கல்லூரி விழாவில் விஜய், அஜித் பெயரை சொன்ன பிரபலம். மாஸ் யாருக்கு பாருங்க. வீடியோ இதோ.

0
3723
vijay-ajith

தமிழ் சினிமா திரை உலகில் மிகப் பிரபலமானவர்கள் என்று சொன்னால் தல அஜித்தும், தளபதி விஜய்யும் சொல்லலாம். ஏனென்றால் அந்த அளவிற்கு அவர்களுக்கு ரசிகர்கள் உள்ளார்கள். அதுவும் இவர்கள் இருவருக்கும் தமிழகத்தில் மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளார்கள். அது எல்லாருக்குமே தெரியும். மேலும்,தமிழகத்தில் “தல, தளபதி” என்று சொன்னாலே போதும் வெறித்தனம் தான். அந்த அளவிற்கு தமிழகத்தில் ‘தல, தளபதிக்கு’ ரசிகர்கள் அதிகம். அதுமட்டும் இல்லாமல் தமிழ்நாட்டில் எந்த இடத்திற்குச் சென்றாலும் ‘தல, தளபதி’ ரசிகர்களை பார்த்து விடலாம். ஏன்னா, அந்த அளவிற்கு பட்டி தொட்டி எங்கும் ‘தல, தளபதி’ ரசிகர்கள் உள்ளனர்.

அதுவும் விழாக்களிலும்,பொது மேடைகளிலும் ‘தல, தளபதி’ பற்றி யாராவது பேசினால் போதும் அவர்களுக்கு கிடைக்கும் ரெஸ்பான்ஸ் சொல்லவே முடியாது வேற லெவல்ல இருக்கும். இது எல்லாருக்கும் தெரிந்த விஷயம் தான். அந்த வகையில் சமீபத்தில் சென்னையில் உள்ள பனிமலர் கல்லூரி ஒன்றில் அரசு விழா நடந்தது. மேலும்,அந்த அரசு விழா மேடையில் நபர் ஒருவர் பேசிக் கொண்டு இருந்தார். ஆனால், அவர் பேசுவதை கவனிக்காமல் சோர்ந்து போய் மாணவர்கள் உட்கார்ந்து இருந்தார்கள். அதாவது வகுப்பறையில் ஆசிரியர் நடத்தும் பாடத்தை கவனிக்காமல் இருக்கும் மாணவர்களைப் போல.

இதையும் பாருங்க : கிறிஸ்துவ மத மாற்ற கூட்டத்தில் விஜய் ? சர்ச்சையை ஏற்படுத்திய வீடியோ இதோ.

- Advertisement -

மேலும், மாணவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டும், அரட்டை அடித்தும், கேலியும்,கிண்டலும் செய்து கொண்டும் இருந்தார்கள். அப்போது அந்த நபர் மாணவர்கள் தான் பேசுவதை கவனிக்க வேண்டும் என்பதற்காக ஒரு சின்ன ட்ரிக் யூஸ் செய்தார். மேலும், எல்லாருடைய கவனத்தையும் தன் பக்கம் ஈர்ப்பதற்கு அவர்களுக்கு பிடித்த விஷயத்தை சொன்னால் போதும் அனைவரும் கவனிப்பார்கள். அதே தான் அவரும் செய்தார். அது அவர் மேடையில் பேசிக் கொண்டிருக்கும் போது திடீரென்று சரி ‘இதுல எத்தனை பேர் தல ரசிகர்கள், தளபதி ரசிகர்கள்’ என கேட்டார்.

அவர் கேட்ட உடனே அனைவரும் சுறு சுறுப்பாக பயங்கர ஆர்ப்பாட்டத்தை செய்ய தொடங்கி விட்டார்கள். அதிலும் தல ரசிகர்கள் யார்? தளபதி ரசிகர்கள் யார்? என்று அவர் கேட்டதும் தாங்க முடியலைங்க அந்த அளவிற்கு பட்டையை கிளப்பி செம்ம ரெஸ்பான்ஸ் கிடைத்தது. மேலும்,தலயை விட தளபதி ரசிகர் என்று சொன்னவுடன் மேடையே அதிர வைக்கும் அளவிற்கு கத்தி ,கூச்சல் போட்டுஆரவாரம் செய்து வந்தார்கள் ரசிகர்கள். இதனைத் தொடர்ந்து விஜய் அவர்களின் பிகில் படம் திரையரங்களில் வெளியாகி சூப்பர் டூப்பர் படமாக மாறி வருகிறது.

-விளம்பரம்-

மேலும், தல அவர்களின் இந்த வருடம் வெளியான ‘விசுவாசம், நேர்கொண்ட பார்வை’ படம் வேற லெவல்ல தூள் கிளப்பியது என்று சொல்லலாம். இதனைத் தொடர்ந்து அஜித் அவர்களின் ‘தல 60’ என்ற படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டுள்ளார் என்றும், தளபதி விஜய் அவர்கள் நடிப்பில் ‘தளபதி 64’ படத்தில் நடித்து கொண்டு வருகிறார் என்ற தகவலும் சமூக வலைத்தளங்களில் வெளிவந்து உள்ளது. மேலும், இவர்கள் இரண்டு பேர் படத்தையும் பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர் என கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர் நெட்டிசன்கள்.

Advertisement