ஒரு சில பேருக்கு கொடுக்க வேண்டியது இருக்கு – தனது அம்மா தாக்கப்பட்டது குறித்து ஜோவிகா.

0
357
- Advertisement -

தனது தாய் தாக்கப்பட்டது குறித்து ஜோவிகா பேசி இருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 9வது வாரத்தை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள். இதில் அனன்யா, பவா, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி,பிரதீப், ஐஷு, கானா பாலா, அக்ஷயா, பிராவோ. ஜோவிகா ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர்.

-விளம்பரம்-

மேலும், இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல போட்டியாளர்கள் கலந்துகொண்டு இருக்கின்றனர். அந்த வகையில் வனிதாவின் மகள் ஜோவிகாவும் ஒருவர். ஆரம்பத்தில் ஜோவிகா நன்றாக தான் விளையாடி வந்தார்.படிப்பு குறித்து விசித்திராவிடம் சண்டை போட்டது ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்று இருந்தது. ஆனால், நாட்கள் செல்ல செல்ல மாயா மற்றும் பூர்ணிமாவுடன் இணைந்து இவர் மற்றறவர்களை மரியாதை இல்லாமல் நடத்தி இருந்தார்.

- Advertisement -

மேலும், ஜோவிகா, மாயா டீமுடன் இணைந்து ஆடக் கூடாது என்பதை சூசகமாக சொல்லும் வகையில் வனிதா ‘சிங்கம் சிங்கிளாதா இருக்கும்’ என்று வாசகம் உள்ள டி- ஷர்ட் ஒன்றை அனுப்பி வைத்தார். ஆனாலும், அதையும் புரிந்துகொள்ளாமல் ஜோவிகா, மாயா டீமில் தான் இருந்தார்.பின் ஜோவிகா அந்த கேங்கில் இருந்து பிரிந்து வந்த பின்னும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு சுவாரசியம் எதுவும் கொடுக்கவில்லை .

அதோடு ஜோவிகா, பிக் பாஸ் வீட்டில் பெரும்பாலும் சாப்பிடுவது, தூங்குவது, வழுக்கி விழுவது என்று தான் இருந்து வருகிறார். இதனால் சமூக வலைதளத்தில் ட்ரோல்களுக்கு அதிகமாகி இருந்தது. இப்படி இருக்கும் நிலையில் கடந்த வாரம் குறைந்த வாக்குகளை பெற்று ஜோவிகா எலிமினேட் ஆகி இருக்கிறார்.பிக் பாஸ் வீட்டில் மொத்தம் 63 நாட்கள் ஜோவிகா இருந்திருக்கிறார், இவருக்கு ஒரு நாளைக்கு 20,000 சம்பளம் என்று கூறப்படுகிறது. ஆக மொத்தம், 20000*63=1260000 கொடுக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் வெளியேற்றத்திற்கு பின்னர் தனது அம்மாவின் லைவில் வந்த ஜோவிகா ‘நான் வெளியேறதைப் பற்றி நான் கவலைப்படவில்லை சொல்லப்போனால் நான் வெளியேறியது மிகவும் மகிழ்ச்சியாக தான் இருக்கிறது. நான் வெளியில் வரும்போது கூட சொல்லிவிட்டு தான் வந்தேன் ஒன்பது வாரங்கள் ஆகிவிட்டது ஆனால் இதற்கு பின்னர் அந்த வீட்டில் என்ன நடக்கும் என்பது தெரியவில்லை எனவே இப்போது கிளம்புவது சரியாக இருக்கும் என்று எனக்கு தோன்றியது’ என்று கூறியுள்ளார்.

மேலும், தனது அம்மா வனிதா தாக்கப்பட்டது குறித்து பேசிய ஜோவிகா ‘ நான் வெளியில் வந்து அம்மாவை சந்திக்கும் ஒரு அரை மணி நேரத்திற்கு முன்பாக தான் எனக்கு இந்த விஷயமே தெரியும். ஒரு சில விஷயங்களுக்கு விளக்கங்களும் ஒரு சில விஷயங்ளில் எச்சரிக்கைகளையும் சில பேருக்கு கொடுக்க வேண்டியது இருக்கிறது. அதெல்லாம் கண்டிப்பாக வரும் கொஞ்சம் காத்திருங்கள் என்று கூறியிருக்கிறார்.

Advertisement