‘வருஷம் புல்லா அப்படி போஸ்ட் போட வேண்டியது, இன்னிக்கி ஒரு நாள் மட்டும் இப்படி’ – பிறந்தநாளில் அன்னதானம் செய்த தர்ஷாவை விமர்சித்த நபர். அவரின் பதிலடி.

0
545
darsha
- Advertisement -

நெட்டிசன் கேட்ட கேள்விக்கு தர்ஷா குப்தா கொடுத்திருக்கும் பதிலடி தற்போது சோஷியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. மொட்டை மாடி போட்டோ ஷூட் மூலம் இளசுகளின் மனதை கொள்ளை அடித்தவர் நடிகை தர்ஷா குப்தா. இவர் கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர். இவர் சின்னத்திரை சீரியல் மூலம் தான் மக்கள் மத்தியில் பரிச்சயமாகி இருந்தார். அதிலும் இவர் ஜி தமிழ் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி இருந்த “முள்ளும் மலரும்” என்ற தொடரின் மூலம் தான் மக்கள் மத்தியில் அறிமுகமாகி இருந்தார்.

-விளம்பரம்-

அதன் பின் சன் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிந்த “மின்னலே” என்கிற தொடரில் நடித்து இருந்தார். அதேபோல் சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி இருந்த செந்தூரப்பூவே என்ற தொடர் முடிவடைந்தது. இந்தத் தொடரில் வில்லி கதாபாத்திரத்தில் தர்ஷா குப்தா நடித்திருந்தார். இப்படி இத்தனை நாடகத்தில் இவர் நடித்தாலும் மக்கள் மத்தியில் பெரியதாக பிரபலம் அடையவில்லை.

இதையும் பாருங்க : நிகழ்ச்சிக்கு மாஸாக வர ஆசைப்பட்டு தமாஷாகி போன சிவாங்கி – வைரலாகும் வீடியோ இதோ.

- Advertisement -

தர்ஷா சின்னத்திரை பயணம்:

ஆகவே, சினிமா நடிகைகள் முதல் சீரியல் நடிகைகள் வரை என பல பேர் பயன் படுத்திய யுத்தியை தான் தர்ஷா கையாண்டு இருந்தார். அதாவது இவர் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருப்பது. இதனால் இவர் அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார். இதன் மூலம் தான் இவர் பிரபலமாகி இருக்கிறார். அந்த பிரபலத்தினால் தான் இவருக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் அதிக பேராதரவைப் பெற்று வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்து இருந்தது.

ருத்ர தாண்டவம் படம்:

இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது என்று சொல்லலாம். அதுமட்டுமில்லாமல் இந்த நிகழ்ச்சியின் மூலம் தான் இவருக்கு பட வாய்ப்பும் கிடைத்து இருந்தது. திரௌபதி படத்தை தொடர்ந்து ரிச்சர்ட்டை வைத்து ‘ருத்ர தாண்டவம்’ என்ற படத்தை இயக்கி இருக்கிறார் மோகன். இந்த படத்தில் குக் வித் கோமாளி தர்ஷா நாயகியாக நடித்து இருந்தார். இவர்களுடன் இந்த படத்தில் ராதாரவி, கௌதம் வாசுதேவ் உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படம் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது.

-விளம்பரம்-

தர்ஷா பதிவிட்ட பதிவு:

தற்போது வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் தர்ஷா சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் தர்ஷா அவர்கள் அனாதை இல்லத்தில் தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடி இருந்தார். அப்போது அவர் அங்கு எடுத்த புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பதிவிட்டு தெய்வ குழந்தைகளுடன் என்னுடைய பிறந்தநாள் என்று கூறி இருக்கிறார். இந்த புகைப்படமும், பதிவும் சோசியல் மீடியாவில் வைரலானது.

நெட்டிசனுக்கு தர்ஷா கொடுத்த பதிலடி:

இதை பார்த்த நெட்டிசன் ஒருவர், வருஷம் முழுவதும் கவர்ச்சி புகைப்படம். இந்த ஒரு நாள் மட்டும் நல்ல புகைப்படமா? உங்கள புரிஞ்சுக்கவே முடியலையே என்று பதிவிட்டு இருக்கிறார். இதை பார்த்த தர்ஷா கூறியிருப்பது, ஆடை என்பது வெளிப்புற அழகு மட்டும் தான். ஆனால், வெளிப்புற அழகை விட குணம் ரொம்ப முக்கியமான ஒன்று என பதிலடி கொடுத்திருக்கிறார். இப்படி தர்ஷா பதிவிட்டு இருக்கும் பதிவு சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

Advertisement