இரண்டாம் மனைவிக்கு பிறந்த குழந்தையின் முதல் பிறந்தநாள் – சசிகலைவை நேரில் சந்தித்து ஆசி பெற்று CWC பிரபலம். யார் தெரியுமா ?

0
384
saisakthi
- Advertisement -

பிரபல சின்னத்திரை நடிகரும் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் முத்தாக சீஸனின் கோமாளியாக பங்கேற்ற சாய் சக்தி தனது குழந்தையின் பிறந்தநாளை முன்னிட்டு சசிகலாவை சந்தித்து இருக்கிறார். சீரியல் நடிகரான சாய்சக்தி ஒரு சில சீரியல்களில் நடித்துள்ளார் ஆனால் இடையில் இவருக்கு எந்த விதமான வாய்ப்புகளும் வரவில்லை என்றும், இதனால் மனமுடைந்த தான் தற்கொலைக்கு முயன்றதாகவும் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். மேலும், தனக்கு யாராவது வாய்ப்பு கொடுங்கள் என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டிருந்தார்.

-விளம்பரம்-
saisakthi

அதே போல கொரோனா முதல் அலையின் போது ஏற்பட்ட முடக்கத்தால் தான் பட்ட கஷ்டத்தை பேசிய சாய் சக்தி ‘சீரியல் ஷூட்டிங் தொடங்கிட்டாலும், என்னை மாதிரி சைடு கேரக்டர்களையெல்லாம் இப்போதைக்கு கூப்பிட வாய்ப்பே இல்லை. ரியாலிட்டி ஷோ ஷூட்டிங்லயும் இதே கட்டுப்பாடுதான். ஈவென்ட் போய் மூணு மாசமாச்சு. நிறைய ஈவென்ட் கேன்சலாகிடுச்சு.இப்போதைக்கு எனக்குத் தெரிஞ்ச ஒரே தீர்வு செலவைக் குறைக்கணும். குறைக்கத் தொடங்கிட்டேன்.

இதையும் பாருங்க : தமிழர்க்கு பெருமை சேர்த்த மாபெரும் போராளியின் பெயரை என் மகனுக்கு சூட்டியது பெருமை – சிறு வயதிலேயே சிபி ராஜூக்கு பெருமை சேர்த்த மகன்.

- Advertisement -

கொரோனாவால் ஏற்பட்ட கஷ்டம் :

கையில கொஞ்சம் இருக்கிற காசை எண்ணி எண்ணித்தான் செலவு செய்றேன். சாப்பாட்டுக்கு ரேஷன்ல தர்ற அரிசியை வாங்கிப் பொங்கச் சொல்லிட்டேன். இப்ப பழகிட்டா, நாளைக்கு கையில காசு வந்தாக்கூட செலவழிக்கத் தோணாதில்லையா என்று புலம்பி இருந்தார். இதைத் தொடர்ந்து தான் இவருக்கு கொக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு பெறும் வாய்ப்பும் கிடைத்தது.இந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு நடிகர் சாய் சக்தி இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.

லாக் டவுனில் நடைபெற்ற இரண்டாம் திருமணம் :

மீஞ்சூரைச் சேர்ந்த ஃபத்துல் ஃபாத்திமாவுக்கும் திருமணம் நடைபெற்றது. மணமகள் ஃபாத்திமா சாய்சக்தியின் உறவுக்காரப் பெண் என்கிறார்கள். ஃபாத்திமாவின் வீட்டில் வைத்து எளிமையான முறையில் நடந்தது. இந்தத் திருமண நிகழ்ச்சியில் இரு தரப்புக் குடும்ப உறவுகளுடன் சாய்சக்திக்கு நெருக்கமாம். ஏற்கனவே தனது திருமணம் குறித்து சாய்சக்தி இடம் கேட்டபோது அவர் கூறியது, நான் விவாகரத்து பெற்று இரண்டு வருடம் ஆகிவிட்டது.

-விளம்பரம்-

திருமணம் குறித்து சாய் சக்தி :

எனக்கு தனிமை மிகவும் மன அழுத்தத்தைத் தருகிறது. அதனால் வீட்டில் எனக்கு இன்னொரு வாழ்க்கையை ஏற்பாடு செய்ய முயற்சி செய்துள்ளார்கள்.மும்பையில் இருக்கிற என்னுடைய சொந்தகார பெண் ஒருத்தரோடு தான் எனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இருவீட்டாரின் சம்மதத்துடன் தான் இந்த திருமணம் நடக்கிறது. மேலும், திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்க சமயத்தில் தான் இந்த கொரோனா வந்துவிட்டது.

மகளின் முதல் பிறந்தநாள் :

கொரோனா முடிந்ததும் கல்யாணம் வைத்துக் கொள்ளலாம் என்று நாங்கள் முடிவு செய்து இருந்தோம் என்று கூறி இருந்தார். பின் அவர் ஆசைபட்டபடியே அவர் திருமணம் நடைபெற்றது. இப்படி ஒரு நிலையில் கடந்த ஜூன் மாதம் சாய் சக்திக்கு பெண் குழந்தை பிறந்து இருந்தது. தனது மகளின் முதல் பிறந்தநாளை முன்னிட்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தலைவியான சசிகலாவை நேரில் சந்தித்து ஆசிபெற்று இருக்கிறார்’

Advertisement