முதல்வர் மு.க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்த பிறகு அந்த வாழ்த்து பதிவை நீக்கியது ஏன் ? கொந்தளித்த கனிமொழி எம்.பி.

0
991
- Advertisement -

தமிழகத்தை சேர்ந்த பெண் ஒருவர் மேஜர் ஜென்ரல் பதவி உயர்வு வாங்கிய பெண்மணியை வாழ்த்தி ட்வீட் செய்ததற்கு எதற்கு இராணுவத்தின் வடக்கு கமாண்ட் வாழ்த்தி இருந்த பதிவை ட்வீடை நீக்க வேண்டும் என்று எம்.பி கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார் அது தற்போது ட்வீட்டர் தளத்தில் சல சலப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணுவம் எதற்கு அவ்வாறு செய்யவேண்டும் என்றும் கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார்.

-விளம்பரம்-

கன்னியாகுமரி மாவட்டத்தை சார்ந்த இக்னீஷியஸ் டெலாஸ் ஃப்ளோரா (38 வயது) இவர் ராணுவ மருத்துவ மனையில் செவியளராக பணியாற்றி வருகிறார். இவர் பல்வேறு கட்டங்களிலும் பல வகை பதவி உயர்வுகளை பெற்று தற்போது மேஜராக பதவி உயர்வு பெற்றுள்ளார். இந்த பதவியை பெற்ற முதல் பெண்மணியும் இவர் தான். இதனை சிறப்பிக்கும் வகையில் அவருக்கு ட்வீட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்தார்.

- Advertisement -

கனிமொழி எம்.பி கருத்து

தமிழ்நாட்டில் இருந்து முதல் பெண்மணியாக மேஜர் ஜென்ரல் பதவி உயர்வு பெற்றவருக்கு ட்வீட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்த தமிழக முதல்வரின் பதிவை ஏன் இராணுவத்தின் வடக்கு கமாண்ட் நீக்கியது ஏன் என்று கனிமொழி எம்.பி குற்றம்சாட்டு எழுப்பியுள்ளார்.

கனிமொழி எம்.பி.யின் ட்வீட்

தமிழக முதல்வரின் ட்வீட்டை ரீட்வீட் செய்து இராணுவத்தின் வடக்கு காமண்ட் அந்த பெண்ணின் பதிவி உயர்வு பதிவை நீக்கியுள்ளது. இதனை தொடர்ந்து ஏன் அந்த பதிவை நீக்கினார்கள் என்றும் அதற்க்கான பின்னனி என்னவென்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.இது கூறித்து அவரது ட்வீட்டர் கணக்கில் வெளியிட்ட பதிவில் தமிழ்நாடு முதலமைச்சர், தனது மாநிலத்திலிருந்து முதல் பெண்மணியாக மேஜர் ஜெனரல் பதவி உயர்வு பெற்றிருப்பவருக்கு வாழ்த்திய பதிவை

-விளம்பரம்-

@NorthernComd_IA ஏன் நீக்க வேண்டும்? இதன் பின்னணி என்ன? என்றும் அவர் கேள்விகளை எழுப்பினார். கனிமொழி எம்.பி.யின் பதிவை கண்ட திமுகவினர் முதல்வரின் பதிவு நீக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தனர்.

நெட்டிசன்களின் விளக்கம்       

இராணுவத்தின் வடக்கு கமாண்ட் முதல்வரின் பதிவை நீக்க வில்லை என்றும், அந்த பெண்னின் பதவி உயர்வை வாழ்த்தி இராணுவத்தின் வடக்கு கமாண்ட் கணக்கில் பதிவிடப்பட்டிருந்த பதிவை மட்டுமே நீக்கியுள்ளது என்றும் விளக்கமளித்து வருகின்றனர்.                             

Advertisement