தனுஷ் நடிக்கும் அடுத்த படத்தின் பெயர் இதுவா..? விவரம் உள்ளே

0
1792
Actor Dhanush

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவுக்கு மிகவும் திறமையான நபராக கருதப்படுபவர்.இவர் திரைத்துறைக்கு வந்த போது இவரெல்லாம் நடிகரா என்று பலரும் கிண்டல் செய்தனர் ஆனால் இப்போது தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார் தனுஷ்.

Dhanush

இவர் நடிப்பையும் தாண்டி பாடல்களை எழுதுவது,பாடுவது போன்ற பல திறமைகளை பெற்றிருக்கிறார்.மேலும் இவர் ஒண்டர் பார் என்னும் தயாரிப்பு கம்பணியையும் நடத்தி வருகிறார் அந்த நிறுவத்தின் மூலம் எதிர் நீச்சல் காக்க முட்டை போன்ற பல வெற்றி படங்களை தயாரித்துள்ளார். மேலும் இவரது மாமா ரஜினிகாந்த் நடிக்கும் காலா படத்தையும் இவர் தான் தயாரித்து வருகிறார். சமீபத்தில் இவர் இயக்குனராகவும் ராஜ்கிரண் நடித்த பா.பாண்டி படத்தில் அவதாரமேடுத்தார். அந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது தனுஷ் தற்போது தேணான்டால் பிலிம்ஸ் தயாரிக்க உள்ள ஓரு படத்தை இயக்கவுள்ளார்.அந்த படத்திற்கு ருத்ரன் என்ற டைட்டிலை வைத்துள்ளார்கள் என்று தகவல்கள் வெளிவந்துள்ளது.இந்த தகவளை தெனாண்டால் பிலிம்ஸ் நிறுவனர் திருமதி ஹேமா ருக்மணி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவுசெய்துள்ளார்.மேலும் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் தனுஷ் நடிப்பார் என்று சில செய்திகளும் வந்துள்ளது.