப்படி பொறுத்த போகிறீர்கள் என்று கிண்டலடித்தார். அதற்கு சின்மயி ‘உங்கள் துணையோடு தான்’ என்று பதில் ட்வீட் செய்துள்ளார்.