அணியின் பிராண்ட் இமேஜை கெடுக்கற மாதிரி இருக்கு – ஜெயிலர் படத்திற்கு எதிராக Rcb தொடர்ந்த வழக்கு. காட்சியை நீக்க நீதிமன்றம் உத்தரவு

0
1202
Rcb
- Advertisement -

ரஜினி ஜெயிலர் படம் குறித்து எழுந்த சர்ச்சைக்கு நீதிமன்றம் கொடுத்து இருக்கும் உத்தரவு தான் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமாவில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக ஜொலித்து கொண்டு இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மாஸ் காட்டி இருக்கிறது. அந்த வகையில் தற்போது இவர் ஜெயிலர் படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தை நெல்சன் இயக்கி இருக்கிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது.

-விளம்பரம்-

இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து இருக்கிறார். படத்தின் ஒவ்வொரும் பாடலும் பட்டைய கிளப்பி இருக்கிறது. மேலும், இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்னன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, வசந்த் ரவி, தெலுங்கு நடிகர் சுனில், ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெரப், மோகன் லால், விநாயகம் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்து இருக்கிறார்கள். பல எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் கடந்த 10 ஆம் தேதி ஜெயிலர் திரைப்படம் வெளியாகி இருக்கிறது.

- Advertisement -

ஜெயிலர் படம்:

இந்த படத்திற்கு யூடுயூப் விமர்சகர்களும், பிரபலங்கள், ரசிகர்கள் என எல்லோருமே பாசிட்டிவான கமெண்ட்களை கொடுத்து வருகிறார்கள். இந்த படத்தின் மூலம் நெல்சன் மீண்டும் கம்பேக் கொடுத்து இருக்கிறார். இந்த படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் கனகச்சிதமாக இயக்குனர் நெல்சன் தேர்ந்தெடுத்து இருக்கிறார். இந்தப் படத்திற்காக நெல்சன் மெனக்கட்டிருப்பதை குறித்து பலருமே பாராட்டி இருந்தார்கள்.

படத்தின் வசூல்:

இந்த படத்தில் நடித்த ஒவ்வொரு நடிகர்களின் கதாபாத்திரமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. உலகம் முழுவதும் ரசிகர்கள் மத்தியில் ஜெயிலர் படம் கொண்டாடப்பட்டு வருகிறது.
அதோடு இந்த படத்தின் வெற்றிக்கு அனிருத் பாடல்களும் ஒரு முக்கிய காரணம். முதல் வாரத்தில் இந்த படம் 350 கோடியும், இரண்டாம் வாரத்தில் 275 கோடியும் வசூல் செய்து இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இதுவரை இந்த படம் 500 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

-விளம்பரம்-

ஜெயிலர் படம் குறித்த சர்ச்சை:

இந்த நிலையில் ஜெயிலர் படம் குறித்த சர்ச்சை தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, ஜெயிலர் படத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஐபிஎல் அணி பயன்படுத்தும் ஜெர்சியை படத்தில் ஒருவர் போட்டிருக்கிறார். படத்தில் அவர் பெண்களுக்கு எதிராக சில கருத்துக்களை பேசி இருக்கிறார். இதனால் கோபம் அடைந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஐபிஎல் அணியின் சார்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்கள்.

நீதிபதி உத்தரவு:

அதில், தங்கள் அணியின் பிராண்ட் இமேஜை கெடுக்கும் வகையில் ஜெயிலர் படம் இருப்பதாகவும், அந்த காட்சியை நீக்க வேண்டும் என்றும் கூறி இருக்கிறார்கள். பின் இந்த வழக்கை விசாரித்த டெல்லி நீதிபதி அவர்கள் இந்த காட்சியை செப்டம்பர் 1ஆம் தேதி முதல் நீக்கி திரையில் வெளியிட வேண்டும். அது மட்டும் இல்லாமல் தொலைக்காட்சி மற்றும் ஓடிடி தளங்களிலும் இதே நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது.

Advertisement