‘தம்பி ஏன் இப்படி தடவுற’ – அசல் கோளார் குறித்து கொதித்து பேசிய கூல் சுரேஷ்.

0
253
- Advertisement -

தம்பி நீ ஏன் அப்படி தடவுற? கோளாறு நீ உண்மையிலே கோளாறு தான் என்று பிக் பாஸ் அசலை கூல் சுரேஷ் வறுத்தெடுத்து இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அனைவரும் எதிர்பார்த்த பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி மூன்றாவது வாரத்தின் இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஜிபி முத்து, அசீம், அசல், ராபர்ட், ராமசாமி, ஏடிகே, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரக்சிதா, மணிகண்டன், மெட்டி ஒலி சாந்தி, விக்ரமன், குயின்ஸி மற்றும் நிவாஷினி, சிவின் கணேசன் என 20 பேர் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

இந்த முறை நிகழ்ச்சியை ஒரே நேரத்தில் டிவியிலும், ஓடிடியிலும் ஒளிபரப்பாகி வருகிறது. பின் முதல் வாரத்திலேயே வைல்ட் கார்ட் எண்ட்ரியாக மைனா நந்தினி வந்து இருக்கிறார். இந்த முறை நிகழ்ச்சியை விறுவிறுப்பாக கொண்டு செல்ல பல மாற்றங்களை பிக் பாஸ் கொண்டு வந்து இருக்கிறது. இதனால் போட்டியாளர்கள் ஓவ்வொருவரும் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். மேலும், இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சியமில்லாத பல போட்டியாளர்கள் கலந்துகொண்டு இருக்கின்றனர்.

- Advertisement -

அசல் குறித்த தகவல்:

அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டிருப்பவர் அசல் கொலார். இவர் ‘ஜோர்த்தாலே’ என்ற பாடல் மூலம் பட்டித்தொட்டியெங்கும் பிரபலமானார். இதனைத் தொடர்ந்து சந்தோஷ் நாராயணன், யுவன் சங்கர் ராஜா ஆகியோரின் இசையிலும் பாடல்களை அசல் எழுதி இருக்கிறார். அதன் பின் இவர் சந்தோஷ் நாராயாணன் இசையில் குலுகுலு, மஹான் படங்களிலும், யுவன் இசையில் காஃபி வித் காதல் படத்திலும் பாடல்கள் எழுதி இருக்கிறார். அதேபோல், ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான பேச்சுலர் படத்திலும் பாடலை எழுதி இருக்கிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அசல்:

தற்போது இவர் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார். இவர் இந்த நிகழ்ச்சி ஆரம்பத்தில் இருந்தே பெண்களிடம் வழிவது, திமிராக பேசுவது என்று இருக்கிறார். அதிலும் நிகழ்ச்சி தொடங்கிய இரண்டாவது நாளிலேயே ஆயிஷாவிடம் வாடா, போடா என்று பேச தேவையில்லை என்றெல்லாம் வம்பு இழுத்து இருந்தார். ஆனால், குயின்சி, நிவாஷினியிடம் இவர் வழிந்து வழிந்து பேசி இருந்தார். குயின்சி மீது ஆரம்பத்தில் இருந்தே அசல் கொலாருக்கு ஒரு கண் இருக்கிறது.

-விளம்பரம்-

அசல் செய்த செயல்:

மேலும், குயின்சி கையை மாவு பிசைவது போல அசல் பிசைந்து கொண்டு இருந்தார். இதை பார்த்த நெட்டிசன்கள் அசலை கண்டித்து பதிவு போட்டு இருந்தார்கள். பின் குயின்சி செட் ஆகவில்லை என்று நினைத்து சிங்கப்பூர் மாடல் அழகி நிவாசினிடம் கடலை போட ஆரம்பித்தார் அசல். அதுமட்டுமில்லாமல் நிவாஸினியிடம் நீச்சல் குளம் அருகில் படுத்து கொண்டும், அவர் மடியில் உட்கார்ந்தும் இருந்தார். அதே போல மைனாவின் கையை பிடித்து தடவியது, மகேஸ்வரியின் காலை நொண்டியது என்று தன் தடவல் வேலையை தொடர்ந்து செய்து வருகிறார் அசல். இப்படி இவர் பெண்களிடம் அத்து மீறி நடந்துகொள்வது பலரை முகம் சுழிக்க வைத்து வருகிறது.

asal

வறுத்து எடுத்த கூல் சுரேஷ்:

இதனால் இவரை ரெட் கார்ட் கொடுத்து அனுப்ப வேண்டும் என்று பலர் கூறி வருகின்றனர். மேலும், இந்த வார நாமினேஷனில் குறைந்த வாக்குகள் அசல் தான் பெற்று இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பிக் பாஸ் அசலை குறித்து கூல் சுரேஷ் வறுத்தெடுத்து இருக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதில் அவர், தம்பி ஏன் அப்படி தடவுற? தடவிக் கொண்டே இருப்பியா? தயவு செய்து அப்படி தடவாதே. எல்லாரும் பார்க்கிற நிகழ்ச்சி. நான் பொதுவாக தான் பேசுகிறேன். கோளாறு நீ உண்மையிலே கோளாறு தான். தயவு செய்து அப்படி தடவாத. நிறைய பேர் கல்யாணம் ஆகாதவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் என்ன செய்வார்கள்? என்று கூறியிருக்கிறார்.

Advertisement