கோடிஸ்வரன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போகும் முதல் தமிழ் நடிகை.. யார் தெரியுமா..

0
9188
kodeeswaran
- Advertisement -

தென்னிந்திய சினிமா திரை உலகில் 1980 முதல் 1990 ஆம் ஆண்டு காலகட்டங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ராதிகா சரத்குமார். இவர் சினிமா திரை உலகின் முன்னணி நடிகர் மற்றும் அரசியல்வாதியும் ஆன சரத்குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.ராதிகா அவர்கள் தமிழ் சினிமாவில் 80களில் இருந்து தொடங்கி இன்று வரை இடைவிடாமல் வெள்ளித்திரை, சின்னத்திரை என மாறி மாறி நடித்து வருகிறார். மேலும், சினிமா துறையில் தனக்கென ஒரு அடையாளத்தையும் உருவாக்கியவர். தமிழில் 1978ம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் உருவான ‘கிழக்கே போகும் ரயில்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமானார். அதன் பிறகு தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழி திரைப்படங்களில் நடித்து இந்திய அளவில் புகழ்பெற்ற நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.

-விளம்பரம்-
Image result for kodeeswaran tamil show

இதுவரை ராதிகா 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார். ராதிகா சரத்குமார் திரைப்பட நடிகை , தயாரிப்பாளர் என பல துறைகளில் பணியாற்றி வருகிறார்.தற்போது, ராதிகா அவர்கள் திரையுலகில் தாய் மற்றும் கவுரவ கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். இவர் வெள்ளித்திரையில் மட்டுமில்லாமல் சின்னத்திரையிலும் பிரபலமானவர்.ராதிகா அவர்கள் டிவி நாடகங்கள், படத் தயாரிப்பு, டிவி நிகழ்ச்சிகளில் நடுவர் என அனைத்திலும் பணியாற்றி வருகிறார். தொலைக்காட்சி என்றாலே அனைவருக்கும் மனதில் வருவது ஒன்றுதான் சித்தி சீரியல் தாங்க. சன் டிவி நிறுவனத்தில் சில ஆண்டுகளுக்கு முன்னால் ஒளிபரப்பான “சித்தி” சீரியல் மூலம் தமிழக மக்களிடையே அதிக வரவேற்பு பெற்றவர் ராதிகா சரத்குமார். தற்போது “சித்தி 2” சீரியல் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாக போகிறது என்ற தகவல் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும்,சித்தி 2ம் பாகத்திற்கான சில காட்சிகள் படமாக்கப்பட்டு வெளிவர உள்ளது என்ற தகவல் இணையங்களில் பரவியது.இதனால் ரசிகர்கள் அதிக ஆர்வமுடன் சீரியலை எதிர்நோக்கி உள்ளனர்.

இதையும் பாருங்க : 15 ஆண்டுகளுக்கு பின்னர் தனது கணவருடன் இணைந்த ரம்யா கிருஷ்ணன்..

- Advertisement -

இதோடு ராதிகா அவர்கள் திரைப்படங்கள், சீரியல் எல்லாம் தாண்டி தற்போது ஒரு புத்தம் புது நிகழ்ச்சியில் தொகுப்பாளராக அவதாரம் எடுத்து உள்ளார் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.அது கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகும் ஒரு கேம் ஷோவை தொகுத்து வழங்க உள்ளார் என்றும், இந்த நிகழ்ச்சிக்கான ப்ரீ- புரொடக்ஷன் வேலைகள் தற்போது தீவிரமாக நடந்து கொண்டு இருக்கின்றது என்று கூறி வருகின்றனர். மேலும், இந்த இந்த கேம் ஷோவை முதன்முதலாக ஒரு பெண் தொகுத்து வழங்கினார் என்ற தகவலும் வெளிவந்துள்ளது. அப்படி என்ன? கேம் ஷோ என்று பார்த்தால், அது கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகும் “கோடிஸ்வரி” நிகழ்ச்சி தாங்க. இந்த நிகழ்ச்சியில் முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் போட்டியாகும். இந்த நிகழ்ச்சி அக்டோபர் 28ஆம் தேதி முதல் இரவு 8 மணிக்கு கலர்ஸ் சேனலில் கேள்விகள் கேட்கப்படும்.

Image result for Radhika Sarathkumar Game Show

அவ்வாறு தினமும் கேட்கப்படும் கேள்விகளில் ஒரே ஒரு கேள்விக்கு கூட பதில் சொன்னால் போதும். இந்த போட்டியில் கலந்து கொள்ள வாய்ப்பு உள்ளது என்று அறிவித்துள்ளார்கள்.இது மட்டும் இல்லைங்க இந்த கோடிஸ்வரி நிகழ்ச்சி ஒரு ‘வினாடி- வினா’ கேம்ஷோ ஆகும். இந்த நிகழ்ச்சியின் பரிசு தொகை ‘ஒரு கோடி ரூபாய்’ என அறிவித்துள்ளார்கள். இந்த நிகழ்ச்சி முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் புதிய முறையில் உருவாக்கப் போகிறார்கள் என்ற தகவலும் வெளிவந்துள்ளது. இந்த நிகழ்ச்சி டிசம்பர் மாதம் முதல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என்று அறிவித்துள்ளார்கள். இந்த நிகழ்ச்சி பெண்களின் புத்திசாலிதனம், விழிப்புணர்வு ஆகியவற்றை உலகறிய செய்யும் நோக்கில் உருவாக்கப்பட்ட நிகழ்ச்சி என நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் தெரிவித்தனர்.

-விளம்பரம்-
Advertisement