‘வயசுக்கு ஏத்த மாதிரி நடந்துக்கோங்க’ – கீர்த்தி சுரேஷை வர்ணித்து சிரஞ்சீவி செய்த செயலால் ரசிகர்கள் விமர்சனம்.

0
2138
Chiranjeevi
- Advertisement -

ஆச்சார்யா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சிரஞ்சீவி செய்திருக்கும் செயல் குறித்து சோஷியல் மீடியாவில் பயங்கர சர்ச்சை கிளப்பியிருக்கிறது. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் சிரஞ்சீவி. ‘மெகா ஸ்டார்’ என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் சிரஞ்சீவி. இவர் நடிப்பில் வெளிவந்த பட்டங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியாகி இருந்த படம் சைரா நரசிம்மா ரெட்டி. இந்த திரைப்படம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் என பல மொழிகளில் வெளி ஆகி இருந்தது.

-விளம்பரம்-

இந்தப்படம் சுதந்திரப் போராட்டத்திற்கு முக்கிய காரணமான நரசிம்மா ரெட்டியின் வாழ்க்கையை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் சிரஞ்சீவி, சுதீப், நயன்தாரா, தமன்னா, விஜய் சேதுபதி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து இருந்தார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை. இப்படி ஒரு நிலையில் இவர் போலா ஷங்கர் படத்தில் நடித்துள்ளார்.

- Advertisement -

இந்த படம் அஜித்தின் வேதாளம் படத்தின் ரீ- மேக் என்பது குறிப்பிடத்தக்கது. சமீப காலமாகவே தமிழ் வெளியான பல்வேறு திரைப்படங்கள் மற்ற மொழிகளிலும் ரீ – மேக் செய்யப்படுவது அதிகரித்து கொண்டு வருகிறது. அதிலும் சமீப காலமாக பல்வேரு சூப்பர் ஹிட் தமிழ் படங்களை தெலுங்கில் ரீ – மேக் செய்து வருகின்றனர். அந்த வகையில் சிரஞ்சீவி ஏற்கனவே விஜய் நடித்த ‘கத்தி’ படத்தின் ரீ -மேக்கில் நடித்திருந்தார்.

இதனை தொடர்ந்து தற்போது இவர் வேதாளம் படத்தின் ரீ-மேக்கில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் தமிழில் அஜித் தங்கையாக நடித்த லட்சுமி மேனன் கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் 11ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் ப்ரோமஷன் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் கீர்த்தி சுரேஷ் குறித்து சிரஞ்சீவி பேசி இருக்கும் விஷயம் தான் பெரும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.

-விளம்பரம்-

இந்த விழாவில் பேசிய சிரஞ்சீவி ‘தினமும் எங்க வீட்ல சாப்பிட்டு எப்படி கிளாமரா ஆகிட்டாங்க பாருங்க’ என்று பேசியதோடு கீர்த்தி சுரேஷை கன்னத்தை கிள்ளினார். இதனை தொடர்ந்து ‘முதல் நாளே சொல்லிவிட்டேன், என்னை அண்ணன் என்று அழைக்க வேண்டாம் என்று. நான் உனக்கு அண்ணன் இல்லை, உனக்கு நிறைய அண்ணன்கள் இருக்கிறாரகள். நீ என் அடுத்த படத்துல ஹாரியினா மட்டும் இரு’ என்றும் பேசி இருக்கிறார்.

இ’ந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வரும் நிலையில் நெட்டிசன்கள் பலரும் சிரஞ்சீவி இது போல சர்ச்சையில் சிக்குவது முதன் முறையல்ல கடந்த ஆண்டு சிரஞ்சீவி ‘ஆச்சார்யா’ என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் ராம் சரண் தேஜா, காஜல் அகர்வால், பூஜா ஹெக்டே, சோனு சூட் உட்பட பலர் நடித்திருந்தனர். இந்த படமும் மாபெரும் தோல்வியை தழுவியது. இந்த நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியின் போதும் சிரஞ்சீவி, பூஜா ஹேக்டேவிடம் நடந்துகொண்ட விதம் விமர்சனத்திற்கு உள்ளானது.

அந்த நிகழ்ச்சியில் பூஜா ஹேக்டே நின்று கொண்டு இருந்த போது டிகர் சிரஞ்சீவி அவர்கள் தன் மகன் ராம் சரணை ஒதுக்கிவிட்டு தனியாக பூஜா போஸ் கொடுத்திருந்தார். அதுமட்டுமில்லாமல் பூஜா மேடையிலிருந்து கீழே இறங்க முயற்சி செய்தும் அவரை வலுக்கட்டாயமாக நிறுத்தி சிரஞ்சீவி போட்டோக்களை எடுத்து இருந்தார். அதே போல அவரை கட்டி அனைத்து போஸ் கொடுத்து இருந்தார்.

பின் மேடைக்கு கீழும் சிரஞ்சீவி பக்கத்தில் உட்கார்வதை தவிர்க்க பூஜா முயற்சி செய்தார். அப்போது சிரஞ்சீவி அவரை கட்டாயப்படுத்தி உட்காரவைத்தார். இப்படி சிரஞ்சீவி நடந்திருக்கும் செயல் குறித்த வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி ரசிகர்கள் மத்தியில் விவாதமாக மாறியது. இதனை தொடர்ந்து நெட்டிசன்கள், ரசிகர்கள் பலரும் கடுமையாக விமர்சித்து வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement