அரபிக் குத்து மட்டுமல்ல, தமிழ் சினிமாவில் புரியாத பாடல்களின் ட்ரெண்ட். லிஸ்ட் இதோ

0
989
- Advertisement -

பொதுவாகவே தமிழ் சினிமா உலகில் புரியாத வார்த்தைகளில் பாடல்கள் வந்து கொண்டிருக்கின்றது. எந்த மொழி எனப் புரியாத பல புதிய வார்த்தைகள் தமிழ் பாடலின் துவக்க வரிகளில் வருகிறது. அந்த பாடல்களும் ஹிட் அடித்து வருகிறது. இது தமிழ் சினிமா உலகில் காலம் காலமாக இருந்து வருகிறது. அதிலும் AR ரகுமான், வாலி இணைந்து பணிபுரியும் படங்களில் இந்த வகையிலான பாடல்கள் நிச்சயம் இடம்பெற்றிருக்கும். இது 1990 காலகட்டங்களில் இருந்தே தொடங்கியது. எந்த மொழி, என்ன அர்த்தம் என்ன வார்த்தை என்று தெரியாமலேயே இந்த மாதிரி பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆகிறது.

-விளம்பரம்-

சமீபகாலமாக ஏஆர் ரஹ்மான் இந்த மாதிரியான பாடல்களை கைவிட்டு நல்ல தமிழ் வார்த்தைகளை தேர்வு செய்து பாடல்களை வெளியிட்டு வருகிறார். ஆனாலும் புரியாத மொழி பாடல்களை தமிழ் சினிமாவில் மீண்டும் ஹாரிஸ் ஜெயராஜ் கையாண்டு வருகிறார். இந்த வகையில் நடிகர் சிவாவின் தமிழ் படத்திலும் இசை அமைப்பாளர்களை கிண்டல் செய்து ஒரு பாடல் வந்து இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. சமீப காலமாகவே இதை மீண்டும் தமிழ் சினிமாவில் அதிகமாக பயன்படுத்தபடுகிறது.

- Advertisement -

தமிழ் சினிமாவில் புரியாத பாடல்களின் பட்டியல்:

அதிலும் குறிப்பாக விஜய் விஜய் உடைய படங்களில் இந்த மாதிரியான பாடல்கள் அதிகம் இடம் பெற்றிருக்கிறது. பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் நண்பன் திரைப்படத்தில் அஸ்கு லஸ்கா ஏமோ ஏமோ என்ற பாடல் இடம்பெற்றிருந்தது. இருந்தாலும் இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் ரசிக்க வைத்தது. இந்த பாடலை மதன் கார்க்கி எழுதி இருந்தார். இதனை அடுத்து முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த சர்க்கார் திரைப்படத்திலும் சிம்டாங்காரன் என்ற பாடல் வெளியாகி இருந்தது. இந்த பாடலை விவேக் எழுதியிருந்தார்.

விஜய்யின் புரியாத மொழி பாடல்:

ஏ ஆர் ரகுமான் இந்த படத்திற்கு இசை அமைத்திருந்தார். சிம்டாங்காரன் என்ற வார்த்தை வடசென்னை மக்களால் பயன்படுத்தப்படும் வார்த்தை என்று பாடலாசிரியர் விவேக் விளக்கம் அளித்திருந்தார். இருந்தாலும் புழக்கம் இல்லாத வார்த்தையாக இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது. இது வடசென்னை மக்களுக்கு புதிய வார்த்தைகளாக பார்க்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் பீஸ்ட் படத்தில் அரபி குத்து என்ற ஹலமதி ஹபீபோ என்ற பாடல் வெளியாகி இருக்கிறது. மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய் அவர்கள் தற்போது பீஸ்ட் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி இருக்கிறார்.

-விளம்பரம்-

பீஸ்ட் படம் பாடல்:

இவர்களுடன் இந்த படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்து இருக்கிறார். இந்த படத்தின் இறுதிகட்ட வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. மேலும், இந்த படத்தின் அரபிக்குத்து பாடல் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகி இருந்தது. இந்த பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் விஜய்க்காக எழுதியிருக்கிறார். விஜய்யின் அரபிக் குத்து பாடல் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. மேலும், ஹலமதி ஹபீபோ என்ற வார்த்தை மட்டும் அரபியில் இருந்து எடுக்கப்பட்டது.

அரபிக்குத்து பாடலின் அர்த்தம்:

இதற்கு நான் உன்னை நேசிக்கிறேன் என்று பொருள். இந்த வார்த்தையை தாண்டி இந்த பாடல் வரும் எந்த வார்த்தையும் அரபி இல்லை. இப்படி அர்த்தமற்ற வார்த்தைகளைவைத்து பாடல் எழுதுவது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றாலும் இந்த மாதிரியான பாடல்கள் தமிழ் ரசிகர்களுக்கு எந்தவிதமான வளத்தை கொடுக்கும் என்று தமிழர் ஆர்வலர்கள் மத்தியில் கேள்வி கேட்கப்பட்டு வருகிறது. அதிலும் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருக்கும் விஜய் உடைய படங்களில் இந்த மாதிரி பாடல்கள் இடம் பெறுவது குறித்து பலரும் விமர்சித்து வருகிறார்கள்.

Advertisement