கார் விபத்தில் சிக்கிய 4 பிரபல நடிகர்கள்.! மருத்துவமனையில் பரிதாபம்

0
426
Dharshan

சமீப காலமாக பிரபலங்கள் விபத்துகளில் சிக்கி பலியாகிய சம்பவம் தொடர்கதையாக இருந்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் பிரபல கன்னட நடிகர் தர்சன், தேவராஜ் மற்றும் அவரது மகன் பிரஜ்வல் ஆகியோர் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்துள்ளனர்.

darshan

கன்னடத்தில் பிரபல நடிகர்களான தர்சன், தேவராஜ் மற்றும் அவரது மகன் பிரஜ்வல் மற்றும் உடன் 4 பேர் இன்று அதிகாலை 3 மணியளவில் பெங்களூரில் இருந்து காரில் மைசூரிற்கு திரும்பினர். மைசூரில் உள்ள ரிங் ரோட்டில் சென்றுகொண்டிருந்த கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்கு உள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் காரில் சென்று கொண்டிருந்த அனைவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் அறிந்து விபத்து நேர்ந்த இடத்திற்கு சென்ற காவல் துறையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு அருகில் இருந்து மருத்துவமனையில் கொண்டு சேர்த்துள்ளனர்.

Darshan-Accident

இந்த விபத்தில் நடிகர் தர்ஷானுக்கு வலது கையில் எலும்பு முறிவும் நடிகர் பிரஜ்வலுக்கு கழுத்தில் பலத்த காயமும் ஏற்பட்டுள்ளது என்று மருத்துவ சிகிச்சையில் தெரியவந்துள்ளது. மற்ற அனைவருக்கும் லேசான காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.