விஜய்யால் முடியாது என்று நினைத்தேன்..ஆனால் அந்த விஷயம் கடவுள் கொடுத்த வரம்

0
794
Actor vijay

நடிகர் விஜய்க்கு அவரது நடிப்பிற்கு இருக்கும் ரசிகர் இணையாக அவரின் நடனத்திற்கு ரசிகர்கள் உள்ளனர்.அந்த அளவிற்கு நடனத்தை சர்வ சாதாரணமாக ஆடிவிடுவர் .40 வயதை கடந்த பின்னரும் இன்றும் நடனத்தை ஏதோ நடை பயிற்சி போல சுலபமாக ஆடிவிடுவார்.

brindha master

இவரது ஆட்டத்தை பார்த்து வியந்துள்ளதாக கூறியுள்ளார் பிரபல நடன இயக்குனர் பிருந்தா. தமிழ் சினிமாவில் 80களில் துவங்கி இன்றுவரை நடன இயக்குனராக இருந்து வருபவர்கள் சகோதிரிகள் பிருந்தா மற்றும் கலா.இவர்களில் பிருந்தா மாஸ்டர் 90களில் துவங்கி இன்றுவரை பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடன இயக்குணராக பணியாற்றியுள்ளார்.

நடன இயக்குனர் பிருந்தா விஜய் நடித்த மதுர,தெறி போன்ற படங்களில் நட இயக்குனராக பணியாற்றியவர். சமீபத்தில் தனது நடன வாழ்க்கை குறித்து பேட்டியலித்தார். அப்போது விஜய் பற்றி பேசுகையில் நடிகர் விஜய் ஆடுவதற்கு முன்பு இவர் போய் இங்கே ஆடப்போகிறார் என்று இருக்கும்.ஆனால் டேக் என்று வந்துவிட்டால் அவருக்கு எங்கிருந்து தான் உத்வேகம் வருகிறது என்றே தெரியாது. அந்த அளவிற்கு அவ்வளவு சிறப்பாக ஆடக்கூடியவர்.விஜய் நடனம் என்பது கடவுள் கொடுத்த வரம். அவருக்கு என்ன கடினமான நடன அசைவுகளை கொடுத்தாலும் தன்னால் முடியாது என்று ஒருபோதும் சொன்னதில்லை.