ரோஜாவின் கணவர் ஆர்.கே.செல்வமணிக்கு நான் பெய்லபல் பிடிவாரண்ட் – சென்னை நீதிமன்றம் அதிரடி உத்தரவு

0
428
- Advertisement -

ஜாமினில் கூட வெளிவர முடியாத அளவிற்கு ஆர்கே செல்வமணிக்கு எதிராக நீதிமன்றம் போட்டிருக்கும் உத்தரவு தான் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான இயக்குனராக திகழ்ந்தவர் ஆர்கே செல்வமணி. இவர் இயக்கத்தில் வெளிவந்திருந்த புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன் போன்ற படங்கள் எல்லாம் சூப்பர் சூப்பர் ஹிட் கொடுத்திருந்தது.

-விளம்பரம்-

இவர் திரை இயக்குனர் மட்டும் இல்லாமல் திரைப்பட தயாரிப்பாளரும் ஆவார். இதனிடையே இவர் தென்னிந்திய சினிமா உலகில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்த ரோஜாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன், மகள் இருக்கிறார்கள். ரோஜாவும் சமீப காலமாக படங்களில் நடிப்பதில் இருந்து விலகி இருக்கிறார். தற்போது ரோஜா அவர்கள் ஆந்திர மாநிலத்தில் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியில் எம்எல்ஏவாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

மேலும், செல்வமணி அவர்கள் பெப்சியின் தலைவராக இருநக்கிறார். பல பிரச்சனைகளின் போது சினிமா ஊழியர்களுக்கு பக்கம் நின்று இவர் ஆதரவாக பேசி இருக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் கூட ஆர்கே செல்வமணி அவர்கள் பெப்சி கூட கருத்தில் கொண்டு அஜித், விஜய் படத்தில் நடிக்க வேண்டும் என்றெல்லாம் பேசி இருந்தார். அதேபோல் தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தில் முக்கிய நபராக செல்வமணி திகழ்ந்து வருகிறார்.

பேட்டியில் செல்வமணி சொன்னது:

இதனிடையே ஆர் கே செல்வமணி அவர்கள் கடந்த 2016 ஆம் ஆண்டு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி ஒன்று அளித்திருந்தார். அப்போது அவர், பைனான்சியர் முகுந்த்சந்த் போத்ரா குறித்து சில சர்ச்சையான கருத்துக்களை பேசி இருக்கிறார். இதனால் முகுந்த்சந்த் போத்ரா அவர்கள் ஆர்கே செல்வமணி மீது சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கை தொடர்ந்திருந்தார். அவர் இறந்தும் விட்டார். இருந்தும், இந்த வழக்கை போத்ராவின் மகன் ககன் போத்ரா நடத்தி வருகிறார்.

-விளம்பரம்-

செல்வமணி மீது வழக்கு:

மேலும், இந்த வழக்கில் தொடர்ந்து ஆர் கே செல்வமணிக்கு சம்மன் அளிக்கப்பட்டு தான் வருகிறது. ஆனால், அவர் நேரில் ஆஜராகவில்லை. பின் இந்த வழக்கின் விசாரணை 15வது மாஜிஸ்திரேட்டு முன்பு இன்று விசாரணைக்கு வந்திருக்கிறது. விசாரணையின் போது ஆர் கே செல்வமணி சார்பில் எந்த ஒரு வழக்கறிஞரும் ஆஜராகவில்லை. அது மட்டும் இல்லாமல் ஆர் கே செல்வமணியும் நேரில் வந்து ஆஜராகவில்லை.

நீதிபதி உத்தரவு:

இதனால் நீதிபதி அவர்கள் ஆர் கே செல்வமணிக்கு எதிராக ஜாமினில் கூட வெளிவர முடியாதபடி பிடிவாரண்டை அதிரடியாக பிறப்பித்து உள்ளார். அது மட்டும் இல்லாமல் இந்த வழக்கின் மீது விசாரணை வருகிற செப்டம்பர் 22ஆம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டிருக்கிறார்கள். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது. இதற்கு ஆர் கே செல்வமணி தரப்பில் என்ன பதில் வரப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement