இதுவே அவர் வேற ஷூட்டிங் ஸ்பாட்ல இறந்து இருந்தா அவ்ளோ தான் – அஜித் செய்த உதவி குறித்து டான்ஸ் மாஸ்டர் உருக்கம்.

0
611
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் உச்சத்தில் இருக்கும் நட்சத்திரங்களில் தல அஜித்தும் ஒருவர். எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தன்னுடைய கடுமையான உழைப்பினாலும், விடாமுயற்சியினாலும் சினிமா உலகில் இந்த அளவிற்கு வளர்ந்து உள்ளார். இவர் இந்தியாவில் மட்டுமில்லாமல் உலக அளவிலும் ரசிகர்களை கொண்டவர். இவரை திரையுலகம் முதல் ரசிகர்கள் வரை அனைவரும் அல்டிமேட் ஸ்டார், தல என்று தான் அழைப்பார்கள். இவர் நடிப்பில் மட்டும் இல்லாமல் பல துறைகளில் சாதனை புரிந்து வருகிறார். தல அஜித் அவர்கள் சினிமா துறையில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர்.

-விளம்பரம்-

அஜித் நடிப்பில் வெளிவந்த நேர்கொண்டபார்வை ,விஸ்வாசம் ஆகிய படம் பட்டையை கிளப்பியது. ஆனால், அதை தொடர்ந்து வெளியான வலிமை திரைப்படம் பெரும் தோல்வியை தழுவியது. பொதுவாகவே தல அஜித் அவர்கள் எந்த ஒரு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளவில்லை. தன்னுடைய படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம், ப்ரமோஷன், ஆடியோ லாஞ்ச் என்று எதிலுமே அஜித் கலந்து கொள்ளவது இல்லை.

- Advertisement -

மேலும், தல அஜீத்தை வெளியில் பார்ப்பதே அபூர்வம் என்று சொல்லலாம். ஆனால், சினிமாவில் உள்ள பல பிரபலங்களிடம் அஜித் குறித்து கேட்டால் ஹாஹா ஓஹோ என்று புகழ்ந்து தள்ளிவிடுவார்கள். அதே போல நடிகர் அஜித் யாருக்கும் தெரியாமல் பல உதவிகளை செய்து வருகிறார் என்று பல பிரபலங்கள் கூறி வருகின்றனர். வசதி இல்லாத பலருக்கும் இலவச கண் அறுவை சிகிச்சைகளை செய்து இருக்கிறார் அஜித்.

இதனை ஜெய் சங்கரின் மகனும் மருத்துவருமான விஜய ஷங்கர் கூட கூறி இருக்கிறார். அதே போல சினிமாவில் உள்ள பலருக்கும் அஜித் பல உதவிகளை செய்து இருக்கிறார். ஆனால், தான் செய்யும் உதவிகளை வெளியில் சொல்ல கூடாது என்பதே அஜித்தின் முதல் கண்டிஷன். இப்படி ஒரு நிலையில் அஜித் குறித்தும் அவரது மனிதாபிமானம் குறித்தும் பேசி இருக்கிறார் டான்ஸ் மாஸ்டர் ராதிகா.

-விளம்பரம்-

தமிழில் ரஜினி கமல் காலகட்டத்தில் குரூப் டான்சராக இருந்து தற்போது ஒரு டான்ஸ் மாஸ்டராக இருப்பவர் ராதிகா இவர் தமிழ் சினிமாவில் உள்ள பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு டான்ஸ் மாஸ்டராக பணியாற்றி இருக்கிறார். இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ராதிகா அஜித் குறித்து பேசுவையில் வாலி படத்தின் போது நான் குரூப் டான்சராக ஆடி இருந்தேன் ஆனால் 10 வருடங்கள் கழித்தும் அதை நினைவில் வைத்துக் கொண்டு என்னிடம் பேசினார்.

அவரைப் போல ஒரு அக்கறையான மனிதரை பார்க்க முடியாது. அவர் நிறைய பேரை வாழவைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால், தான் செய்யும் உதவி யாருக்கும் தெரிய கூடாது என்று சத்தியம் வாங்கிக் கொள்வார். ஒரு ஒரு பாடலின் படப்பிடிப்பின் போது டான்ஸர் ஒருவர் எதிர்பாராத விதமாக இறந்து விட்டார். அப்போது ஒரு கூட பிறந்த சகோதரர் போல அஜித் சார் அவரது உடலை பிளைட் மூலம் புக் செய்து சென்னைக்கு அனுப்பி வைத்தார். இதுவே அவர் வேறு ஷூட்டிங் ஸ்பாட்டில் இறந்து இருந்தால் பாடிய எடுத்துவரவே மிகவும் கஷ்டப்பட்டு இருப்போம்.


Advertisement