குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் தனெக்கென ஒரு முத்திரையை பதித்தவர் புகழ். இவர் வெறும் ஐநூறு ரூபாயை வைத்துக்கொண்டு சென்னைக்கு வேலை தேடி வந்தார். முதலில் மெக்கானிக் கடையில் வேலை செய்த இவர் தொடர்ந்து பல கடையில் வேலை செய்து இருக்கிறார். பிறகு 2016 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான சிரிப்புடா என்ற நகைச்சுவை நிகழ்ச்சியில் முதன் முதலாக புகழ் கலந்திருந்தார். அதனை தொடர்ந்து இவர் பல நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று இருந்தாலும் இவரை மக்கள் மத்தியில் பிரபலம் ஆக்கியது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ஷோக்களில் இந்த நிகழ்ச்சி தான் டாப் லிஸ்ட்டில் இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பலரையும் மகிழ்வித்து தனெக்கென தனி ரசிகர் பட்டாளம் வைத்து இருக்கிறார் புகழ். மேலும், இந்த நிகழ்ச்சியின் மூலம் தான் இவருக்கு பல பட வாய்ப்புகள் குவிந்தது. இவர் சபாபதி என்ற படத்தின் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து இவர் அஸ்வின் நடிப்பில் வெளிவந்த என்ன சொல்ல போகிறாய் படத்தில் நடித்திருந்தார். தற்போது புகழ் பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார்.
புகழ் குறித்த தகவல் :
இறுதியாக அஜித்தின் வலிமை, அருண் விஜயின் யானை, சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் போன்ற பல படங்களில் புகழ் நடித்து இருந்தார் புகழ். தற்போது இவர் பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் காமெடியனாக நடித்த வருகிறார். அது மட்டும் இல்லாமல் இவர் ஹீரோவாகவும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் புகழ் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் ஏஜென்ட் கண்ணாயிரம். இந்த படத்தில் சந்தானம் ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்த படம் நல்ல வசூல் செய்திருந்தது.
புகழ் நடித்த படம்:
இதனை அடுத்து தற்போது கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியாகி இருக்கும் 16 ஆகஸ்ட் 1947 என்ற படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் புகழ் நடித்திருக்கிறார். இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்த நிலையில் புகழ் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர் கூறியிருந்தது, 16 ஆகஸ்ட் 1947 படத்தில் ஒரு சிறப்பான கதாபாத்திரத்தை இயக்குனர் எனக்கு தந்திருந்தார். அந்த கதாபாத்திரத்தின் மூலம் எனக்கு பல பேரிடம் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றது. கௌதம் கார்த்திக் எனக்கு ஒரு நல்ல குடும்ப நண்பராக அமைந்தது இறைவன் கொடுத்த வரம் ஆகத்தான் பார்க்கிறேன்.
புகழ் அளித்த பேட்டி:
மக்களுடைய மகிழ்ச்சி தான் என்னுடைய பிரதான நோக்கம். ரத்தத்தை பார்த்தால் மக்கள் கைதட்டும் சத்தத்தை ரசிக்க முடியாது. ஆகவே, குழந்தைகள் முதல் பெரியோர்கள் என அனைவரும் என்னை ரசிக்கின்ற வகையில் படங்களில் நடிக்கிறேன். சென்னைக்கு வந்த ஆரம்பத்தில் நான் நிறைய கஷ்டப்பட்டு இருக்கிறேன். வெல்டிங் கடையில் எல்லாம் வேலை செய்து சாப்பாட்டுக்கெல்லாம் ரொம்ப கஷ்டப்பட்டு இருந்தேன். ஆனால், தற்போது மக்கள் என் மீது செலுத்தும் அன்புக்காக எதையும் செய்யலாம் என்று தோன்றுகிறது.
சினிமா பயணம் குறித்து சொன்னது:
நான் தற்போது இந்த நிலைமையில் இருப்பதற்கு முக்கிய காரணம் வடிவேலு பாலாஜி அண்ணன் தான். அவர் நம்மோடு இல்லை என்றாலும் மக்கள் மனதில் எப்போதும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். எனக்குள் அவர் எப்போதும் இருக்கிறார். மேலும், சூர்யா சார் மிகவும் அன்பான மனிதர். குடும்பத்தோடு நேரம் செலவிட வேண்டும் என்ற ஆலோசனையை எனக்கு அவர் வழங்குவார். மனைவிக்காக வாழ வேண்டும் என்று கூறினார். இப்படி ஒரு மனிதரா! என்று ஆச்சரியப்பட்டு பார்த்தேன். என் நடிப்பின் மீது எதிர்மறையான விமர்சனங்கள் வந்தாலும் அனைத்தையும் ஏற்றுக் கொண்டு சரி செய்து முயற்சிப்பேன். மக்களை மகிழ்விக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கம். அதை நான் இறுதிவரை செய்வேன் என்று கூறியிருக்கிறார்.