Food Reviewer,பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர், கார் பிராண்டு பேமஸ் நடிகை – CWC5 போட்டியாளர்கள் லிஸ்ட்

0
672
- Advertisement -

கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கும் போட்டியாளர்களின் பட்டியல் தான் தற்போது இணையத்தில் வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் நான்கு சீசன்களாக வந்த ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று இருக்கிறது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து நான்கு சீசனும் ஒளிபரப்பாகி இருந்தது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். அதுமட்டும் இல்லாமல் இந்த நிகழ்ச்சி டிஆர்பியில் டாப் ரேட்டிங்கில் இருக்கிறது.

-விளம்பரம்-

மேலும், இந்த நிகழ்ச்சியில் வெங்கடேஷ் பட், தாமு தான் நடுவர்களாக இருக்கிறார்கள். கடந்த ஆண்டு தான் குக் வித் கோமாளியின் 4வது சீசன் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்து இருந்தது. இதனை அடுத்து பலருமே ஐந்தாவது சீசன் எப்போது என்றெல்லாம் கேள்விகளை எழுப்ப தொடங்கி விட்டார்கள். அதற்கு ஏற்ப நிகழ்ச்சியில் இருந்து நடுவர் வெங்கடேஷ் பட் விலகி இருப்பதாக அறிவித்தார். இது ரசிகர்களுக்கு பேர் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. இதை அடுத்து இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய தயாரிப்பு நிறுவனம் Media Masons 10 விலகி விட்டது.

- Advertisement -

குக் வித் கோமாளி:

இவர்களை தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சி இயக்குனர் பார்த்திபனும் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி இருக்கிறார். இப்படி குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இயக்குனர், நடுவர், தயாரிப்பு நிறுவனம் உடனுக்குடன் விலகி இருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி தொடருமா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்து இருக்கிறது. இதனை அடுத்து குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சிக்கான ப்ரொமோட் சூட் எல்லாம் நடந்து முடிந்திருக்கிறது. அதோடு இந்த நிகழ்ச்சியில் தாமுடன் மற்றொரு நடுவராக மாதம்பட்டி ரங்கராஜ் களம் இறங்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கும் போட்டியாளர்களின் பட்டியல் தான் தற்போது இணையத்தில் வருகிறது.

வி டிவி கணேஷ்:

தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் vtv கணேஷ். இவருடைய குரலால் தான் மக்கள் மத்தியில் அதிகம் கவனிக்கப்பட்டார். சிம்புவின் நெருங்கிய நண்பர் ஆவார். சொல்ல போனால் சிம்புவினுடைய படங்களில் தான் இவர் அதிகம் நடித்திருக்கிறார். தற்போது இவர் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறார். இதற்கு காரணம் சிம்புவாக இருக்குமோ என்றும் கூறப்படுகிறது.

-விளம்பரம்-

இர்பான்:

youtube சேனல் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர் இர்பான். இவர் உள்ளூர் முதல் வெளிநாடுகள் வரை சென்று பல இடங்களில் சாப்பிட்டு அந்த உணவை குறித்து ரிவ்யூ வீடியோக்களை வெளியிட்டு இருக்கிறார்.

பிரியங்கா தேஷ்பாண்டே:

இவருக்கு அறிமுகமே தேவையில்லை. விஜய் டிவியின் செல்லப்பிள்ளை என்றே சொல்லலாம். இவருக்கு ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து இருந்தார். தற்போது இவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

ஸ்ரீகாந்த் தேவா:

தமிழ் சினிமாவில் பிரபலமான இசையமைப்பாளர். இவர் இசையமைப்பாளர் தேவாவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இதுவரை சுமார் 100 படங்களுக்கு மேல் இசையமைத்திருக்கிறார். இந்த சீசனில் சமையலுடன் பாட்டு கச்சேரியும் நடக்கும் என்று கூறப்படுகிறது.

வசந்த்:

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் இரண்டாவது சீசனில் நடித்துக் கொண்டிருக்கும் வசந்துக்கு தான் இந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

திவ்யா துரைசாமி:

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் திவ்யா துரைசாமி. இவர் ஸ்பேட் ராஜா இதய ராணியும் படத்தில் நடித்து இருக்கிறார். மேலும், இவரை செல்லமாக Tesla என்று ரசிகர்கள் அழைத்து வருகின்றனர். சமீபத்தில் வெளியிட்ட ப்ளூ ஸ்டார் படத்தில் கூட இவர் நடித்திருந்தார். தற்போது இவர் சின்னத்திரையில் களமிறங்கி இருக்கிறார்.

இவர்களைத் தொடர்ந்து கடந்த பிக் பாஸ் 7 சீசனில் கலந்து கொண்ட தினேஷ், பூர்ணிமா ஆகியோரும் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் புதுச்சேரியில் இயற்கை விவசாயம் செய்து கொண்டிருக்கும் பிரெஞ்ச் காரர் கிருஷ்ணா மெக்கன்ஷியின் பெயரும் அடிபட்டு வருகிறது. இதில் யாரெல்லாம் இந்த சீசனில் கலந்து கொள்ள இருப்பார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement