சமூக வளைத்தளத்தில் தன்னை பின் தொடர சொன்ன வாணி போஜன்.. கழுவி ஊற்றிய ரசிகர்கள்..காரணம் இது தான்..

0
15085
vani-bhojan

சினிமாவில் நடித்து வரும் பல நடிகர்கள் எல்லாம் தொலைக்காட்சி தொடர்களில் இருந்தும்,விளம்பரங்களில் இருந்தும் தான் வந்தவர்கள். அந்த வகையில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அடியெடுத்து வைக்கிறார் நம்ம வாணி போஜன். சன் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் ஹிட் சீரியல்களில் “தெய்வமகள்” சீரியலும் ஒன்று. இந்த சீரியலில் “சத்யா” என்ற கதாபாத்திரத்தில் வாணி போஜன் நடித்து வந்தார். அதிலும்,ரசிகர்கள் சத்யா என்பதைவிட தாசில்தார் என்று தான் அவரை அதிகம் அழைப்பார்கள். இவர் முதலில் கிங்பிஷர் ஏர்லைன்ஸ்யில் தான் பணிபுரிந்தார். அதனைத் தொடர்ந்து வடிவமைப்பு விளம்பர வேலைகளையும் செய்து வந்துள்ளார். அதன் மூலமாகத்தான் சின்னத்திரையில் உள்ள தொடர்களில் நடிக்க ஆரம்பித்தார். அதன் பிறகு தெய்வமகள், லட்சுமி வந்தாச்சு போன்ற பல தொடர்களில் நடித்து உள்ளார். தெய்வமகள் சீரியல் மூலம் தான் வாணி போஜனுக்கு ஒரு ரசிகர் பட்டாளமே சேர்ந்தது என்று கூட சொல்லலாம்.

அந்த அளவிற்கு ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். மேலும், வாணி போஜன் தெய்வமகள் சீரியலுக்கு பிறகு எந்த ஒரு சீரியலிலும் நடிக்க வில்லை. இதனைத்தொடர்ந்து வாணி போஜன் அவர்கள் சினிமா திரையில் நடிக்க போகிறார் என்ற தகவல் சமூகவலைத்தளங்களில் வெளிவந்துள்ளது. இதனால் வாணி போஜன் ரசிகர்கள் பயங்கர குஷியில் மூழ்கினார்கள். இந்நிலையில் சிவகார்த்திகேயன், பிரியா பவானி,சந்தானம் ஆகியோரும் டிவியின் மூலம் தான் சினிமாத்துறையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தற்போது இவர்கள் சினிமாவில் பட்டைய கிளப்பி கொண்டு இருக்கின்றனர். தற்போது வாணி போஜனும் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு செல்கிறார். இதனைத்தொடர்ந்து நடிகை வாணி போஜன் அவர்கள் நடிகர் வைபவுக்கு ஜோடியாக ‘என்4’ என்ற படத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவலும் வெளிவந்துள்ளது. இந்த படத்தை நிதின் சத்தியா தயாரிக்க உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இதையும் பாருங்க : கோடிஸ்வரன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போகும் முதல் தமிழ் நடிகை.. யார் தெரியுமா..

- Advertisement -

இதனைத்தொடர்ந்து பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவர் கொண்டா தயாரிக்கும் முதல் படத்தில் கதாநாயகியாக நடிக்க வாணிபோஜன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். விஜய் தேவர் கொண்டா நடித்து சூப்பர் ஹிட்டான ‘பெல்லி சூப்புடு’ என்ற படத்தை இயக்கிய தருண் பாஸ்கர் தான் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளார். மேலும், இந்த படத்தை தமிழ்நாட்டைச் சேர்ந்த குறும் பட இயக்குனர் சமீர் இயக்க உள்ளார் என்ற தகவலும் வெளிவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து வாணி போஜன் அவர்கள் தற்போது “ஓ மை கடவுளே” என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அசோக்செல்வன், ரித்திகா சிங் இருவரும் ஹீரோ ஹீரோயினாக நடிக்கிறார்கள். மேலும், இந்த படம் குறித்த தகவலை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்கள். அதுமட்டுமில்லைங்க நம்ம வாணி போஜன் சமூக வலைத்தளங்களில் எப்பவுமே ஆக்டிவாக இருப்பார்.

அதோடு வாணி போஜன் தினமும் நடக்கும் நிகழ்வுகளை ஆன்லைனில் பதிவு செய்து கொண்டே இருப்பார். இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்துல மட்டும் அவருக்கு 6 லட்சத்துக்கும் மேலான பாலோவர்ஸ் உள்ளார்கள். மேலும், இவருடைய ரசிகர்கள் இவரை “சின்னத்திரை நயன்தாரா” என்று தான் அழைப்பார்கள். தற்போது வாணி போஜன் அவர்கள் ஹலோ ஆஃப்பில் தன்னுடைய போட்டோ,வீடியோ குறித்து பதிவிட்டுள்ளார். மேலும்,இவர் என்னை பாலோ செய்யனும்னா, ஹேலோ ஆஃப்க்கு வாங்க என்று கூறியிருந்தார். இந்நிலையில் இவருக்கு ஹலோ ஆஃப்பில் ஒரு லட்சத்துக்கும் மேலான ரசிகர்கள் பாலோ பண்ணறாங்க.ஆனால், வாணி போஜன் தன் ரசிகர்களுக்கு எந்த ஒரு பதிலையும் கூறவில்லை. இதனால் ரசிகர்கள் பயங்கர கடுப்பாகி வாணிபோஜனை திட்டி வருகிறார்கள். நீங்களே பாலோ பண்ணுங்க என்று சொல்லிட்டு எதுவே கண்டுக்காமல் இருந்தால் என்ன?அர்த்தம் என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement