வேறு தாய் வயிற்றில் பிறந்த சகோதரன் – குக்கு வித் கோமாளி பிரபலத்துடன் ஷகீலாவின் மகள். வைரலாகும் புகைப்படம்.

0
1532
shakeela
- Advertisement -

சினிமா உலகில் சில்க் ஸ்மிதாவுக்கு பிறகு கவர்ச்சி நாயகியாக வலம் வந்தவர் நடிகை ஷகிலா. ஷகிலா பெயர் சொன்னால் போதும் அனைத்து ரசிகர்களும் குஷியாகி விடுவார்கள். அந்த அளவிற்கு இவருடைய படங்களில் தாராளமாக கவர்ச்சி காட்டிய நடிகை. இவர் தமிழ் சினிமா உலகில் துணை நடிகையாக தன்னுடைய திரைப் பயணத்தை தொடங்கினார். இவர் ஆரம்பத்தில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார். கவுண்டமணியுடன் சில படங்களில் நகைச்சுவை காட்சிகளிலும் நடித்து இருந்தார். இவருடைய குடும்ப சூழ்நிலை காரணமாக இவர் மலையாள கரையோரம் ஒதுங்கி கவர்ச்சி படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

-விளம்பரம்-

இவர் முதலில் கவர்ச்சி நாயகியாக வலம் வந்தது மலையாள மொழி படங்களில் தான். அதனாலேயே இவருக்கு கேரளாவில் அதிக ரசிகர்கள் உள்ளார்கள் என்று சொல்லும் அளவுக்கு கவர்ச்சி விருந்து படைத்தவர்.இவருடைய கவர்ச்சி படங்களுக்கு ரசிகர்கள் மயங்காதவர்கள் இருக்க மாட்டார். மேலும், ஷகீலா தனது வாழ்கை வரலாற்றை படமாக எடுத்துள்ளார். சமீபத்தில் பேசிய ஷகீலா, எனக்கு தெரிந்து நான் செய்த தவறை தற்போது சினிமா துறைக்கு வரும் நடிகைகள், படிக்கும் மாணவிகள் அனைவருக்கும் ஒன்று சொல்லுகிறேன்.

- Advertisement -

என்னை போல் யாரும் ஏமாந்து விடாதீர்கள். அதைத்தான் என் புக்கில் எழுதி இருக்கிறேன். இதைத்தான் படமாக எடுத்து இருக்கிறார்கள். பெண்களுக்கு மேசேஜாக இந்த திரைப்படம் இருக்கும் என்று கூறி இருந்தார்.ஷகீலா திருமணம் செய்துகொள்ளவில்லை தான். ஆனால், அவர் ஒரு திருநங்கையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். அவரை ஷகிலா தங்கம் என்று தான் அழைப்பாராம் (பாவக் கதை சத்தாரு ஞாபகம் வருகிறதா).

மேலும், அவருடைய உண்மையான பெயர் மிலா. மேலும், இவர் ஒரு ஆடை வடிவமைப்பாளராக வேலை செய்து வருகிறாராம். கவர்ச்சி நடிகை என்ற அடையாளத்தை இழந்து தற்போது ஷகீலாவை குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பலரும் அம்மா என்று தான் அழைத்து வருகிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் அஸ்வினுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ள ஷகிலாவின் மகள், வேற்று தாய் வயிற்றில் பிறந்த அண்ணன் என்று உருக்கமுடன் பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement