சென்னையில் வரையப்பட்ட இந்தியாவின் மிகப்பெரிய சுவர் ஓவியத்தில் இடம் பெற்ற குக்கு வித் கோமாளி பிரபலம்.

0
2066
pavithra
- Advertisement -

சமீபத்தில் சென்னை இந்திரா நகர் ரயில் நிலைய கட்டடத்தில் வரையப்பட்ட சுவர் ஓவியத்தில் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது அன்னை இந்திரா நகர் ரயில் நிலைய கட்டடத்தில் வெளிப்புறம் முழுவதும் கோர்வையாக வரையப்பட்டுள்ள இந்த ஓவியம் இந்திரா நகர் ரயில் நிலையத்தை கடந்து செல்லும் நபர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. வெறும் சுவர் ஓவியமாக மட்டும் இல்லாமல் பலதரப்பட்ட மனிதர்களின் முகங்கள் அடங்கிய இந்த ஓவியத்தில் ஒரு பாதி ஒருவரின் முகமாகவும் மறுபாதி மற்றொருவரின் முகம் கொண்டு ஒரு விதமாகவும் இருக்கின்றது.

-விளம்பரம்-

மேலும் இந்த ஓவியங்கள் வெறும் அழகுக்காக வரையப்பட்டது கிடையாது இந்த ஓவியங்கள் எய்ட்ஸ் நோயின் விழிப்புணர்வுக்காக வரையப்பட்ட விழிப்புணர்வு ஓவியம் தான் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களும் நம்முள் ஒருவர் தான் நம்மை போல அவரும் மனிதர்தான் அவரை தனித்து தவிர்க்க வேண்டும் நாம் அனைவரும் இங்கு மனிதகுலம் ஆகவே இருக்கிறோம் என்கிற மனிதநேயத்தை உரக்க சொல்லி இருக்கின்றது இந்த ஓவியம்.

இதையும் பாருங்க : சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ‘ராமசாமி’ (பெரியார்) விவகாரம் – மீம் மூலம் எஸ் ஜே சூர்யா அளித்த பதில். (குசும்புபா இவருக்கு)

- Advertisement -

மேலும், இந்த ஓவியம் இந்தியாவிலேயே இதுவரை இடம்பெற்ற சுவர் ஓவியங்களில் மிகப்பெரிய ஓவியம் என்றும் கூறப்படுகிறது. தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம், ஸ்டார்ட் இந்தியா பவுண்டேஷன், ஏசியன் பெயிண்ட்ஸ், தெற்கு ரயில்வே இணைந்து இந்த முயற்சியை எடுத்துள்ளார் இந்த ஓவியத்தில் இடம் பெற்றுள்ள பல்வேறு தரப்பு மக்களுக்கு மத்தியில் ஒரு குக்கு வித் கோமாளி பிரபலத்தின் முகம் இடம்பெற்று இருப்பது பலரும் அறிந்திராத ஒரு விஷயம்.

அது வேறு யாரும் கிடையாது. தற்போது கொக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டிருக்கும் பவித்ராவின் முகம் தான். குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று வரும் பவித்ரா, கடந்த இரண்டு வாரங்களாக நிகழ்ச்சியில் பங்குபெறவில்லை. சில தனிப்பட்ட பிரச்சனை காரணமாக இரண்டு வாரம் பங்குகொள்ளாத இவர் இந்த வாரம் மீண்டும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கிறார்.

-விளம்பரம்-

Advertisement